சுக்கிர தோஷம் மற்றும் செல்வ வளம் பெறுக வழிபட வேண்டிய கோவில்:
ஜாதகத்தில் சுக்கிர தோஷம் நிவர்த்தியாகவும் செல்வ வளம் செழிக்கவும் வழிபட வேண்டிய கோவில் தான் பக்தஜனேஸ்வரர் கோவில்.
எங்கு உள்ளது:
இந்த திருக்கோவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநாவலூர் என்ற இடத்தில் உள்ளது.
நடை திறந்திருக்கும் நேரம்:
இக்கோவில் காலை ஆறு மணி முதல் பதினோரு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு ஏழு மணி வரையிலும் திறந்திருக்கும்.
சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:
இந்த கோவிலில் உள்ள சிவ பெருமான் திருநாவாலீஸ்வரர் என்றும் அம்பிகை மனோன்மணியம்பிகை என்றும் சிறப்புற அழைக்கப்படுகின்றனர்.
தல சிறப்பு:
இந்த கோவிலில் சுக்கிரன் வழிபட்ட .தலம் ஆகும். சுந்தரர் பிறந்த ஊர் ஆகும். மேலும் இந்த ஊரில் தான் சண்டீகேஸ்வரர் தனது பதவியினை பெற்ற தலம் ஆகும்.
ஸ்தல வரலாறு:
முன்னொரு காலத்தில் இந்த ஊரில் சிவப்பிரியர் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாடு மேய்த்து கொண்டு இருந்தனர். சிவப்பிரருக்கு சிவபெருமான் என்றால் அளவுகடந்த பக்தி . அவர் தினமும் மாடு மேய்க்கும் போது ஒரு அடர்ந்த காட்டில் ஒரு இடத்தில் மாட்டில் இருந்து பால் கறந்து அந்த பாலினை கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்வதை வழக்கமாய் கொண்டிருந்தார். இதனால் கன்று குட்டிகளுக்கு பால் இல்லாமல் இருந்தது. சிவபிரியனிடம் சேர்ந்து மாடு மேய்க்கும் சிலர் அவன் தந்தையிடம் கூறிவிட்டனர்.
ஆனால் சிவப்பிரியனின் தந்தை அவர் கூறியதை மறுத்து தான் பிள்ளை அவ்வாறு செய்ய மாட்டான் என்று கூறினார். சிவப்பிரியனின் தந்தைக்கு சந்தேகம் வரவே உடனே சிவபிரியனை பின்தொடர்ந்தார். சிவப்பிரியனும் அந்த இடத்தில் வந்து வழக்கம்போல் மாட்டில் பால் கறந்து சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்ய தயாரானார். அப்போது அவன் தந்தை அதனை கண்டு சிவ பிரியனை அடித்து கறந்து வைத்த பாலினை காலால் எட்டி உடைத்தார். அதனை கண்டு சிவப்பிரியர் என் சிவபெருமானுக்கு வைத்த பாலினை எட்டி உதைத்தாய் என்று கோபமுற்று பக்கத்தில் இருந்த அரிவாளை கொண்டு எறிந்தார். அது அவர் தந்தையின் காலை வெட்டி கால் துண்டானது.
பிறகு சிவப்பிரியனின் பக்தியை கண்ட சிவ பெருமான் அவருக்கு காட்சி அளித்து சண்டீகேஸ்வரர் பதவியை கொடுத்தார்.
சுக்கிரன் வழிபட்ட லிங்கம்:
ஒருமுறை சுக்கிர பகவான் காசிக்கு சென்று லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து அதனை வணங்கி வந்தார்.அவரது உண்மையான பக்தியை கண்ட சிவ பெருமான் அவரது பக்தியில் விழுந்து அவர் முன் தோன்றி சஞ்சீவினி மந்திரத்தை சொல்லி கொடுத்தார். சஞ்சீவினி மந்திரம் என்பது இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் ஒரு மந்திரம் ஆகும். அதனை சுக்கிர பகவானுக்கு சொல்லி கொடுத்தார். இதனை அறிந்த அரக்கர்கள் சுக்கிரனை அழைத்து சுக்கிரனை தங்களது குருவாக நியமித்தனர். தேவர்களுக்கும் அரக்கர்களுக்கு பகை மற்றும் சண்டை ஆரம்பமானது. தேவர்கள் அரக்கர்களை அழித்தனர். அழித்த அரக்கர்கள் அனைவருக்கும் சுக்கிரன் உயிர் கொடுத்தார்.
இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்த தேவர்கள் சிவ பெருமானிடம் முறையிட்டனர். சிவ பெருமான் சுக்கிரனை அழைத்து அவனை விழுங்கி விட்டார். சிவ பெருமானின் வயிற்றில் சில காலம் தவம் செய்தார். பிறகு சுக்கிர பகவானை வெளியில் அழைத்து அவருக்கு நவகிரஹத்தில் ஒரு பதவியை கொடுத்தது இந்த பூலோகத்தில் மக்கள் செய்யும் பாவ புண்ணியத்திற்கு தகுந்தாற்போல் செல்வம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

கோவில் சிறப்பு:
இந்த கோவிலில் சிவ பெருமானிடம் முறையிட்டால் செல்வ செழிப்பு வரும் என்பது ஐதீகம். மேலும் சுக்கிர தோஷம் நீங்கும்.
கோவில் அமைப்பு:
இக்கோவிலில் சிவ பெருமான் , நந்திகேஸ்வரர் , சூரியன், துர்க்கை நவகிரகம் ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.
ஸ்தல விருக்ஷம் மற்றும் தீர்த்தம்:
இந்த கோவிலில் உள்ள ஸ்தல விருக்ஷம் நாவல் மரம் திருக்குள தீர்த்தம் கோமுகி தீர்த்தம்
விஷேஷ தினங்கள்:
இக்கோவிலில் பிரதோஷம், திருக்கார்த்திகை தீபம், மாசி மாகம் முதலியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
வேண்டுதல்கள்:
இந்த கோவிலில் செல்வம் செழிக்க மற்றும் சுக்கிர தோஷம் நீங்க பக்தர்கள் அதிகம் வருகின்றனர். மேலும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் மூன்று மஞ்சள் மற்றும் மூன்று எலுமிச்சைப்பழம் கொண்டு தீபம் ஏற்றி தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.
No comments:
Post a Comment