பிரதோஷ விரதமும் அதன் பயன்களும்

பிரதோஷ விரதம் இருப்பதால் நடக்கும் நன்மை:

       பிரதோஷ விரதம் என்பது பிரதோஷ நாள் அன்று காலை முதல் மாலை வரை இருக்கும் விரதம் ஆகும். மேலும் இந்த விரதத்தின் போது மனதில் தூய்மை பெற்றிட வேண்டும். நல்லதையே நினைக்க வேண்டும்.







Image result for lingam and nandi
பிரதோஷம் :

      
           பிரதோஷம் என்பது பிற தோஷங்கள், இன்னல்கள் யாவும் நிவர்த்தி என்பது பொருள். பிரதோஷ விரதம் என்பது சிவ பெருமானின் அருள் பூரணமாக கிட்டிட இருக்க வேண்டிய ஒரு முக்கியமான விரதம் ஆகும்.

எப்படி விரதம் இருப்பது:

        பிரதோஷ நாள் அன்று காலை தலைக்கு குளித்து விட்டு சிவ பெருமானை வணங்கி விட்டு கோவிலுக்கு செல்ல வேண்டும். பிறகு காலை முதல் மாலை வரை ஏதும் சாப்பிடாமல் இருந்து மாலை குளித்து விட்டு கோவிலுக்கு சென்று  பிரதோஷ வேளையில் சிவ பெருமானை தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு வந்ததும் எதாவது உண்ண வேண்டும். முதலில் நீர் ஆகாரம் பருகிய பின்னரே சாப்பிட வேண்டும்.

ஏற்படும்நன்மை:

          பிரதோஷ விரதம் இருப்பதால் கடன் தொல்லை, வியாதிகள் விலகும், மனக்குழப்பம் தீரும்.



Image result for lingam images


எப்போது ஆரம்பிப்பது :

           பிரதோஷ விரதம் சித்திரை, வைகாசி, கார்த்திகை, ஐப்பசி ஆகி எதாவது ஒரு மாதத்தில் வரும் சனி பிரதோஷம் அன்று தான் ஆரம்பிக்க வேண்டும்.

செய்ய கூடாதது:

           பிரதோஷ காலத்தில் சாப்பிட கூடாது, எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது, விஷ்ணு தரிசனம் செய்ய கூடாது 

No comments:

Post a Comment