திருமண தடை நீங்க வழிபட வேண்டிய கோவில் ::
திருமண தடை மற்றும் திருமண வாழ்வில் சிறந்து விளங்க வழிபட வேண்டிய கோவில் தான் சொக்கநாதீஸ்வரர் திருக்கோவில்.
எங்கு உள்ளது:
இந்த திருக்கோவில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மனந்தவிழ்ந்தபுத்தூர் என்ற உள்ளது.
எப்படி செல்வது:
இந்த திருக்கோவிலுக்கு பண்ருட்டியில் இருந்து நேரடியாகவே பேருந்துகள் உள்ளது. பண்ருட்டி பேருந்தில் ஏறி மனந்தவிழ்ந்தபுத்தூர் என்ற ஊரில் உள்ளது.
நடை திறக்கும் நேரம்:
இந்த திருக்கோவில் காலை ஆறு மணி முதல் பதினோரு மணி வரையிலும் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.
சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:
இத்திருக்கோவிலில் உள்ள சிவ பெருமான் சொக்கநாதீஸ்வரர் என்றும் அம்பிகை மீனாட்சி என்ற பெயருடனும் அழைக்கப்படுகின்றனர்.
கோவில் சிறப்பு:
இந்த கோவிலில் அதிகமாக திருமணத்தடை நீங்கவும், திருமண வாழ்வில் சிறந்து விளங்கவும் பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.
ஸ்தல வரலாறு:
முன்னொரு காலத்தில் சடைய நாயனார் , இசைஞாணியார் இவர்களின் மகன் தான் சுந்தரர். அவருக்கு சடைய நாயனார் வைத்த பெயர் நம்பி ஆரூரர். அவர் சிறு வயதில் இருந்த அழகை கண்டு நரசிம்ம நாயனார் என்ற ஒரு மன்னன் சுந்தரரை தத்தெடுத்து வளர்த்தார். சுந்தரர் வளர்ந்து அவரின் பதினாறாவது வயதில் அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணி சுந்தரரின் பெற்றோராகிய சடைய நாயனார், இசைஞானியார் அவர்களிடம் அனுமதி பெற்று திருமணம் நிகழ்த்த ஏற்பாடு செய்தார் அரசர்.
எங்கெங்கோ பெண் தேடி கடைசியில் இந்த புத்தூர் என்ற இந்த ஊரில் சங்கடவி என்ற ஒரு பெண்ணினை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்தார் அரசர். சம்பந்தரும் அதற்க்கு சம்மதித்தார். பிறகு அரசர் அகமகிழ்ந்து திருமணம் நடத்த ஊரெங்கிலும் பலத்த ஏற்பாடுகளை செய்தார். யானை மேல் சுந்தரர் ஏறி வலம் வர, முன்னே குதிரை மற்றும் ஆள் அம்பு போன்ற பல ஏற்பாடுகளை செய்து ஊரே விழாக்கோலமாக இருந்தது.
அரசர் , சுந்தரர் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சுந்தரர் யானை மீது அமர்ந்து வளம் வரும் போது ஒரு வயதானவர் சுந்தரர் திருமணத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று ஊரறிய கூறினார். சொல்லிக்கொண்டே சுந்தரரை நெருங்கினார். பிறகு அனைவரும் செய்வதறியாது நின்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த முதியவரோ நீயும் உன் பரம்பரையும் எனக்கே சொந்தம் அப்படி இருக்கும் போது நீ என்னைக் கேட்காமல் எப்படி இந்த திருமணத்திற்கு ஒப்பு கொண்டாய் என்று கூறினார்.
திருமணத்தில் இருந்த சுந்தரரோ ஏய் முதியவரே உனக்கு என்ன பைத்தியமா பிடித்து விட்டது. நான் உனக்கு அடிமை என்பதற்கு என்ன ஆதாரம் என்று கூறினார். அதற்க்கு அந்த முதியவர் ஒரு ஓலை சுவடியை காட்டி உன் தாத்தாவின் அப்பா எனக்கு எழுதி கொடுத்த இந்த ஓலையை காட்டினார். அதை சுந்தரர் படிக்காமல் கிழித்து தீயில் இட்டார். அவருடைய ஓலையை சுந்தரர் அக்கினியில் போட்டதால் மிகுந்த கோபத்தில் இருந்த முதியவர் நீ வழக்காடு மன்றத்திற்கு வா என்று கூறிவிட்டு சென்றார்.
முதியவர் கூறிய வழக்காடு மன்றம் என்பது திருவெண்ணைநல்லூரில் உள்ளது. அங்கு தான் வர சொல்லிவிட்டு அவர் கிளம்பி விட்டார். அதற்க்கு சுந்தரர் அப்படி என் மேல் ஒரு வழக்கு இருந்தால் இந்த வழக்கினை முடித்த பின்னர் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார்.பிறகு திருமணம் நின்று போனது. இதனால் மிகவும் மனமுடைந்த பெண் சிவ பெருமானிடம் முறையிட்டார். பிறகு சிவ பெருமான் உன் சொந்த ஊரான புத்தூர் ஊரிற்கு சென்று தவம் செய்யுமாறும் கூறினார்.
அப்படி அவர் தவம் மேற்கொண்டு சிவ பெருமானின் திருவடிகளை அடைந்தார். பிறகு சிவ பெருமானின் கருணையால் பறவை நாச்சியாராகவும் , சங்கிலி நாச்சியாராகவும் பிறந்து சுந்தரரையே மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவில் சிறப்பு:
இங்குள்ள சிவ பெருமான் சுயம்பு மூர்த்தியாக அருளிபாலிப்பது மிகவும் சிறப்பு. மேலும் இந்த திருத்தலம் அகத்தியர் வழிபட்ட திருத்தலம்.
கோவில் அமைப்பு:
இங்குள்ள பிராகாரத்தில் லிங்கோத்பவர் , பிரம்மா , துர்க்கை ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். மேலும் இங்கு பைரவரும் , சூரியனும் நேர் கோட்டில் அமைந்து இருக்கின்றனர்.
விஷேஷ தினங்கள்:
பிரதோஷம், மாசி மகம் மற்றும் சோமவார பூஜை ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
வேண்டுதல்கள்:
இந்த கோவிலில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பின்பு ஸ்வாமிக்கும் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து அபிஷேகம் செய்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.
அருகில் உள்ள கோவில்கள்:
அருள்மிகு பச்சைவாழி அம்மன் திருக்கோவில் உள்ளது.
No comments:
Post a Comment