குழந்தை பாக்கியம் பெற வழிபட வேண்டிய கோவில் :
குழந்தைபாக்கியம் பெற்றிடவும் , குழந்தைகளின் அறிவு கூர்மைக்கும் வணங்க வேண்டிய கோவில் தான் கரி வரதராஜ பெருமாள் கோவில்.
எங்கு உள்ளது :
இத்திருக்கோவில் சென்னையில் உள்ள நெற்குன்றம் என்ற ஊரில் அமைந்துள்ளது.
எப்படி செல்வது:
இந்த கோவிலுக்கு பூந்தமல்லி செல்லும் பேருந்தில் ஏறி நெற்குன்றம் ரேஷன் கடை நிறுத்தத்தில் இறங்கி சுமார் நூறு அடிக்குள் நடந்து சென்றால் ஏரிக்கரை நடுவே இந்த கோவில் அமைந்துள்ளது.
நடை திறந்திருக்கும் நேரம்:
இந்த கோவில் காலை ஏழு முப்பது முதல் பதினோரு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரை திறந்திருக்கும்.
சுவாமி பெயர்:
இந்த கோவிலில் உள்ள பெருமாள் கரி வரதராஜ பெருமாள் என்ற பெயர் அழைக்கப்படுகிறார்.
ஸ்தல வரலாறு:
முன்னொரு காலத்தில் இந்த கோவிலில் ஒரு கரி எனப்படும் ஒரு யானை ஒன்று தினமும் இந்த பெருமாளுக்கு ஒரு மலரினை கொண்டிருந்தது. ஒரு நாள் அந்த யானை தணண்ணீர் குடிக்க இங்குள்ள குளத்திற்கு வந்தபோது அங்கிருந்த முதலை ஒன்று அந்த யானையை பிடித்தது. பிறகு யானை அலற பெருமாள் அந்த யானையை காப்பாற்றினார் என்பது வரலாறு.
பெருமாள் அமைப்பு:
இங்குள்ள பெருமாள் சுமார் ஐந்தடி உயரம் கொண்டவர். பிறகு இடுப்பிற்கு கீழே சிம்ம முகம் கொண்ட அமைப்பு உள்ளது. பிறகு எல்லா பெருமாளின் இடது மார்பில் ஸ்ரீ தேவி உள்ளது போன்ற அமைப்பு. எல்லா பெருமாளுக்கும் செய்வது போலவே இந்த பெருமாளுக்கும் தைலக்காப்பு சாற்றுகின்றனர்.
மூலவருக்கு உற்சவருக்கு வித்யாசம் ஒன்று உள்ளது. இங்குள்ள உற்சவர் ஒரு கையில் கதை வைத்து கொண்டு இருக்கின்றார்.
அதிசய ஆஞ்சநேயர்:
சனி பகவானின் திருக்கண் பக்தர்கள் மீது விழக்கூடாது என்பதற்காக அனுமன் ஒரு காலினை மடித்து ஒரு தலையினை சற்று அசைத்தட்டுவாறு காணப்படுகிறார்.
குழந்தை வரம்:
இங்கு சந்தான கிருஷ்ணர் சன்னதி உள்ளது. இங்குள்ள சந்தான கிருஷ்ணனை வழிபட்டால் விரைவில் குழந்தை பெரு கிட்டும் என்பது ஐதீகம்.
கோவில் அமைப்பு:
இந்த கோவில் விநாயகர், சந்தான விநாயகர், துர்க்கை, வராத ஆஞ்சநேயர், சனி பகவான் ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காணப்படுகின்றனர்.
வேண்டுதல்கள்:
இந்த கோவிலில் குழந்தை பேரு வேண்டி பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய உடன் திருமாலுக்கு திருமஞ்சனம் செய்தும், அர்ச்சனை செய்தும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
சிறப்பு தினங்கள்:
இந்த கோவிலில் ஸ்ரீராமநவமி, வைகுண்ட ஏகாதசி, பவுர்ணமி ஆகிவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
No comments:
Post a Comment