மலர்களை கொண்டு வழிபட்டால் கிடைக்கும் நன்மை:
நாம் மனதார வேண்டி கொள்ளும் போது கடவுளுக்கு புஷ்பங்களை கொண்டு வழிபட்டால் கிடைக்கும் நன்மை அதிகம்.
மலர் நன்மை:
கடவுளுக்கு வசம் கொண்ட மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தால் நன்மைகள் யாவும் கிட்டும் என்பது ஐதீகம். மேலும் இந்த மலர்கள் இறைவனின் திருவடிகளை பற்றிய பின் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
மலர்களை கொண்டு இறைவனுக்கு பூஜை செய்தால் கிடைக்கும் பலனானது நூறு மடங்கு ஆகும். மேலும் இந்த மலரில் அதிகமாக மருத்துவ குணமும் உள்ளது.
எப்போது மலர்களை கொண்டு அர்ச்சனை செய்யலாம்:
திங்கள் கிழமைகளில் மல்லிகை, முல்லை கொண்டு இறைவனை அர்ச்சனை செய்தால் எதிரிகள் குறைந்து மனக்கஷ்டங்கள் குறையும் .
செவ்வாய் கிழமைகளில் சிகப்பு அரளி, கஸ்தூரி மலர் கொண்டு அர்ச்சனை செய்தால் திருமண தடை நீங்கி , ஆயுள் அதிகரிக்கும்.
புதன் கிழமைகளில் எல்லா மலர் கொண்டும் அர்ச்சனை செய்தால் குழந்தை பேரு கிட்டி , குழந்தைக்கு நல்ல எதிர் காலம் கிடைக்கும். நோய்கள் அத்தனையும் தீரும்.
வியாழ கிழமை மஞ்சள் நிறத்தில் உள்ள மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்தால் திருமண தடை குழந்தை பாக்கியம் கிட்டி எடுத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.
வெள்ளி கிழமை மல்லிகை மலர் கொண்டு பூஜை செய்தால் செல்வம் பெருகும் குழந்தை வாழ்வில் இன்பம் பொங்கும்.
சனி கிழமை அன்று மனோரஞ்சிதம் என்கிற மலர் கொண்டு அர்ச்சனை செய்தால் மன தைரியம் பிறக்கும்.
ஞாயிறு அன்று தாமரை மலர் கொண்டு அர்ச்சனை செய்தால் குடும்பத்தில் அமைதி கூடும். ஒற்றுமை நிலவும்.
No comments:
Post a Comment