நடனத்தில் சிறந்து விளங்கவும் குடும்பத்தில் ஒற்றுமை கூடவும் வழிபட வேண்டிய கோவில் ::
நடன கலை பயில்பவர்கள் நடனத்தில் சிறந்து விளங்குவதற்கு குடும்ப சூழலில் ஒற்றுமை நிலவவும் வழிபட வேண்டிய கோவில் தான் வடாரண்யேஸ்வரர் கோவில்.
எங்கு உள்ளது:
இந்த திருக்கோவில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு என்ற ஊரில் உளள்து.
நடை திறந்திருக்கும் நேரம்:
இக்கோவில் காலை ஆறு மணி முதல் எட்டு மணி வரையிலும் மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.
சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:
இந்த கோவிலில் உள்ள சிவ பெருமான் வடாரண்யேஸ்வரர் என்றும் அம்பாள் வண்டார்குழலி என்ற பெயருடன் அழகுற காட்சி தருகிறார்கள்.
கோவில் சிறப்பு:
இந்த கோவிலில் உள்ள சிவ பெருமான் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். மேலும் இந்த கோவில் பாடல் பெற்ற திருத்தலமாகும் . மேலும் இந்த கோவில் சக்தி பீடத்தில் காளி பீடம் ஆகும்.
ஸ்தல வரலாறு:
முன்னொரு காலத்தில் உள்ள சும்பன் நிசும்பன் என்ற இரு அசுரர்கள் முனிவர்கள் , தேவர்கள் ஆகியோரை மிகவும் துன்புறுத்தி வந்தனர். இதனை தாங்க முடியாமல் அவர்கள் அனைவரும் சிவனிடமும் பார்வதியிடமும் முறையிட்டனர். ஆதலால் பார்வதி தேவி தன்னுடைய சக்தியை கொண்டு காளி ஒன்றை உருவாக்கி அதனை கண்டு சும்பன் நிசும்பனை அழிக்க ஆணையிட்டாள் . காளியும் சும்பன் நிசும்பனை வாதம் செய்யும் போது அவர்களிடம் இருந்த ரத்தத்தை குடித்து கோரமாக மாறினாள் .
பிறகு அந்த காளியை அழிக்க முஞ்சிகேச காற்கூடாக முனிவர்சிவ பெருமானிடம் முறையிட்டு காளி தேவியை அழிக்கும்படி கூறினார். சிவ பெருமானும் காளியை அழிக்க சென்றார். அப்போது காளி சிவ பெருமானை பார்த்து "நீ என்னுடன் நடனம் ஆடி வென்றால் இந்த ஆலங்காட்டினை ஆளலாம் என்று கூறினாள் . சிவ பெருமானும் ஊர்த்துவ தாண்டவம் ஆடி சிவ பெருமான் அணிந்திருந்த மணியினை கீழே போட்டு அதனை தனது இடது கால் பெருவிரலால் எடுத்து தனது காதில் அணிந்து கொண்டார்."
காளி அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து இது போன்ற நடனம் தன்னால் ஆட முடியாது என்று உணர்ந்து தந்து தோல்வியினை ஒப்பு கொண்டாள் .
காளிக்கு தந்த வரம்:
சிவ பெருமான் காளி தனது தோல்வினை ஒப்பு கொண்டதால் உனக்கு என்னை தவிர வேறு யாரும் சமமாக முடியாது ஆதலால் இங்கு என்னை காண வரும் பக்தர்கள் உன்னை வணங்கிய பின்னரே என்னை வணங்க வேண்டும் அப்போது தான் என்னை வணங்கிய முழு பலன் கிடைக்கும் என்று வரம் அளித்தார்.
கோவில் பெருமை:
இந்த கோவிலில் சிவ பெருமானை காரைக்கால் அம்மையார் தாமரை மலர் போன்ற வடிவத்தில் சிவ பெருமானை வணங்குவது போன்ற தோற்றம் உள்ளது.
கோவில் அமைப்பு:
இந்த கோவிலில் முருகர், விநாயகர், துர்க்கை, பைரவர் ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.
ஸ்தல விருக்ஷம் மற்றும் தீர்த்தம்:
இந்த கோவிலில் உள்ள விருக்ஷம் ஆலமரம் மற்றும் இந்த கோவிலில் தீர்த்தமாக முக்தி திருக்குளம் உள்ளது.
விஷேஷ தினங்கள்:
இந்த கோவிலில் திருவாதிரை மாடத்தில் மூன்று தினங்களும், பங்குனி உத்திரம் உற்சவம் பத்து நாட்களும், பிரதோஷம், திருகார்த்திகை தீபம் மற்றும் மாசி மகம் ஆகியவை மிக சிறப்பாக கொண்டாப்படுகிறது.
No comments:
Post a Comment