நவகிரஹ தோஷங்கள் நீங்கவும் கடன் தொல்லை நீங்கவும் வழிபட வேண்டிய கோவில்:: சூரினார் கோவில்.

நவகிரஹ தோஷங்கள் நீங்கவும் கடன் தொல்லை நீங்கவும் வழிபட வேண்டிய கோவில்:

       நவகிரஹங்கள் தோஷங்கள் அனைத்தும் போகவும் வாழ்வில் செல்வம் செழிக்கவும் வழிபட வேண்டிய கோவில் தான் சூரினார் கோவில். 

எங்கு உள்ளது:

         இந்த கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சூரியனார் கோவில் என்ற இடத்தில் உள்ளது.

எப்படி செல்வது:
              இந்த கோவிலுக்கு கும்பகோணத்தில் இருந்து பேருந்துகள் உண்டு. கும்பகோணத்தில் இருந்து திருமங்கலக்குடி காளி அம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 


சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:

             இங்குள்ள சிவ பெருமான் சிவசூரியன் என்றும் அம்பாள் உஷாதேவி, சாயாதேவி என்ற பெயர் கொண்டும் அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.

ஸ்தல சிறப்பு :

           இந்த கோவிலில் ஏழரை சனி , அஷ்டமத்து சனி மற்றும் கிரக தோஷங்கள் யாவும் விலக இங்கு பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.

ஸ்தல வரலாறு:

        முன்னொரு காலத்தில் காலவ முனிவர் என்பவர் மிக சிறந்த பக்திமான் ஆவர். அவருக்கு தொழு நோய் ஏற்பட்டது. அதனால் இங்குள்ள நவகிரஹங்கள் அனைத்தையும் வேண்டி தவம் மேற்கொண்டார். நவகிரஹங்களும் முனிவருக்கு காட்சி தந்து தொழுநோயை இருந்து விடுவித்தது. இதனை கண்ட பிரம்மா கோபம்
கொண்டார். 

            பூலோகத்தில் அவர்கள் செய்யும் பாவம் மற்றும் புண்ணியங்களுக்கு தகுந்தாற்போல் தான் அவரவர் வாழ்வு அமையும். ஆதலால் என் காலவ முனிவருக்கு நோயிலிருந்து விடுதலை அளித்தீர்கள் என்று நவகிரஹங்களுக்கு அந்த நோய் பற்றி கொள்ளுமாறு சாபம் கொடுத்தார். பிறகு நவகிரஹங்கள் அனைத்தும் சிவ பெருமானை நோக்கி கடும் தவம் மேற்கொண்டு சாப விமோசனம் பெற்று கொண்டதால் இந்த தளத்தில் நவகிரஹங்கள் அனைத்திற்கும் தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது வரலாறு.

சூரியனின் தோற்றம்:

        சூரியனுக்கு இரண்டு இடத்தில் மட்டுமே கோவில் உண்டு. ஒன்று சூரியனார் கோவில் மற்றொன்று கோனார்க் கோவில். இங்கு சூரியன் சாந்தமாக தனது இரு மனைவியருடன் காட்சி தருகிறார்.

தோஷம் நீங்க:

           இங்கு தோஷங்கள் யாவும் நீங்க பன்னிரண்டு ஞாயிறு கிழமை இந்த கோவிலுக்கு வந்து நீராடி மனதார வணங்கினால் தோஷம் யாவும் விலகும் என்பது ஐதீகம்.

வேண்டுதல்கள்:

           இந்த கோவில்களில் நவகிரஹ தோஷத்திற்கு பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் சக்கரை பொங்கல் நெய்வேத்தியம் செய்து அன்னதானம் செய்கின்றனர்.

ஸ்தல விருக்ஷம் மற்றும் தீர்த்தம்:

         இந்த கோவிலில் ஸ்தல விருக்ஷமாக வெள்ளெருக்கு உள்ளது. மற்றும் திருக்குள தீர்த்தமாக சூரிய தீர்த்தம் உள்ளது.

விஷேஷ தினங்கள்:

     ரத சப்தமி மற்றும் தை மாதம் பத்து நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

No comments:

Post a Comment