சீமந்தம் மற்றும் வளைகாப்பும் அதன் பயன்களும் :
சீமந்தம் மற்றும் வளைகாப்பு கர்ப்பிணி பெண்ணிற்கு நடத்தப்படும் ஒரு விழா ஆகும். இந்த விழாஆனது கருவில் குழந்தையை சுமக்கும் பெண்ணை தனித்துவமாக காட்டுவதற்காகவும் அந்த பெண்ணின் மனம் குளிரவும் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி ஆகும்.
இந்த நிகழ்ச்சி இந்தியா போன்ற கலாச்சாரம் மிகுந்த நாடுகளில் பின்பற்றப்படும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி ஆகும்.
எதற்காக வளைகாப்பு:
வளைகாப்பு என்பது அறிவியல் ரீதியாக பிறக்கப்போகும் குழந்தைக்கு செவி வளம் அதிகமாக வர வளைகாப்பு அணிவிக்கின்றனர். இந்த வளைகாப்பு என்பது நம் முன்னோர்கள் கூறியதாவது கர்ப்பிணிகளுக்கு பிரசவம் இனிது நடக்க வளையல் அணிவிக்கின்றனர்.
எப்போது செய்வது:
இந்த வளைகாப்பு என்பது கருவுற்ற மாதத்தில் இருந்து ஐந்து ஏழு அல்லது ஒன்பது மாதத்தில் நடத்தப்படும் ஒரு விழா ஆகும். மேலும் இந்த வளைகாப்பின் போது கர்ப்பமான பெண்ணிற்கு மணமகள் போன்று அலங்காரம் செய்து பிறகு தான் வளைகாப்பு போடா வேண்டும் . அப்படி வளையல் போடும்போது முன்னரே குழந்தைகளை பெட்ரா பெண் தான் வளையல் போட வேண்டும். அவ்வாறு ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமான பெண்ணிற்கு இரண்டு வளையல் போட்டு தானும் அணிய வேண்டும்.
வளைகாப்பு முடிந்ததும்:
கருவுற்ற பெண்ணிற்கு வளைகாப்பு போட்டதும் பெண் அவளின் தாய் வீட்டிற்க்கு செல்ல வேண்டும். ஏனெனில் வளைகாப்பு போட்ட பெண் அவளின் வீட்டிற்கு சென்றால் அவள் பயம் இல்லாதவளாய் இருப்பாள். அது அவளின் பிரசவத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment