புண்ணியம் கிட்டிட வழிபட வேண்டிய கோவில் :
புண்ணியம் கிட்டிட வழிபட வேண்டிய கோவில் தான் அமிர்தகடேஸ்வரர் கோவில் சாக்கோட்டை.
எங்கு உள்ளது:
இந்த கோவில் கும்பகோணத்திற்கு அருகில் சாக்கோட்டை என்ற இடத்தில் உள்ளது.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:
இத்திருக்கோவில் காலை ஒன்பது மணி முதல் பத்து மணி வரையிலும் அதேபோல் மாலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரையிலும் திறந்திருக்கும்.
சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:
இங்குள்ள சிவ பெருமான் பெயர் அமிர்தகதீஸ்வரர் என்றும் அம்பிகை அமிர்தவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
ஸ்தல வரலாறு:
முன்னொரு காலத்தில் சிவ பெருமான் ஊழி காலத்தில் உயிர்களை கலசத்தில் அடக்கி ஒரு இடத்தில் சிவ பெருமான் வைத்தார். அப்போது புயல் வந்ததால் அந்த கலசம் இந்த ஊரில் வந்து தங்கியது. கலசம் வந்து தங்கியதால் இந்த ஊர் கடையநல்லூர் என்று அழைக்கப்படுகிறது.
கோவில் சிறப்பு:
இந்த கோவிலில் மாசி மகம் அன்று கும்பகோணம் மஹாமஹம் அன்று மகாமக குளத்தில் காட்சி தருவது சிறப்பு.
சிறப்பு தினங்கள் :
இந்த கோவில் பிரதோஷம், மாசி மகம், திருக்கார்த்திகை தீபம் முதலியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
வேண்டுதல்கள்:
இந்த கோவிலுக்கு செய்த பாவங்கள் போக இந்த கோவிலுக்கு மக்கள் அதிகமாக வருகின்றனர்.
பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய உடன் அர்ச்சனை செய்தும் அபிஷேகம் செய்தும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.
No comments:
Post a Comment