கேது தோஷம் போக்க வழிபட வேண்டிய கோவில் :: கீழப்பெரும்பள்ளம்

Image result for kethu images



கேது தோஷம் போக்க வழிபட வேண்டிய கோவில் :

        கேது தோஷம் போக்கிட வழிபட வேண்டிய கோவில் தான் நாகநாத ஸ்வாமி கோவில் கீழப்பெரும்பள்ளம் .

எங்கு உள்ளது:

   இந்த கோயில் கீழப்பெரும்பள்ளம் என்ற ஊரில் உள்ளது.

எப்படி செல்வது:

       இக்கோவிலுக்கு சீர்காழி மற்றும் மயிலாடுதுறை வழியே பூம்புகார் செல்லும் பாதையில் உள்ளது. பூம்புகார் செல்லும் சாலையில் தர்மகுளம் என்ற ஊர் உள்ளது.அங்கு தான் பேருந்து நிறுத்தம்உள்ளது .  அதில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கீழப்பெரும்பள்ளம் .

Image result for naganatha swamy images



ஸ்வாமி மற்றும் அம்பாள் பெயர்:

          இங்குள்ள சிவ பெருமான் நாகநாத ஸ்வாமி என்றும் அம்பாள் சௌந்தர்யனாயகி என்ற பெயருடனும்          அழகுற காட்சி தருகின்றனர்.

கோவில் சிறப்பு:

           இந்த கோவிலில் கேது தோஷம் போக பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.

ஸ்தல வரலாறு:

              கேது என்பவர் அரக்க குலத்தை சேர்ந்தவர் ஆவார். பாற்கடலில் அம்ரிதத்தை கடையும் போது மஹாவிஷ்ணு மோகினியாக மாறி தேவர்களுக்கு அகப்பையால் ஊற்றி கொடுத்து கொண்டு இருந்தார். கேது அமிர்தம் உன்ன ஆசைப்பட்டு தேவர்களில் ஒருவராக மாறி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வந்து அமிர்தம் வாங்கி உண்டான். இதனை கண்டு சூரியன் மற்றும் சந்திரன் மகாவிஷ்ணுவிடம் கூறிவிட்டனர். பின்பு கோபம் கொண்ட மஹாவிஷ்ணு தனது கையில் உள்ள அகப்பையை  கொண்டு கேதுவின் தலையில் அடித்தார். உடனே கேதுவின் தலை வேறு உடல் வேறு ஆனது. அமிர்தம் உண்டதால் கேதுவின் உயிர் மட்டும் இருந்தது. பின்பு தான் செய்த தவறினை புரிந்து கொண்டு சிவ பெருமானிடம் முறையிட்டார். சிவ பெருமானும் கேதுவை ஐந்து தலை நாகமாக செம்மை நிறமாக மாற செய்துவிட்டார்.

கோவில் வரலாறு:

        பாற்கடலில் அமிர்தம் கடைய மந்தார மலையை மத்தாகவும் வாசுகி என்ற நாகத்தினை கயிறாகவும் கொண்டு அமிர்தம்  கடைந்தனர். அப்போது வலி தாங்க முடியாமல் வாசுகி நஞ்சு கக்கியது. நஞ்சினால் அமிர்தம் யாவும் நஞ்சாகிவிடும்  என்று எண்ணி சிவ பெருமான் அந்த நஞ்சினை உண்டு அந்த வாசுகி என்ற நாகத்தினை தூக்கி வீசினார். பிறகு வாசுகி நாகம் சிவ பெருமான் நஞ்சு உண்டதற்கு தான் தான் காரணம் என்று எண்ணி சிவ பெருமானை நோக்கி தவம் செய்தது. பிறகு சிவ பெருமான் காட்சி தந்து என்ன வரம் வேண்டும் கேள் என்று கூறினார். எனக்கு காட்சி கொடுத்த நீங்கள் இனிமேல் இந்த தளத்தில் நாகநாதசுவாமி என்று பெயர் கொண்டு தன்னை காண வரும் பக்தருக்கு அருள்புரிய வேண்டும் என்று கூறியது. சிவ பெருமானும் அவ்வாறே இந்த இடத்தில் வாசம் பெற்றார்.


Image result for naganatha swamy images

கோவில் அமைப்பு:

      இந்த கோவிலில் ராஜ கோபுரம் கிடையாது. சிவ பெருமான், அம்பாள், சூரியன், சந்திரன், சனி பகவான் ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.

கேது அமைப்பு:

       இந்த கோவிலில் கேது பகவான் தனி சன்னதியில் காட்சி தருகிறார். கேது பகவான் ஐந்து தலை நாகத்தின் தலையும், மனித உடலும் கொண்டு கைகளை கூப்பி வணங்குவது போன்று காட்சி தருகிறார்.

வேண்டுதல்கள்:

       இக்கோவிலில் அதிகமாக கேது தோஷம் போக்கவே பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி மற்றும் அம்பாள் மற்றும் கேதுவிற்கு அபிஷேகம் செய்தும் அர்ச்சனை செய்தும், தீபம் ஏற்றியும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.


No comments:

Post a Comment