மனநிலை சரியில்லாதவர்கள் மற்றும் பிரம்மஹத்தி தோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய கோவில் :: மஹாலிங்கஸ்வாமி திருக்கோவில்.

      மனநிலை சரியில்லாதவர்கள் மற்றும் பிரம்மஹத்தி தோஷம் 
உள்ளவர்கள் வழிபட வேண்டிய கோவில்:
       மனநிலை சரியில்லாதவர்களும் பிரம்மஹத்தி தோஷம் உள்ளவர்களும்
 வழிபட வேண்டிய கோவில் தான் மஹாலிங்கஸ்வாமி திருக்கோவில்.

எங்கு உள்ளது:

       இந்த கோவில் கும்பகோணத்தில் சுமார் எட்டு கிலோ மீட்டர் 
தொலைவில் உள்ளது. 

எப்படி செல்வது:

           கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து மாயவரம் செல்லும் 
பேருந்தில் ஏறி திருவிடைமருதூர் என்ற ஊரில் இந்த கோவில் உள்ளது.

சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:

           இந்த கோவிலில் உள்ள சிவ   பெருமான் மஹாலிங்கஸ்வாமி என்றும்
 அம்பிகை பிருஹத் சுந்தராகுஜாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்.

நடை திறந்திருக்கும் நேரம்:

             இந்த கோவில் காலை ஐந்து மணி முதல் ஒரு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் சிறப்பு:

              இந்த கோவிலில் வந்து வழிபட்டால் மனநிலை சரியாகிவிடும் 
என்பது ஐதீகம்.

 ஸ்தல வரலாறு:

         முன்னொரு காலத்தில் இந்த ஊரினை ஆட்சி புரிந்த அரசர் ஒருவர் இந்த வழியே குதிரையில்  வந்து கொண்டு இருந்தார் . அப்போது ஒரு மரத்தின் அடியில் பிராம்மணர் ஒருவர் அசந்து தூங்கி கொண்டு இருந்தார். அவரை அறியாது அந்த குதிரை பிராமணரை மிதித்து சென்றது. அதனால் அந்த பிராமணர் இறந்தார். அதனை அறியாமல் அரசர் சென்றார். அதனால் பிரம்மஹத்தி தோஷம் பற்றி கொண்டது.

          அரசரை பின் தொடர்ந்த பிரம்மஹத்தி விடாமல் துரத்தி கொண்டு வந்தது .  பிறகு அரசன் கோவிலின் முன் வாசல் வழியே சென்று பின் வாசல் வழியே தப்பிவிட்டார். பிரம்மஹத்தியோ அரசர் வருவார் என வாசலிலேயே காத்து கொண்டு இருந்தது.  இன்னமும் காத்து கொண்டு இருக்கிறது என்பது ஐதீகம்.

கோவில் பெருமை:

      இந்த கோவிலில் உள்ள மிக பெரிய நந்தி வளர்ந்து வருவதால் அதன் தலையில் ஆணி அடித்து அதன் வளர்ச்சியை குறைத்துள்ளனர் என்பது வரலாறு.

கோவில் அமைப்பு:

       இந்த கோவிலில் நவகிரகம், பைரவர், சண்டீஸ்வரர், துர்க்கை ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.

ஊர் பெயர் காரணம்:

            மருத மரத்தின் நடுவில் உரோமச முனிவருக்கு சிவ பெருமான் ஒளி வடிவில் காட்சி தந்ததால் இடைமருதூர் என்ற பெயர் கொண்டது. அது இப்போது மருவி திருவிடைமருதூர் என்ற பெயர் கொண்டது.

ஸ்தல விருக்ஷம் மற்றும் தீர்த்தம்:

            இந்த கோவிலில் ஸ்தல விருக்ஷமாக மருத மரமும் திருக்குளமாக காருண்யாமிருத தீர்த்தமும் உள்ளது.

விஷேஷ தினங்கள்:

                தைப்பூசத்தில் பத்து நாட்கள் உற்சவமும், வைகாசியில் பத்து நாள் உற்சவமும் , பிரதோஷம், மாசி மகம் ஆகியவை மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

வேண்டுதல்கள்:

             இங்கு மனநிலை சரியில்லாதவர்களுக்கு அதிகமாக பக்தர்கள் வேண்டி கொள்கின்றனர். பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்தும் தீபம் ஏற்றியும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.



No comments:

Post a Comment