குழந்தை பாக்கியம் கிடைக்கவும் , திருமணம் விரைவில் நடக்கவும் வழிபட வேண்டிய கோவில்:
குழந்தை பேரு கிடைக்கவும் திருமண தடை அகலவும் வழிபடவேண்டிய கோவில் தான் திரியம்பகேஸ்வரர் கோவில்.
எங்கு உள்ளது:
இந்த திருக்கோவில் சென்னை மாவட்டத்தில் உள்ள சாமியார் தோட்டம் என்ற ஊரில் அமைந்துள்ளது.
நடை திறக்கும் நேரம்:
இத்திருக்கோவில் காலை ஐந்து மணி முதல் ஒன்பது மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.
சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:
இந்த கோவிலில் உள்ள சிவ பெருமான் திரியம்பகேஸ்வரர் என்றும் அம்பாள் கருமாரி திரிபுர சுந்தரி என்ற பெயர் கொண்டும் அழைக்கப்படுகின்றனர்.
கோவில் சிறப்பு:
இத்திருக்கோவிலில் வந்து வழிபட்டால் குழந்தை பெரு மற்றும் திருமண தடை உள்ளவர்கள் வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
ஸ்தல வரலாறு:
இந்த கோவிலில் முதலில் கருமாரி திரிபுரசுந்தரி அம்பாள் மட்டும் சூலம் போன்ற அமைப்பில் இலந்தை மரத்த்திருக்கு முன் இருந்தார். பிறகு அந்த ஊரில் ஒருவரின் கனவில் அம்பாள் தோன்றி தனக்கு ஆலயம் ஒன்று எழுப்ப வேண்டு என்று கூறினாள். அந்த பக்தரோ சிறு வாணிபம் செய்பவர் . ஆதலால் அவருடன் சிறு தொகை மட்டும் இருந்தது. பிறகு ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இந்த கோவிலை கட்டியதாக வரலாறு கூறுகின்றது.
திருமணம் கைகூட:
இந்த கோவிலில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி பிறகு இங்கு உள்ள பத்மாவதி தாயாருக்கு தாமரை மலரால் அர்ச்சனை செய்து மனதார வணங்கினால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
குழந்தை பேறு :
இங்குள்ள கருமாரி அம்பாளுக்கு வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமை அர்ச்சனை செய்து விளக்கு ஏற்றி அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வேண்டி கொண்டால் விரைவில் குழந்தை பேறு கிட்டும் என்பது ஐதீகம்.
கோவில் அமைப்பு:
இந்த கோவிலில் விநாயகர், முருகர், ஹயக்ரீவர், லட்சுமி நரசிம்மர், ஸ்ரீனிவாச பெருமாள், பத்மாவதி தாயார் ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.
அதிசய அமைப்பில்:
இந்த திருக்கோவிலில் காட்சி தரும் முத்து குமார சுவாமி கையில் சாதத்து உருண்டை எனப்படும் திருச்சந்தூஉருண்டை ஏந்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
விஷேஷ தினங்கள்:
இங்கு பிரதோஷம், திருவாதிரை, திருக்கார்த்திகை தீபம், சங்கடஹர சதுர்த்தி, பங்குனி உத்திரம் ஆகியவை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஸ்தல விருக்ஷம்:
இந்த திருக்கோவில் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்தது ஆகும். மேலும் இந்த கோவிலில் ஸ்தல விருக்ஷமாக இலந்தை மரம் உள்ளது.
வேண்டுதல்கள்:
இத்திருக்கோவிலில் பக்தர்கள் தங்களின் கோரிக்கை நிறைவேறியதும் புது வஸ்திரம் சாற்றியும், மாலை அணிவித்தும் அனுமன் ஜெயந்தி அன்று ஒரு லக்க்ஷம் வடைமாலை அணிவித்தும், விளக்கு ஏற்றியும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.
|
To perform kula deiva poojas,pariharam,homam,dharpanam,archanai, pls contact. 7298999798
குழந்தை பாக்கியம் கிடைக்கவும் , திருமணம் விரைவில் நடக்கவும் வழிபட வேண்டிய கோவில் :: திரியம்பகேஸ்வரர் கோவில்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment