சுக பிரசவம் நடக்கவும் குழந்தை பேறு பெறவும் வழிபட வேண்டிய கோவில் :: வன்னீஸ்வரர் திருக்கோவில்





சுக பிரசவம் நடக்கவும் குழந்தை பேறு பெறவும் வழிபட வேண்டிய கோவில்:

         கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நடக்கவும் குழந்தை பேறு வேண்டியும்
 வழிபடவேண்டிய கோவில் தான் வன்னீஸ்வரர் திருக்கோவில்.

எங்கு உள்ளது:

           இந்த திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சி என்ற ஊரில் உள்ளது.

எப்படி செல்வது:

                திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் அம்பாசமுத்திரம் வழியாக தென்காசி செல்லும் பேருந்தில் ஏறி ஆழ்வார்குறிச்சி என்ற ஊரில் இறங்கலாம்.

நடை திறந்திருக்கும் நேரம்:

                 இந்த கோவில் காலை ஏழு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:

               இக்கோவிலை உள்ள சிவ பெருமான் வன்னியப்பர் என்றும் அம்பிகை சிவகாமசுந்தரி என்ற பெயர் கொண்டும் அழைக்கப்படுகிறார்.

ஸ்தல வரலாறு:

       நெருப்பின் அதிபதியான அக்னி பகவான்  ஒரு முறை  முனிவர்கள் யாகம் செய்து கொண்டிருக்கும்போது சரிவர எரியாமல் அணைந்துகொண்டே இருந்தார். ஆதலால் பெரும் கோபமடைந்த முனிவர்கள் அக்னீ  பகவானுக்கு சாபம் இட்டனர். அதனை நிவர்த்தி செய்வதற்காக அக்னீ பகவான் இங்குள்ள இடத்தில் சிவ பெருமான் ஒன்றை  பிரதிஷ்டை செய்து பூஜை செய்து  வந்தார்.  சிவ பெருமானும் அக்னீ பகவானுக்கு காட்சி தந்து  சாபத்தை போக்கி .கொண்டார்.

சிவ பெருமான் பெயர் காரணம்:

         சிவ பெருமானின் பெயர் வன்னீஸ்வரர் வன்னி என்பதற்கு அக்னீ என்று  பொருள். அக்னீ பகவான் வணங்கியதால் இந்த சிவபெருமானுக்கு வன்னீஸ்வரர், வன்னியப்பர், அக்னீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

கோவில் உருவான முறை:

             பிறகு இந்த கோவில் பராந்தக சோழன் என்ற அரசரால் கட்டப்பட்டது. சிவ பெருமான்  குளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. பிறகு  மாறவர்ம்ம அரசர்களால் விரிவாக்கப்பட்டது .

கோவில்  அமைப்பு:

           இந்த கோவிலில் விநாயகர், முருகர், துர்க்கை மற்றும்  அனைத்தும் மற்ற கோவிலில்களில் இல்லாதபடி யந்திரம் வடிவில் உள்ளது.

சுகப்பிரசவம் நடக்க:

           இக்கோவிலில் உள்ள தூண் ஒன்றில் கர்ப்பமான அம்பாள் ஒன்று உள்ளது. அந்த அம்பாளுக்கு அபிஷேகம் செய்தால் சுக  பிரசவம் நடக்கும் என்பது ஐதீகம்.

சிறப்பு தினங்கள்:

      இந்த கோவிலில் பிரதோஷம் ,   மாசி மகம், திருக்கார்த்திகை தீபம் முதலியவை  கொண்டாப்படுகிறது.

ஸ்தல  திருக்குளம்:

        இக்கோவிலில் உள்ள திருக்குளம் பெயர் அக்னீ   தீர்த்தம் ஆகும். மேலும் இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்தது ஆகும்.

         

No comments:

Post a Comment