கடன் தொல்லை, கல்வி அறிவு, திருமணத்தடை ஆகியவற்றிக்கு சிறந்த கோவில்:
கடன் தொல்லை , கல்வி அறிவு மற்றும் திருமணத்தடை ஆகியவற்றிக்கு சிறந்த தலமாக உள்ளது ஆத்மநாதர் கோவில் திருவலம்பொழில் .
எங்கு உள்ளது:
இந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவிலில் உள்ளது.
எப்படி செல்வது:
இக்கோவிலுக்கு புதுக்கோட்டையில் இருந்து நிறைய பேருந்துகள் உண்டு. புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் வழியில் ஆவுடையார் கோவில் உளள்து.
நடை திறந்திருக்கும் நேரம்:
இத்திருக்கோவில் காலை ஆறு மணி முதல் பதினோரு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.
சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:
இங்குள்ள சுவாமி பெயர் ஆத்மநாதர் என்றும் அம்பிகை யோகாம்பாள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
கடன் தொல்லை , கல்வி அறிவு மற்றும் திருமணத்தடை ஆகியவற்றிக்கு சிறந்த தலமாக உள்ளது ஆத்மநாதர் கோவில் திருவலம்பொழில் .
எங்கு உள்ளது:
இந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவிலில் உள்ளது.
எப்படி செல்வது:
இக்கோவிலுக்கு புதுக்கோட்டையில் இருந்து நிறைய பேருந்துகள் உண்டு. புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் வழியில் ஆவுடையார் கோவில் உளள்து.
நடை திறந்திருக்கும் நேரம்:
இத்திருக்கோவில் காலை ஆறு மணி முதல் பதினோரு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.
சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:
இங்குள்ள சுவாமி பெயர் ஆத்மநாதர் என்றும் அம்பிகை யோகாம்பாள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
கோவில் சிறப்பு:
இந்த கோவிலில் அதிகமாக கடன் தொல்லை மற்றும் திருமண தடை நீங்கவும் கல்வி அறிவில் சிறந்து விளங்கவும் பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.
ஸ்தல வரலாறு:
முன்னொரு காலத்தில் மதுரை பாண்டிய மன்னன் இந்த பகுதியை ஆட்சி செய்து கொண்டு இருந்தார். அவருடைய அரச சபையில் அமைச்சராக இருந்தவர் தான் மாணிக்கவாசகர். ஒருநாள் அரசர் மாணிக்க வாசகரை அழைத்து அரண்மனைக்கு ஒரு குதிரை வாங்கி வர சொல்லி உத்தரவிட்டார். மாணிக்க வாசகரும் குதிரை வாங்குவதற்கு பணம் எடுத்து கொண்டு இந்த ஊருக்கு வந்தார். அப்போது சிவ பெருமான் கோவில் மணி அடிக்கும் சத்தம் கேட்டது. பிறகு மாணிக்க வாசகர் அதனை கேட்டு கொண்டு நடந்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு இடத்தில் ஒரு சிவகுரு அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்ததை பார்த்து அவரிடம் சென்று தனக்கும் தியான முறைகளை சொல்லி தருமாறு கூறினார்.
சிவகுருவும் மாணிக்கவாசகருக்கு சொல்லி கொடுத்தார். பிறகு மாணிக்க வாசகர் தியானம் செய்துவிட்டு கண் திறந்த பொது அங்கே சிவகுரு இல்லை. தனக்கு சொல்லி கொடுத்தது சிவ பெருமான் என்று அறிந்து அவருக்கு குதிரை வாங்க வைத்துள்ள பணத்தில் இங்கு சிவ பெருமானுக்கு
கோவில் ஒன்று காட்டினார்.
மாணிக்கவாசகர் குதிரை வாங்கி வராததால் மன்னர் ஆத்திரம் அடைந்தார். பிறகு காவலர்களை கூப்பிட்டு மாணிக்க வாசகரை பிடித்து சிறையில் அடைக்கும் படி உத்தரவிட்டார். அதன்படியே காவலரும் மாணிக்கவாசகரை சிறையில் அடைத்தனர். பிறகு சிவ பெருமான் மாணிக்க வாசகருக்காக நரிகள் சிலவற்றை குதிரைகளாக மாற்றி மன்னரிடம் மாணிக்க வாசகர் கொடுத்ததாக கூறி சென்றார்.
அந்த குதிரைகள் அனைத்தும் அன்றிரவே நரிகளாக மாறியது. அதனால் மிகுந்த கோபமுற்று பகலில் ஆற்று மணலில் நிற்க செய்தார் மாணிக்கவாசகரை அனால் சிவ பெருமான் வெள்ளம் வர வழைத்து அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுமாறு செய்தார். பிறகு மன்னர் அந்த ஆற்றினை அடைத்து வைக்க சிவ பெருமான் சம்பளத்திற்கு வேலை செய்து பிட்டு வாங்கி தின்றார்.
பிறகு பிட்டினை தின்றதால் பிரம்பினால் அடிக்க உத்தரவிட்டிட்டார். பிரம்படி சிவ பெருமான் தவிர அனைவரின் முதுகிலும் விழுந்தது. மாணிக்க வாசகருக்கு பதிலாக சிவ பெருமான் வந்ததை சிவ பெருமான் அறிந்து கொண்டு மாணிக்க வாசகரின் திருவடிகளை பற்றி மன்னிப்பு கேட்டார்.
இந்த அதிசயம் நிகழ்ந்த இடம் இந்த ஊர் ஆகும்.
சிவ பெருமானின் தோற்றம்:
சிவ பெருமான் இங்கு அருஉருவமாக காட்சிதருகிறார். மேலும் இங்குள்ள சிவ பெருமானுக்கு சதுர வடிவ ஆவுடையார் மட்டும் உள்ளது. மேலும் இங்கு ஒரு குவளை வைத்திருக்கின்றனர் . இந்த குவளை என்பது சிவ பெருமானின் திருமேனியும் , அதனுள் இருப்பது ஆன்மா என்றும் வழிபடுகின்றனர். உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் காப்பவர் என்பது பொருள்.
தீபாராதனை :
இங்கு சிவ பெருமானுக்கு காட்டப்படும் தீபாராதனை தட்டினை கண்ணில் ஒற்றி கொள்ள முடியாது. சிவ பெருமான் இங்கு தீப வடிவில் இருப்பதால் தீபாராதனை காட்டிய பின் மூலஸ்தானத்தில் வைத்து விடுகின்றனர்.
மூன்று தீபங்கள்:
இங்குள்ள சிவ பெருமானுக்கு சிவப்பு, பச்சை, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களில் தீபம் ஏற்றப்படுகிறது. அந்த வண்ணத்திற்கு பச்சை என்பது சந்திரனையும், அக்கினி என்பது சிவப்பு நிறத்தையும் , வெள்ளை என்பது சிவ பெருமானையும் குறிக்கும்.
சிவனின் மறுபெயர்:
இக்கோவிலில் உள்ள சிவ பெருமானுக்கு குதிரை சாமி என்ற ஒரு பெயரும் உண்டு. என் இந்த பெயர் வந்ததென்றால் மாணிக்க வாசகருக்காக சிவ பெருமான் குதிரை மேல் ஏறி வந்ததால் சிவ பெருமானுக்கு இப்பெயர் வந்தது. மேலும் இந்த சிவ பெருமானை அசுவநாதர் என்ற பெயர் கொண்டும் அழைக்கின்றனர்.
கோவில் அமைப்பு:
இந்த கோவிலில் தான் உலகத்தில் உள்ள திசையை சிற்பங்கள் இருக்கின்றன. மேலும் இந்த கோவிலில் விநாயகர், முருகர், அம்பிகை , தக்ஷிணாமூர்த்தி, பைரவர் ஆகியோர் உள்ளனர். மேலும் இந்த கோவிலில் உள்ள
காண கிடைக்காத சிற்பங்கள்.
1. டுண்டி பிள்ளையார்.
2.கற்சங்கிலிகள் - அதில் நாகம் பின்னி கொண்டு இருப்பது சிறப்பு.
3. உடும்பு குரங்கு
4. 1008 சிவ ஸ்தலங்களில் உள்ள சிவ பெருமான் மற்றும் அம்பிகை
5. இரண்டு தூண்களில் ஓராயிரம் கால்கள்
6. 27 நட்சத்திர உருவ சிற்பங்கள்
7.பல நாட்டு குதிரை சிற்பம்'
8. சப்தஸ்வரர் தூண்கள்
9.நடனக்கலை முத்திரை
10.கூடல்வாய் நிழல் விழும் பசுமாட்டின் கழுத்து.
கோவில் அதிசயம்:
இந்த கோவிலில் தான் நந்திக்கு பலிபீடம் கிடையாது. சிவ பெருமானுக்கு லிங்க திருமேனி கிடையாது. அம்பாளுக்கு திருவடியை மட்டுமே வணங்க வேண்டும்.
வேண்டுதல்கள்:
இந்த கோவிலில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய உடன் புழங்கரிசி சாதம் வடித்து அதனை ஆவி பறக்க நெய்வேத்தியம் செய்கின்றனர். மேலும் தை முதல் நாள் அன்று அப்பம், வடை, தேன்குழல் முதலியவை நெய்வேத்தியம் செய்கின்றனர். மேலும் அன்னதானம் செய்கின்றனர்.
ஸ்தல விருக்ஷம் மற்றும் தீர்த்தம்:
இந்த கோவிலில் உள்ள ஸ்தல விருக்ஷமாக குருத்தை மரமும், தீர்த்தமாக அக்கினி தீர்த்தமும் உள்ளது. இந்த கோவில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்தது.
சிறப்பு தினங்கள்:
இந்த கோவிலில் பிரதோஷம், தை அமாவாசை, ஆடி கிருத்திகை , பவுர்ணமி ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
No comments:
Post a Comment