தோஷங்கள் அனைத்தும் போகவும், குழந்தை பேரு கிடைக்கவும் வழிபடவேண்டிய கோவில் :: சங்கமேஸ்வரர் கோவில் .

தோஷங்கள் அனைத்தும் போகவும், குழந்தை பேரு கிடைக்கவும் வழிபடவேண்டிய கோவில் :

             வாழ்வில் உள்ள அனைத்து தோஷங்கள் போகவும் குழந்தை பேரு வேண்டியும் வழிபட வேண்டிய கோவில் தான் சங்கமேஸ்வரர் கோவில் .

எங்கு உள்ளது:

           இந்த கோவிலில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருணா என்ற ஊரில்
உள்ளது.

எப்படி செல்வது:

               இக்கோவில் ஈரோட்டில் இருந்து சுமார் பதினைந்து  கிலோ மீட்டர் தொலைவில் பவானி என்ற ஊர் உள்ளது அங்கு தான் இந்த கோவில்  உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:

                இந்த கோவில் காலை  ஆறு மணி முதல் ஒரு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:

               இந்த கோவிலில் உள்ள சிவ பெருமான் சங்கமேஸ்வரர் என்றும் அம்பிகை வேதநாயகி என்ற பெயர்  அழைக்கப்படுகின்றனர்.

ஸ்தல வரலாறு:

       முன்னொரு காலத்தில் குபேரன் ஒரு முறை பல பரிகாரஸ்தலங்களுக்கு  சென்று அங்குள்ள இறைவனை வணங்கி கொண்டு  இருந்தார். அப்போது இந்த  ஊரில் முனிவர்கள், ஞானியர்கள்  அனைவரும் இங்கு மிக பெரும் தவம் மேற்கொண்டனர். மேலும் இந்த ஊரில் மான், சிங்கம், நாரி, முயல் ஆகியவை ஒரே குளத்தில் மிகுந்த ஒற்றுமையுடன் நீர் குடிப்பதை பார்த்து வியந்தார். ஆதலால் இங்கு மிக பெரும் அதிசயம் நிறைந்த ஊராக உள்ளது என்பதை அறிந்து குபேரனும் அங்கு தவம் மேற்கொண்டார். 

         அவர் தவம் மேற்கொள்வதால் மஹாவிஷ்ணு அவருக்கு காட்சி அளித்தார். பிறகு அங்குள்ள ஒரு   இலந்தை மரத்தின் கீழ் சிவ பெருமான் தானே தோன்றினார். பிறகு குபேரனை பார்த்து உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று கூறினார். அதற்க்கு குபேரன் உன் பெயரான அளகேஷன் என்ற பெயரினையே இந்த ஊருக்கு அழைக்க வேண்டும். மேலும் இந்த கோவிலில் தன்னை நாடி வரும் பக்தருக்கு வேண்டும் வரத்தை கொடுக்க வேண்டும்.என்று கூறினார். சிவ பெருமானும் அதற்க்கு சம்மதித்தார்.

ஊர் பெயர் காரணம்: 

         இந்த ஊருக்கு அம்மன் பெயரும், நதியின் பெயரும், ஊரின் பெயரும் ஒன்றே அமையப்பெற்ற சிறப்பு. திருணா என்பது தன்னை நாடி வருபவருக்கு எந்த குறையும் அண்டாது என்பது பொருள்.

சுற்றிலும் மலைகள்:

         இந்த ஊரை சுற்றி மலைகளாக காணப்படுகிறது. நாககிரி, வேதகிரி, மங்களகிரி, சங்ககிரி ஆகியவை ஆகும்.

மூன்று துவாரங்கள்:

           இந்த வேதநாயகி அம்பாளுக்கு அருகில் உள்ள சுவரில் மூன்று துவாரங்கள் உள்ளது. அது முன்னொரு காலத்தில் இந்த ஊரில் வாழ்ந்த வில்லியம் கரோ என்பவர் இந்த ஊரின் கலெக்டர் ஆக இருந்தார். அவர் இந்த கோவிலில் உள்ள அம்மனை தரிசிக்க அர்ச்சகர் மறுத்தார். அதனால் இங்கு அம்பாள் சன்னதியில் மூன்று துவாரங்கள் இட்டு  அங்கிருந்து அம்பாளை தரிசனம் செய்து வந்தாள் . ஒரு நாள் அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது  ஒரு பெண் வந்து வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறினாள் . அவளும் மறுக்காமல் வெளியேறினாள். பிறகு அந்த வீட்டின் கூரை இடிந்து விழுந்தது. தன்னை காப்பாற்ற அம்பாள் வந்திருப்பதை உணர்ந்தாள். ஆதலால் அம்பாளுக்கு தங்கத்தில் கட்டில் ஒன்று வாங்கி கொடுத்தார்.

நெய்வேத்தியம்:

        இங்குள்ள சிவ பெருமான் சுயம்பு மூர்த்தியாக இலந்தை மரத்தில் வந்து காட்சி தந்ததால் இந்த கோவிலில் உள்ள ஸ்தல விருக்ஷத்தில் உள்ள இலந்தை பழமே நெய்வேத்தியமாக சிவ பெருமானுக்கு அளிக்கப்படுகிறது.

காயத்ரி லிங்கம்:

          இந்த கோவிலில் உள்ள திருக்குளத்தில் விஸ்வாமித்தரர்  லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து காயத்த்ரி மந்திரத்தை உச்சரித்தார். ஆகவே இது காயத்ரி லிங்கம் என பெயர் பெற்றது.

கோவில் பெருமை:

            இக்கோவிலில் உள்ள சிவ பெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மேலும் இந்த கோவிலில் மாசி மாதம் வரும் ரதசப்தமியில் இருந்து மூன்றாம் நாள் சூரியனின் கதிர் வேதநாயகி அம்பாள், சுப்பிரமணியர், சங்கமேஸ்வரர் மீது பட்டு சிறப்பு சூரிய பூஜை நடைபெறும்.

சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:

              சங்கமேஸ்வரர், அளகேசன் , மருத்துவ லிங்கம், வானிலிங்கம், சங்கமநாதர், வக்கிரீஸ்வரர், நற்றாரீஸ்வரர், சங்கமுகநாதேஸ்வரர் மற்றும் திருநன்னாவுடையார்.

அம்பாள் பெயர்:

              பவானி, வேதநாயகி, சங்கமேஸ்வரி, பாந்தர், பொழியம்மை, பண்ணார், வக்கிரேஸ்வரி,  மருத்துவேஸ்வரி ஆகியவை ஆகும்.

கோவில் அமைப்பு:

                   இந்த கோவிலில் விநாயகர், முருகர், அம்பிகை , லிகோத்பவர் ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.

ஸ்தல விருக்ஷம் மற்றும் திருக்குள தீர்த்தம்:

               இந்த கோவிலில் ஸ்தல விருக்ஷமாக இலந்தை மரம் உள்ளது.  மேலும் கோவில் தீர்த்தமாக பவானி, காவேரி, சூரிய தீர்த்தம், அம்ரிதநதி, சக்கர தீர்த்தம், தேவ தீர்த்தம் முதலியவை உள்ளது. இக்கோவில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்தது.

சிறப்பு தினங்கள்:

                 ஆடி  பதினெட்டு,பிரதோஷம் ,ஆடி அம்மாவாசை, தை அமாவாசை ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடபடுகிறது.


           
 

No comments:

Post a Comment