திருமண தடை நீங்க மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்க வழிபட வேண்டிய கோவில் :: பாதாளேஸ்வரர் திருக்கோவில்

திருமண தடை நீங்க மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்க வழிபட வேண்டிய கோவில்:

        திருமண தடை மற்றும் குழந்தை செல்வம் பெறுக வழிபட வேண்டிய கோவில் தான் பாதாளேஸ்வரர் திருக்கோவில்.

எங்கு உள்ளது:

          இந்த திருக்கோவில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரித்துவாரமங்கலம் என்ற ஊரில் உள்ளது.

எப்படி செல்வது:

           இத்திருக்கோவிலுக்கு கும்பகோணத்தில் இருந்து சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் பாதையில் அம்மாபேட்டையில் இருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:

          இந்த திருக்கோவில் காலை  எட்டு மணி முதல் ஒரு மணி வரையிலும் அதேபோல் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:

               இந்த ஊரில் உள்ள சிவ பெருமான் பாதாளேஸ்வரர் அல்லது பாதாள வரதர் என்றும் அம்பாள் அலங்கார நாயகி அல்லது அலங்கார வள்ளி என்ற சிறப்பு பெயர் கொண்டும் அழகுற காட்சி தருகின்றனர்.

கோவில் சிறப்பு:

           இக்கோவிலில் சுவாமி மற்றும் அம்பாள் சுயம்பு லிங்கமாக காட்சி தருகின்றனர். மேலும் இந்த கோவிலுக்கு திருமண தடை நீங்கவும் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.
             
ஸ்தல வரலாறு :

         ஒரு முறை படைக்கும் தொழிலை மேற்கொள்ளும் பிரம்மா மற்றும் காக்கும் தெய்வமாக இருக்கும் விஷ்ணுவிற்கும் ஒரு போட்டி வந்தது. அதில் தன்னை விட யார் பெரியவர் என்ற போட்டி வந்தது. அதனை சிவனிடம் முறையிட்டனர். பிறகு சிவனின் திருமுடியையும், சிவனின் பாதங்களையும்  யார் முதலில் பார்க்கின்றனரோ அவரே பெரியவர் என்ற தீர்ப்பு வந்தது.

             உடனே பிரம்மா அன்ன பறவையை வைத்து கொண்டு திருமுடியினை காண சென்றார். அப்போது சிவனின் முடியில் வைக்கப்பட்டிருந்த தாழம்பூ கீழே விழுந்து கொண்டு இருந்தது. பிறகு பிரம்மா தாழம்பூவிடம் சிவனின் திருமுடியினை பிரம்மா கண்டார் என்று பொய் கூற சொன்னார். தாழம்பூவும் அவ்வாறே செய்தது. பிறகு அதனை அறிந்த சிவ பெருமான் கடும்கோபத்திருக்கு ஆளாகி பிரம்மாவிற்கு எங்கும் கோவில் கட்ட கூடாது என்றும், தாழம்பூ இனிமேல் என் பூஜைக்கு வைக்க கூடாது என்றும் சாபம் கொடுத்தார்.

         விஷ்ணு வராகர் அவதாரம் எடுத்து பூமியை குடைந்து சிவ பெருமானின் திருவடியை காண முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. அவர் தான் தோற்றுவிட்டதாக கூறினார். சிவ பெருமானை காண பூமியை குடைந்து வந்த இடமே இந்த திருத்தலம்.

கோவில் பெருமை:

         இந்த கோவிலில் விஷ்ணு தோண்டிய பள்ளம் இன்றளவும் இருக்கிறது  அதனை கல் கொண்டு மூடி உள்ளனர் என்கின்றனர். இந்த கோவலில்  உள்ள உச்சி காலத்தை தரிசித்தால் புண்ணியம் கிட்டும். இந்த கோவிலில் மட்டும் தான் எங்குமே காண கிடைக்காத ஏழு விநாயகர் உள்ளனர்.

கோவில் அமைப்பு:

              இத்திருக்கோவிலில் விநாயகர், முருகர், துர்க்கை ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். மேலும் இந்த கோவிலில் தான் சிவ பெருமான் நவகிரஹங்களுக்கு தலைவனாக இருப்பதால் இந்த கோவிலில் நவகிரகம் கிடையாது.

ஊர் பெயர் காரணம்:

        இந்த ஊரான அரித்துவாரமங்கலம் என்ற ஊருக்குஅரி என்றால் விஷ்ணு என்பதும் துவாரம் என்றால் பாதாளம் என்றும் மங்களம் என்பது ஊரினையும் குறிக்கும்.

விஷேஷ தினங்கள்:

        இந்த கோவிலில் பிரதோஷம், திருவாதிரை, மாசி மகம், அன்னாபிஷேகம் முதலியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஸ்தல விருக்ஷம் மற்றும் திருக்குளம் :

           இந்த கோவிலில் உள்ள ஸ்தல விருக்ஷமாக வன்னி மரமும் திருக்குளமாக பிரம்மா தீர்த்தமும் உள்ளது . இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்தது ஆகும்.

வேண்டுதல்கள்:

        இந்த கோவிலில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னர் ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து விளக்கு ஏற்றி தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.

No comments:

Post a Comment