தீராத
நோய்க்கு தீர்வு கொடுக்கும் அகத்தீஸ்வரர் திருக்கோவில்:
எங்கு உள்ளது:
இந்த திருக்கோவில் சென்னையில் உள்ள நெமிலிச்சேரி
என்ற இடத்தில் உள்ளது.
நடை திறக்கும்
நேரம் :
இக்கோவில் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு
மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு முதல் இரவு எட்டு மணி முதல் திறந்திருக்கும்.
ஈசன்
மற்றும் அம்பாள் பெயர் :
இந்த கோவிலில் உள்ள சிவ பெருமான் அகத்தீஸ்வரர் என்றும் அம்பாள் ஆனந்த வல்லி என்ற
சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றனர்.
கோவிலில்
உள்ள மற்றற்ற பெருமை:
எந்த ஒரு தீராத நோயும் தீர்த்து வைக்கும் வல்லமை பொருந்தியதாக உள்ளது இந்த திருக்கோவில்.
கோவில்
வரலாறு :
பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான அகத்தியர் சிவ பெருமான் மீது மிகவும் தீராத பற்றினாள் இருந்தார். அவர் எங்கு சென்றாலும் அங்கு சிவ பெருமான் ஒன்றை நிறுவி அதனை வைத்து பூஜை செய்வது வழக்கம். அவர் எங்கு சிவ பெருமானை வைத்து வழிபட்டரோ அந்த இடம் அனைத்தும் பெரிய சிவ லிங்கத்தலமாக மாறியது . அப்படி மாறிய தலங்கள் தான் அகத்தியர் வழிபட்ட தலமாக விளங்குகிறது நெமிலிச்சேரியில் உள்ள அகத்தியர் சிவ பெருமான் கோவில்.
நெமிலி
பெயர் காரணம் :
நெமிலி என்ற சொல்லுக்கு மயில் தெலுங்கு மொழியில் மயில் என்ற ஒரு பொருள் உண்டு. செறிவு என்ற சொல்லுக்கு கூட்டம் என்ற பொருள் உண்டு. முன்னொரு
காலத்தில் இந்த இடத்தில் மயில்கள் கூட்டம் கூட்டமாக இருந்ததால் இந்த ஊருக்கு நெமிலிச்சேரி என்ற சிறப்பு பெயர் பெற்றது.
கோவில்
அமைப்பு:
இந்த கோவிலில் கொடிமரத்திற்கு ஓட்டி விநாயகர் சன்னதி உள்ளத்து. விநாயகர் நர்த்தன விநாயகர் என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார். பிறகு இந்த கோவிலில் தட்சிணாமூர்த்தி, முருகர், பிரம்மா ஆகியோர் விளங்குகின்றனர். மேலும் இந்த கோவிலில் விஷ்ணு துர்க்கை உள்ளார். மேலும் இந்த கோவிலில் சந்திரன், சூரியன் , பைரவர் , ஆகியோர் உள்ளனர்.
இந்த கோவிலில் நவகிரஹங்கள் இருப்பது மிக முக்கிய சன்னதியாக உள்ளது. மேலும் இந்த கோவிலில் பிராகாரத்தில் விநாயகர் சன்னதி நால்வர் சன்னதி மற்றும் முருகர் சன்னதி உள்ளது.
கோவில்
மற்ற பெருமை:
இந்த கோவிலில் மிக பெருமையாக கருதப்படுவது சந்திரன் , சூரியன் மற்றும் பைரவர் மூவரும் இடத்தில்
காட்சி தருவது மிகவும் சிறப்பாக உள்ளது.
வேண்டுதல்கள்:
இந்த கோவிலில் தீராத வியாதிக்கும் தீர்வு காணப்படுகிறது. பிறகு பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னர் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்து புது ஆடை சார்த்தி வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்கின்றனர்.
தல
விருக்ஷம் மற்றும் தீர்த்தம்:
இந்த
கோவிலில் தல விருக்ஷமாக அரசமரம்
உள்ளது. மேலும் இந்த கோவிலில் தீர்த்தமாக அகத்திய புஷ்கரனி என்ற தீர்த்தம் உள்ளது.
கோவில்
பழமை :
இந்த திருக்கோவில் சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்ததாக உள்ளது.
No comments:
Post a Comment