செல்வம் பெருகவும் இழந்த பதவியை திரும்ப பெறவும் வழிபட வேண்டிய கோவில் :: சனத் குமார ஈஸ்வரர் திருக்கோவில்.

செல்வம் பெருகவும் இழந்த பதவியை திரும்ப பெறவும் வழிபட வேண்டிய கோவில்:

          இழந்த பதவியை திரும்ப பெறவும் செல்வம் பெருகவும் வழிபட வேண்டிய கோவில் தான் சனத் குமார ஈஸ்வரர் திருக்கோவில்.

எங்கு உள்ளது:

           இந்த திருக்கோவில் கும்பகோணத்தை அடுத்த எஸ்.புதூர் என்ற ஊரில் உள்ளது.

எப்படி செல்வது:

            கும்பகோணத்தில் இருந்து சுமார் பதினெட்டு கிலோ மீட்டர் தொலைவில் இந்த திருக்கோவில் அமைந்துள்ளது.  ஆதலால் கும்பகோணத்தில் இருந்து எஸ்.புதூர் க்கு பேருந்துகள் உண்டு. எஸ்.புதூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி செல்லலாம்.

நடை திறக்கும் நேரம் :

               இந்த திருக்கோவில் காலை எட்டு மணி முதல் பன்னிரண்டு பனி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

சுவாமி  மற்றும் அம்பாள் பெயர்:

              இத்திருக்கோவிலில் உள்ள சிவ பெருமான்  சனத் குமார ஈஸ்வரர் என்றும் அம்பிகை சௌந்தர்ய நாயகி என்ற பெயருடன் காட்சி தருகின்றனர்.

ஸ்தல வரலாறு:

         குபேரன் இந்த கோவிலை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. குபேரனுக்கு இந்த கோவிலில் சாபம் தீர்த்த தலமாக இந்த கோவில் விளங்குகிறது. ஒரு காலத்தில் காம்பிளி என்ற நாடு ஒன்று இருந்தது. அதில் வேள்விதத்தன் என்ற ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனின் மகன் பெயர் குணநிதி. குணநிதி படிக்கும் வயதில் படிக்காமல் ஊர் சுற்றியும் தனது தந்தை சேர்த்து வைத்த செல்வத்தை செலவழித்து கொண்டும் இருந்தான். மகனை பற்றிய கவலை இருந்தது.

          அவள் தனது பிள்ளை என்பதால் அவன் செய்த தவறு அனைத்தையும் தனது கணவனிடம் கூற மறுத்தாள். பிறகு குணவதி திருமண வயதை எட்டிய பின் தான் வேள்விதத்தனுக்கு தனது மகனை பற்றிய உண்மை தெரிய வந்தது. பிறகு அவர் மனைவியிடம் கேட்ட பொது மனைவியும் அதற்க்கு உடந்தை என்பதை அறிந்த அவர் குணவதியையும் தனது மனைவியையும் விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். பிறகு  அவர்கள் உண்ணும் உணவிற்கு கூட ஒன்றும் இல்லாதவர்காளாய் இருந்தனர். பிறகு குணவதி ஒரு நாள் எதையாவது திருடி சம்பாதிக்கலாம் என்று எண்ணினான் .

           ஆதலால் கோவிலில் சென்று ஏதாவது திருடலாம் என்று நினைத்து அங்கிருந்து விலை மதிப்பு உள்ள வாசனை திரவியங்களை திருட திட்டமிட்டான். பிறகு யாருக்கும் தெரியாமல் நாடு இரவில் திருட முயலும் போது அவனுக்கு போதிய வெளிச்சம் இல்லை. ஆகையால் சிவ பெருமானிடம் உள்ள விளக்கினை தூண்டி விட்டு அந்த வாசனை திரவியங்களை திருடினால். வெளிச்சம் அதிகமாக இருந்ததால் கோவிலில் உள்ள பக்தர்கள் அவனை பிடித்து அடித்தனர். அதிகமாக அடித்ததால் அவனின் உயிர் பிரிந்தது.

           அவனை மேல் உலகத்திற்கு அழைத்து செல்ல எம தூதர்கள் அங்கு வந்தனர். அவன் தனது கடைசி நிமிடத்தில் சிவ பெருமானின் திரியை தூண்டி புண்ணியம் சேர்த்து கொண்டதால் சிவ தூதர்கள் எம தூதர்களை விரட்டி துரத்தினார். பிறகு அவனுக்கு  கலிங்கம் எனப்படும் நாட்டில் உள்ள அரண்தமன் என்ற அரசருக்கு  மகனாக பிறக்க வேண்டும் என்றும் தமன் என்ற பெயர் கொண்டு இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

     தமன் என்பவன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தவனாக இருந்தான். சிவ பெருமானும்ன தவத்தின் பயனாக தமனுக்கு காட்சி தந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கூறினார். அதற்க்கு தமன் சிவ பெருமான் கோடி சூரியன் கொண்டு விளங்கும் ஆற்றல் கொண்டவராய் திகழ்பவர். அவரை காணும் சக்தி எனக்கு கிடையாது. ஆதலால் எனக்கு சிவ பெருமானை காணும் சக்தி எனக்கு வேண்டும் என்று கூறினார்.
     
  பிறகு அந்த வரத்தை சிவ பெருமான் அவனுக்கு வழங்கினார். பிறகு சிவ பெருமானை மனதாரா வணங்கி கண் குளிர கண்டதால் பெரும் மகிழ்ச்சி அடைந்தான். பிறகு அவன் கண் பார்வை பறி போனது. மீண்டும் அவன் கடுந்தவம் புரிந்தார். பிறகு மறுபடியும் சிவ பெருமான் காட்சி தந்து இழந்த பார்வையை திரும்ப அளித்தார். மேலும் சிவ பெருமானை தோழன் என்ற பெயரும் கிடைத்தது. சிவ பெருமானின் அருகில் தமனை சேர்த்து கொண்டு அவருக்கு பதவி அளித்தார். மேலும் செல்வங்கள் அனைத்திற்கும் நீதான் முன் வர வேண்டும் என்று கூறினார்.

 பொற்கண்ணன் :

            தமனுக்கு இரண்டாம்முறை சிவ பெருமன் கண் கொடுக்கும் போது ஒரு கண் சாதாரண கண்ணாகவும் மற்றொரு கண் பொற்கண்ணாகவும் மாறியது. ஆதலால் அவர் பொற்கண்ணன் என்று அழைக்கப்படுகிறார்.

ஊர் பெயர் காரணம்:

               இந்த ஊருக்கு திருத்தண்டிகை என்ற பெயர் உண்டு. திருத்தண்டிகை என்பது தம்பதி சமேதராய் அம்பாள் மற்றும் ஈசன் வளம் வரும் பல்லக்கு என்பது பொருள்.

குபேரனின் சாபம்:

          சிவ பெருமான் செல்வ பொறுப்புகள் அனைத்தையும் கொடுத்தார் என்ற அகந்தையை குபேரன் இருந்தான். அவனுக்கு சபல புத்தி வந்தது. ஆதலால் தனக்கு கொடுத்த பதவியை தவறாக பயன்படுத்தி கொண்டார். பிறகு அவனை விட்டு குபேரன் என்ற பதவி விலகியது. மேலும் அவனிடம் இருந்த லட்சுமி கடாக்ஷமும் விலகியது. செய்வதறியாது இருந்த பொது ரிஷிகள் அனைவரும் திருத்தண்டிகை சென்று வழிபட்டால் தனது சாபம் தீரும் என்று கூறினார். அவ்வாறே இங்கு வந்து மனதார கடுந்தவம் இருந்து பூஜை செய்ததால் சாபம் நீங்க பெற்று இழந்த பதவியினை திரும்ப பெற்றான் என்பது வரலாறு.

விஷேஷ தினங்கள்:

           இந்த கோவிலில் பிரதோஷம், பவுர்ணமி, சிவ ராத்தரி, கார்த்திகை தீபம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திருக்குளம்:

           பக்தர்கள் இங்குள்ள சோமதீர்த்தக்குளத்தில் குளித்து சிவ பெருமானை மனதார வணங்கி வழிபட்டால் செல்வம் பெருகும் மற்றும் இழந்த பதவி திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த திருக்கோவில் சுமார் ஆயிரம் முதல்  இரண்டாயிரம் வரை பழமை வாய்ந்தது.

வேண்டுதல்கள்:

             இந்த கோவிலில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் அபிஷேகம் செய்தும் வஸ்த்திரம் சாற்றியும் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்கின்றனர்.

No comments:

Post a Comment