செல்வங்கள் சேர வணங்க வேண்டிய கோவில்:
செல்வங்கள் பெறுக வணங்க வேண்டிய கோவில் தான் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்.
எங்கு உள்ளது :
இந்த கோவில் விருதுநகர் மாவட்டத்தில் பாலவந்தம் என்ற இடத்தில் உள்ளது.
நடை திறந்திருக்கும் நேரம்:
இந்த திருக்கோவில் காலை ஏழு மணி முதல் ஒரு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் இருக்கும்.
அம்பாள் மற்றும் சிவபெருமான்:
இந்த கோவிலில் வீற்றிருக்கும் சிவ பெருமான் கைலாசநாதர் என்றும்
அம்பிகை ஆனந்தவல்லி என்ற சிறப்பு பெயர் கொண்டு காட்சி தருகின்றனர்.
கோவில் சிறப்பு:
இக்கோவிலில் வந்து வழிபட்டால் செல்வங்கள் பெருகும் என்பது ஐதீகம்.
ஸ்தல வரலாறு:

பாண்டியர்கள் ஆட்சி செய்த காலத்தில் குலசேகர பாண்டியர் என்பவர் எந்த ஊரினை ஆட்சி செய்து வந்தார். அவர் போரில் தனது செல்வங்கள் அனைத்தையும் இழந்தார். அவர் சிவ பெருமான் மீது தீராத பற்றினை கொண்டவர். அவர் கனவில் ஒரு நாள் சிவ பெருமான் வந்து தனக்கு ஒரு கோவில் அமைத்தது தந்தால் இழந்த செல்வங்கள் அனைத்தும் தம்மிடம் வந்து சேரும் என்று கூறி மறைந்தார். அரசரும் அவ்வாறே செய்ய எண்ணி அவரிடம் செல்வம் இல்லாத காரணத்தினால் ஒரு கல் மட்டும் ஊன்றி அதனை கோவிலாக பாவித்தார்.
அந்த அரசருக்கு இழந்த செல்வங்கள் அனைத்தும் கிடைத்தன. பிறகு இந்த கோவிலை மாறவர்மன் மற்றும் சுந்தர பாண்டியன் ஆகியோர் இதனை கட்டி அதற்க்கு திருப்பணி செய்தார் என்பது கல்வெட்டு வரலாறு ஆகும்.
கோவில் குறிப்பு:
கோவில் கட்ட காரணமாக இருந்த பாண்டிய மன்னர்கள் தங்களது எல்லா வேலைகளுக்கும் இந்த கோவிலில் உள்ள சிவ பெருமான் பெயரான கைலாசநாதர் என்ற பெயரையே வைத்து உள்ளனர் என்று கோவிலில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றது.
கோவில் அமைப்பு:
இந்த கோவிலில் பிராகாரத்தில் விநாயகர், முருகர், துர்க்கை, பைரவர் ஆகியோர் அழகுற காட்சி தருகின்றனர். மேலும் இந்த கோவிலில் பைரவ பூஜை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பைரவ பூஜை:
இந்த பைரவ பூஜை வெகு சிறப்பாக இந்த கோவிலில் கொண்டாடப்படுகிறது. இந்த பைரவ பூஜை ஒவ்வொரு மாதமும் அஷ்டமி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த பூஜையில் கலந்து கொண்டு பைரவரை வணங்கினால் செல்வம் சேர்ந்து துன்பங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
சிறப்பு தினங்கள்:
இந்த கோவிலில் சித்திரை மாதம் திருவிழா கொண்டாடப்படுகிறது. மேலும் ஆடி கிருத்திகை, பிரதிஷம், திருவாதிரை, நவராத்திரி, கார்த்திகை தீபம் , மாசி மகம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஸ்தல விருக்ஷம்:
இந்த கோவிலில் ஸ்தல விருக்ஷமாக வில்வ மரம் உள்ளது.
வேண்டுதல்கள் :
பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறினால் சுவாமி அம்பாளுக்கு பால் கொண்டு அபிஷேகம் செய்து விளக்கு போட்டு தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.
No comments:
Post a Comment