திருமணம்
விரைவில் கைகூடவும் குழந்தைகள் சிறப்பாக புத்திகூர்மையாக வளரவும் வழிபட வேண்டிய தெய்வம் ரவீஸ்வரர் திருக்கோவில் :
இந்த திருக்கோவில் திருமணம் விரைவில் நடக்கவும் கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தைகள் மிகவும் புத்தி கூர்மையுடன் இருக்கவும் வாங்க வேண்டிய தெய்வமாக உள்ளது வியாசர்
பாடியில் உள்ள ரவீஸ்வர் திருக்கோவில்.
எங்கு
உள்ளது :
இந்த திருக்கோவில் சென்னையில் உள்ள வியாசர்பாடி என்ற இடத்தில் ரவீஸ்வரர் ஆலயம் உள்ளது.
சுவாமி
மற்றும் அம்பாள் பெயர்:
இந்த கோவிலில் உள்ள சிவ பெருமான் ரவீஸ்வரர் என்றும் அம்பாள் மரகதாம்பாள் என்ற சிறப்பு பெயர் கொண்டும் அழைக்கப்படுகிறார்கள்.
நடை
திறந்திருக்கும் நேரம்:
இந்த திருக்கோவில் காலை ஆறு மணி முதல் பன்னிரெண்டு மணி வரையிலும் மாலை நான்கு மணி முதல் இரவு ஒன்பது மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஸ்தல
வரலாறு:
ஸமுங்யா தேவி என்பவர் சூரிய பகவானின் மனைவி ஆவாள். அவர் ஒரு முறை தனது நிழலினை உருவாக்கி வீட்டில் வைத்து விட்டு சூரியனை பிரிந்து சென்று விட்டார். ஏனெனில் அவருடைய வெப்பத்தை அவரால் தாங்க முடியாத காரணத்தினால் இதனை செய்தார். அந்த நிழல் போன்ற அமைப்பு சூரியனின் குழந்தைகளை வாட்டி வதைத்து மிகவும் துன்புருத்தியது.
இதனை கண்ட சூரிய பகவான் தனது மனைவி தன்னை விட்டு சென்று விட்டால் என்பதை அறிந்த பின் மிகவும் கோபமுண்டு எழுந்தார். தனது மனைவியை தேடி கொண்டு சென்றார். அப்போது போகின்ற வழியில் வழியில் இருந்த பிரம்மாவை அவர் கவனிக்க வில்லை. பிறகு பிரம்மா சூரியன் தன்னை மதிக்கவில்லை என்று நினைத்து பிறகு சூரியனுக்கு பூலோகத்தில் மனிதனாக பிறக்க வேண்டும் என்று சாபம் இட்டார்.
இதனை கண்டு மிகவும் வருத்தம் அடைந்த சூரிய பகவான் நாரதரிடம் ஆலோசை தரும்படி கேட்டார். நாரதர் அதற்க்கு இந்த இடத்தில் அமர்ந்து கொண்டு ஒரு சிவ லிங்கத்தினை உருவாக்கி அதை பூஜித்து வணங்க வேண்டும் என்று கூறினார் . அப்படி செய்தால் சாப விமாரோசனம் அடையலாம் என்று கூறினார்.
கோவில்
சிறப்பு:
இந்த திருக்கோவிலில் திருமணம் விரைவில் நடக்கவும் குழந்தைகள் அறிவில் சிறந்து விளங்கவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
ஸ்தல
வரலாறு:
ஸமுங்யா தேவி என்பவர் சூரிய பகவானின் மனைவி ஆவாள். அவர் ஒரு முறை தனது நிழலினை உருவாக்கி வீட்டில் வைத்து விட்டு சூரியனை பிரிந்து சென்று விட்டார். ஏனெனில் அவருடைய வெப்பத்தை அவரால் தாங்க முடியாத காரணத்தினால் இதனை செய்தார். அந்த நிழல் போன்ற அமைப்பு சூரியனின் குழந்தைகளை வாட்டி வதைத்து மிகவும் துன்புருத்தியது.
இதனை கண்ட சூரிய பகவான் தனது மனைவி தன்னை விட்டு சென்று விட்டால் என்பதை அறிந்த பின் மிகவும் கோபமுண்டு எழுந்தார். தனது மனைவியை தேடி கொண்டு சென்றார். அப்போது போகின்ற வழியில் வழியில் இருந்த பிரம்மாவை அவர் கவனிக்க வில்லை. பிறகு பிரம்மா சூரியன் தன்னை மதிக்கவில்லை என்று நினைத்து பிறகு சூரியனுக்கு பூலோகத்தில் மனிதனாக பிறக்க வேண்டும் என்று சாபம் இட்டார்.
இதனை கண்டு மிகவும் வருத்தம் அடைந்த சூரிய பகவான் நாரதரிடம் ஆலோசை தரும்படி கேட்டார். நாரதர் அதற்க்கு இந்த இடத்தில் அமர்ந்து கொண்டு ஒரு சிவ லிங்கத்தினை உருவாக்கி அதை பூஜித்து வணங்க வேண்டும் என்று கூறினார் . அப்படி செய்தால் சாப விமாரோசனம் அடையலாம் என்று கூறினார்.
அவ்வாறே சூரிய பகவான் சிவ பெருமான் ஒன்றை வடிவமைத்து அதற்க்கு பூஜை செய்து வணங்கினார். அந்த சிவ லிங்கத்தின் மேல் சிவ பெருமான் தோன்றி சூரிய பகவானுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்க்கு சிவ பெருமான் நான் பூஜித்த இந்த லிங்கத்தின் மீது தாங்கள் இருக்க வேண்டும் என்று கூறினார். சிவ பெருமானும் அவரின் வேண்டுகோளுக்கு இணங்கி அந்த லிங்கத்தின் மேல் வந்தார்.
அம்பிகை வரலாறு:
முன் காலத்தில் இந்த ஊரினை ஆட்சி செய்த வீச்வரன் என்ற அரசர் வாழ்ந்து வந்தார். அவர்க்கு திருமணம் ஆகி பிள்ளைப்பேறு இல்லை. பிறகு அந்த அரசர் இந்த சிவ பெருமானை வணங்கி மிகவும் வேண்டி வந்தார். பிறகு அதனை கண்ட சிவ பெருமான் தனது அம்பிகையை அந்த அரசருக்கு மகளாக பிறக்குமாறு கூறி மறைந்தார். பிறகு
அரண்மனை தோட்டத்தில் உள்ள ஒரு இடத்தில் ஒரு குட்டி பெண் குழந்தை அழுது கொண்டிருந்தது. அதனை கண்ட அரசர் அந்த குழந்தையை எடுத்து அந்த குழந்தைக்கு மரகதம் என்ற பெயர் சூட்டி வளர்த்தார் .
பிறகு அந்த குழந்தை திருமண வயதை எட்டியவுடன் அந்த பெண்ணிற்கு திருமணம் முடிக்க வேண்டும் என் எண்ணிய அரசர் திருமணத்திற்கு வரன் பார்த்து கொண்டு இருந்தார். அப்போது சிவ பெருமான் அரசர் கனவில் தோன்றி தாம் தான் அந்த பெண்ணை திருமணம் செய்ய போகிறேன் என்று கூறினார். அந்த கனவினை கண்ட அரசர் மறுநாள் காலை கோவிலுக்கு தனது பெண்ணை அழைத்து சென்றார். அப்போது சிவ பெருமான் அந்த பெண்ணை தன்னுள் சேர்த்து கொண்டார்.
அதற்க்கு பிறகே அந்த கோவிலில் அம்பாள் சன்னதி ஒன்று வந்ததாக
வரலாறு கூறுகிறது.
ஊர் பெயர் காரணம் :
புராணங்கள் பதினெட்டு மற்றும் நான்கு வேதங்களை இயற்றிய வ்யாஸர் என்பவர் இந்த சிவ பெருமானை பூஜை செய்ததால் இந்த ஊருக்கு வியாசர்பாடி என்ற பெயர் கொண்டு விளங்குகுகிறது.
வியாசர்
சன்னதி:
இந்த கோவிலில் வ்யாஸர் சிவ பெருமானின் பின் புறம் உள்ள முதல் சன்னதியில் உள்ளார். அவர் கையில் முத்திரை கொண்டு புலியின் தோல் மீது அமர்ந்தவாறு வ்யாஸர் உள்ளார்.
இந்த
வ்யாஸர் முனை காத்த பெருமால்
என்ற சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார்.
கோவிலின்
சிறப்பு :
சிவன் கோவிலில் இங்கு சிவ சன்னதிக்கு அருகில் வாசல் கிடையாது. தெற்கு கோபுர வாசலில் வந்து தான் சிவ பெருமானை தரிசிக்க வேண்டும். மேலும் ஒரு சிறப்பாக சிவ பெருமானின் சன்னதியில் அவருக்கு முன் ஒரு சிறிய துளை ஒன்று உள்ளது. அதன் வழியாக நந்தி உள்ளது
. அந்த துளை வழியாக சூரிய கதிர்கள் சிவ பெருமான் மீது விழும்.
கோவில்
அமைப்பு:
இந்த கோவிலில் விநாயகர், முருகர், பைரவர், சூரியர் ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருகிறார். விநாயகரின் பெயர் சுந்தர விநாயகர். மேலும் இந்த கோவிலில் பிராகாரத்தில் அய்யப்பன் , முருகர் கூடிய வள்ளி தெய்வானை ஆகியோர் உள்ளனர். மேலும் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது
மகிஷன் வதம் நிகழ்ச்சி:
இங்குள்ள கோவிலில் மிக சிறப்பாக கருதப்படுவது மகிஷன் வதம் . இந்த மகிஷன் வதம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. அந்த நிகழ்ச்சியானது அம்பாள் சன்னதிக்கு முன் ஒரு வாழை மரத்தினை கட்டி
அந்த
வாழை மரத்தினை வெட்டி வன்னி மர இலைகளை கட்டி
விடுகின்றனர். இந்த வாழை மரத்தில் மகிஷன் இருப்பதாக வரலாறு.
தீர்த்தம்
மற்றும் மரம்:
இந்த கோவிலில் ஸ்தல விருக்ஷமாக வன்னி மரம் உள்ளது. மேலும் தீர்த்தமாக சூரிய தீர்த்தம் உள்ளது. இந்த கோவில் சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன் பழமை வாய்ந்ததாக உள்ளது.
விஷேச தினங்கள்:
இந்த கோவிலில் ஆனி மாதம்பத்து
நாள் சிறப்பு பூஜை நடை பெரும். மேலும் தை பொங்கல் , மாசி
மகம் கந்தசஷ்டி ஆகியவை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
No comments:
Post a Comment