NAAGA DHOSHAM POKKA VAZHIPADA VENDIYA KOVIL :: KARKODESWARAR KOVIL

நாக தோஷம் போக்க வழிபட வேண்டிய தலம் :

    நாக தோஷம்  உள்ளவர்கள் மற்றும் கடகராசிக்காரர்களுக்கு மிகவும் உகந்த தலமாக உள்ளது தான் கார்கோடேஸ்வரர் கோவில்.

எங்கு உள்ளது:

     இந்த திருக்கோவில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் என்ற ஊரில் காமரசவல்லி என்ற இடத்தில் அமைந்த்துள்ளது.
 
எப்படி செல்வது:

    இந்த ஊருக்கு திருவையாறு பேருந்து நிறுத்தத்தில் ஏறி திருமானூரில் இறங்கி கமரசவல்லி என்ற இடத்தில் இந்த திருக்கவொயில் உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:

       இக்கோவில் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும்  அதே போல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

சுவாமி மற்றும் அம்பாள் பெயர்கள்:

        இந்த திருக்கோவிலில் சிவ பெருமான் கார்கோடேஸ்வரர் என்றும் அம்பிகை பலம்மிக்க என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

கோவில்  சிறப்பு:

      இந்த கோவிலில் அதிகமாக நாக தோஷம் போக்குவதற்கும் குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.

ஸ்தல வரலாறு:

        முன்னொரு காலத்தில் இந்த ஊரில் உள்ள   மக்கள் அனைவரும் சிவ பக்தி அற்று மிகுந்த கேட்ட சுயநலம் கொன்றவர்களாகவும் கொடிய வன்மம் கொண்டர்வர்களாகவும் இருந்தனர். இவ்வாறு இருந்தால் மக்களின் நலம் பாதிக்கக்கூடும் என்று அறிந்து தேவர்கள்  இந்திரன் ஆகியோர் மக்களுக்கு நன்மை செய்யும் வகையில் சிவ பெருமானை வேண்டினார்கள் . சிவ பெருமானும் மன்மதன் என்ற ஒருவரை படைத்து இவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினார். அனால் மன்மதனும் மக்கள் போலவே இருந்தார். ஆதலால் சிவ பெருமான் தனது நெற்றி கண்ணினை கொண்டு எரித்தார்.

இரண்டாவது   வரலாறாக  பாண்டவர்களின் குலத்தில் பிறந்த ஒருவன் எதற்கும் அஞ்சாமல் இருந்தான். அவன் ஒருநாள்  காட்டிற்கு வேட்டை ஆட சென்றான். அப்போது முனிவர் ஒருவர் மிகுந்த தவத்தில் இருந்தார். அவர் தவத்தை கலைக்கும் பொருட்டு அவன் அந்த வழியே சென்ற ஒரு நாகத்தை எடுத்து முனிவர் கழுத்தில் மாலையாக சுற்றி அந்த பாம்பினை கொன்றான். முனிவரும் மிகுந்த கோபம் கொண்டு அவனுக்கு சாபம் இட்டார். அவன் பெயர் பரிட்சித்து மகாராஜா . அவனுக்கு முன்னர் இட்ட சாபம் அடுத்த ஏழாம் நாள் நீ இறந்து விடுவாய் என்றும் தான் தவம் செய்த பொது நாகத்தினை கொண்டு துன்புறுத்தியதால். நாகத்தினால் தான் தாம் இறப்பை சந்திப்பாய் என்றும்  சாபம்  அளித்தார்.

       அவன் அதனை கண்டு கொள்ளாமல் தனது அரண்மனைக்கு வந்து நடந்ததை  கூறினான். அரண்மனையில் உள்ள அனைவரும் அதற்க்கு பரிகாரம் செய்தனர்.   பரிட்சித்து மகாராஜாவிற்கு ஒரு மகன் உண்டு. அந்த ஏழாம்நாள் அந்த பரிட்சித்து மகாராஜா நாகம் தீண்டி இறந்தார்.  மகாராஜாவின் மகன் தனது தந்தை நாகம் தீண்டியதை கண்டு ஒரு யாகம் ஒன்றை உருவாக்கினார்.

     அந்த யாகத்தில் அனைத்து நாகங்களும் அந்த தீயில் விழ வேண்டும் என்று வேண்டி கொண்டார் . சிவ பெருமானும் அவ்வாறே வரம் அளித்தார். நாகங்கள் அனைத்தும் அந்த தீயில் வேண்டு மடிந்தது. ஆனால் நாகங்களின் தலைவனான கார்கோடகன் மட்டும் உயிர் தப்ப வேண்டும் என்று நினைத்து சிவ பெருமானை வேண்டி கொண்டார். சிவ பெருமானும் அவ்வாறே வரம் அளித்தார்.

சிவ பெருமானும் கார்கோடகனிடம் நீ யாரையும் தீண்ட கூடாது. தீண்டினால் மிகுந்த சாபத்திற்கு வருவாய் என்று கூறி மறைந்தார்.

கார்கோடகன்:

      சிவ பெருமானின் வாக்கு படி இந்த ஊரில் உள்ள எந்த நாகமும் ஊரில் உள்ள மக்களை தீண்டுவதில்லை. அப்டி தீண்டினாலும் உயிர் போவதில்லை என்பது ஐதீகம்.

ஊர் பெயர் காரணம்:

      சிவ பெருமான் மன்மதனை எரித்ததால் மன்மதனின் மனைவி ரதி தேவி தவம் இருந்தார்.  ரதி தவம் வள்ளி என்ற பெயர் வந்தது. பிறகு இந்த ஊர் கமரசவல்லி என்ற பெயர் பிற்காலத்தில் வந்தது.

கோவில் அமைப்பு:

      இந்த கோவிலில் முன் கோபுர வாசலில் விநாயகர் , முருகர் ஆகியோர் உள்ளனர். ரதி தேவியின் செப்பு தகடு பொருந்திய சிற்பம் ஆகியவை இந்த கோவிலில் உள்ளது.

சிறப்பு  தினங்கள்:

     பிரதோஷம், கார்த்திகை மாதம் திங்கள் கிழமை , விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி , திருவாதிரை ஆகியவை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment