சஷ்டியப்த பூர்த்தி :: அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்.

 எல்லா விதமான செல்வங்களும் பெற வழிபட வேண்டிய கோவில் தான் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்.
சகல விதமான செல்வங்களும் பெற வழிபட வேண்டிய திருக்கோவில்:
    அறுபதாவது திருமணம் எனப்படும் சஷ்டியப்த பூர்த்திக்கும் மற்றும் எல்லா விதமான செல்வங்களும் பெற வழிபட வேண்டிய கோவில் தான் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்.
எங்கு உள்ளது:
      இந்த திருக்கோவில் சென்னை மாவட்டத்தில் உள்ள சேலையூர் என்ற ஊரில் உள்ளது.
நடை திறந்திருக்கும் நேரம்:
        இந்த திருக்கோவில் காலை ஏழு மணி முதல் பதினோரு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் இருக்கும்.
சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:
        இக்கோவிலில் உள்ள சிவ பெருமான் அமிர்தகடேஸ்வரர் என்றும் அம்பிகை அபிராமி என்றதா பெயரிலும் காட்சி தருகின்றனர்.
கோவில் சிறப்பு:
          இந்த திருக்கோவிலில் சுவாமி மற்றும் அம்பாள் சுயம்பு லிங்கமாக இருப்பது மிக சிறப்பாக உள்ளது. மேலும் இந்த கோவிலில் வந்து வழிபட்டால் எல்லா விதமான செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.
ஸ்தல வரலாறு:
     இந்த ஊர் முதலில் அடர்ந்த எழில் மிகு வனமாக இருந்து வந்தது. ஒரு முறை காஞ்சி மஹா பெரியவர் இந்த வனத்தில் வந்திருக்கும் போது இந்த இடத்தில் சுவாமி மற்றும் அம்பாள் சிலை உள்ளது. அதனை எடுத்து அந்த சுவாமி அம்பாளுக்கு கோவில் காட்டுமாறு கூறினார். பிறகு அவர் கூறிய இடத்தில் ஆழமாக எடுத்து பார்த்தபோது தான் அமிர்தகடேஸ்வரர் என்ற சுயம்பு லிங்கம் ஒன்று கிடைக்கப்பெற்றது.
     பிறகு அந்த ஊரில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் உள்ள ஒரு இடத்தில் பார்த்தபோது நிறைய விக்கிரஹங்கள் கிடைத்தது. அதில் ஒன்று தான் அபிராமி அம்பிகை . ஆகவே இந்த ஊரில் இந்த அமிர்தகடேஸ்வரருக்கு கோவில் ஒன்று கட்டபட்டது.
ஊர் பெயர் காரணம்:
        இந்த ஊரில் சிலைகள் அதிகமாக கிடைக்க பெற்றதால் இந்த ஊருக்கு சிலையூர் என்ற பெயர் வந்தது. பிறகு இந்த ஊர் நாளடைவில் மருவி சேலையூர் என்றானது.
கோவில் அமைப்பு:
         இந்த கோவிலில் பதினெட்டு வகையான நதிகளின் சங்கமாக உள்ளது போன்ற அமைப்பு உள்ளது. மேலும் இந்த கோவிலில் விநாயகர், முருகர், துர்க்கை, நவகிரகம் மற்றும் சண்டீஸ்வரர் சன்னதி ஆகியவை தனி தனியாக காட்சி தருகின்றனர்.
திருக்குளம் அமைப்பு:
          இந்த திருக்குளத்தில் ஒவ்வொரு வருடமும் வரும் மாசி மகம் அன்று பதினெட்டு நதிகளில் இருந்து நீர் எடுத்து அந்த பதினெட்டு புனித நீர்களுக்கும் தனி தனியே ஹோமங்கள் செய்து பதினெட்டு நதிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்து அந்த நீர்கள் அந்த பதினெட்டு புனித நீர்களையும் இந்த திருக்குளத்தில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து அவர்கள் முன்னே இந்த திருக்குளத்தில்கலக்கின்றனர். 
         பிறகு பக்தர்கள் அனைவரும் இந்த குளத்தில் வந்து குளித்து தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்கின்றனர்.
சிறப்பு அம்பாள் புஷ்ப அபிஷேகம்:
            இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் வரும் தை அமாவாசை அன்று அபிராமிக்கு அபிராமி அந்தாதி பாடி அந்த பாட்டின் ஒவ்வொரு முடிவிலும் ஒரு கூடை நிறைந்த பூக்களை கொண்டு அபிஷேகம் செய்வது சிறப்பு. இவை அனைத்தும் காலை நான்கு முப்பது மணிக்கு தொடங்கும்.
அன்று இந்த அம்பாளுக்கு ஒன்பது விதமான அன்னங்கள் நெய்வேதனம் செய்வது இயல்பு.
கோவில் அமைப்பு:
         கோவிலில் உள்ள பிராகாரத்தில் பதினெட்டு வகையான நீரூற்று போன்று இருப்பது மிக சிறப்பாக உள்ளது.
விஷேஷ தினங்கள்:
             இந்த கோவிலில் சிவராத்தரி, மாசி மகம், திருவாதிரை, ஆடி கிருத்திகை ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடபடுகின்றது.
சஷ்டியப்த பூர்த்தி:
              இந்த கோவிலில் ஷஷ்டியப்பத பூர்த்தி செய்தால் சுவாமி மற்றும் அம்பாள் அதிக பலன்களை கொடுப்பர் என்பது ஐதீகம் இருப்பதால் இங்கு மாதத்தில் குறைந்தது இரு ஷஷ்டியப்த பூர்த்தி நடைபெறுவது சிறப்பு.
வேண்டுதல்கள்:
            இந்த கோவிலில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வஸ்த்திரம் சாற்றியும் , தீபம் ஏற்றியும் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றி கொள்கின்றனர்.

No comments:

Post a Comment