பித்து தெரியவும் , திருமணம் கைகூடிடவும் வழிபட வேண்டிய கோவில் :: வைத்தீஸ்வரர் திருக்கோவில்.

பித்து தெரியவும் , திருமணம் கைகூடிடவும் வழிபட வேண்டிய கோவில்:

         பைத்தியம் பிடித்தவர்கள் மற்றும் திருமண தடை உள்ளவர்கள் வணங்க வேண்டிய கோவில் வட வைத்தியநாதர் எனப்படும் வைத்தீஸ்வரர்
திருக்கோவில்.

எங்கு உள்ளது:

           இத்திருக்கோவில் சென்னை மாவட்டத்தில் உள்ள சாஸ்திரம்பாக்கம் என்ற ஊரில் உள்ளது.

எப்படி செல்வது:

             சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் நெடுவழிசாலையில் உள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:

             இந்த கோவில் காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது மணி வரையிலும் தான் திறந்திருக்கும்.

சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:

            இத்திருக்கோவிலில் வீற்றிருக்கும் வைத்தீஸ்வரர் என்றும் அம்பிகை தையல் நாயகி என்றும் அன்போடு அழைக்கப்படுகின்றனர்.

ஸ்தல வரலாறு:

        இந்த ஊரில் பெரிய சாஸ்திரம் கற்றவர்களும் கல்வியில் சிறந்து விளங்கியவரும் , வாஸ்த்து சாஸ்த்திரம் அறிந்தவர்களும் இருந்த ஊர் ஆகும். இந்த ஊரில் தான் அப்போது ஆட்சி செய்த பல்லவ அரசரிகள் இங்கு வந்து தான் குறி கேட்டு அதற்க்கு ஏற்ப எந்த ஒரு செயலையும் செய்வார் என்பது வரலாறு. பிறகு இந்த ஊரில் உள்ள மக்கள் ஒவ்வொன்றாக வேறு வேறு இடத்திற்கு சென்றதால் இந்த ஊர் இருந்த இடம் தெரியாமல் போனது.

        அதன் பின் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பைத்தியம் பிடித்த ஒருவன் இந்த ஊருக்கு வந்து கொண்டிருக்கும் போது புத்தரின் நடுவில் ஒரு சிவ பெருமான் இருப்பதை அறிந்து அந்த சிவ பெருமானுக்கு பக்கத்தில் உள்ள ஒரு குளத்தில் இருந்து விளையாட்டாய் தண்ணீர் ஊற்றினான். பிறகு நாளடைவில் அவனுக்கு பைத்தியம் தெளிந்தது .பிறகு அவனே இந்த சிவ பெருமானுக்கு மக்களிடம் ஆதரவு பெற்று கோவில் கட்டினான் என்பது வரலாறு.

கோவில் பெருமை:

      இந்த கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சித்தர்கள் வண்டுகள் வடிவில் வந்து சிவ பெருமானுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். மேலும் இந்த கோவிலில் தான் பிரம்மா அவருடைய சாபத்தால் கண் பார்வை அற்று கிடந்தார். அப்போது இங்கு வந்து தரிசனம் செய்த உடன் கண் பார்வை கிடைத்ததாகவும் வரலாறு கூறுகின்றனர்.

கோவில் அமைப்பு:

         இந்த கோவிலில் விநாயகர், முருகர், சண்டீஸ்வரர், துர்க்கை, பிரம்மா ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். மேலும் இந்த கோவிலில் காசி விஸ்வநாதர் சன்னதியும் உள்ளது.

திருமணத்தடை:

          இந்த கோவிலில் திருமணம் ஆகாதவர்கள் இங்குள்ள தையல் நாயகி அம்பாளை வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

வேண்டுதல்கள்:

         இக்கோவிலில் அதிகமாக திருமண தடை மற்றும் பைத்தியம் தெரியவும் அதிகமாக வந்து வணங்குகின்றனர். மேலும் வாஸ்த்து சாஸ்திரம் பார்ப்பவர்கள் இந்த கோவிலில் வந்து அர்ச்சனை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஊர் பெயர் காரணம்:

            முன்னொரு காலத்தில் இந்த ஊரில் தர்ப்பை புல் அதிகமாக இருந்தாதால் இந்த ஊருக்கு தர்ப்பை வானம் என்ற பெயர் வந்தது பிருகு இந்த  ஊரில் அதிகமாக சாஸ்திரம் கற்றவர்கள் இருந்ததால் இந்த ஊருக்கு சாஸ்த்திரம்பாக்கம் என்ற பெயர் வந்தது.

அருகில் உள்ள திருக்கோவில்:

        இந்த திருக்கோவிலுக்கு அருகில் பெசன்ட் நகரில் உள்ள சகல ஐஸ்வர்யங்களும் தரும் அஷ்டலக்ஷ்மி திருக்கோவில் உள்ளது.



No comments:

Post a Comment