கணபதி ஹோமமும் அதன் பயன்களும்

கணபதி ஹோமம்:

      கணபதி ஹோமம் என்பது முதற்கடவுளாகிய விநாயகருக்கு செய்யும் ஹோமம் ஆகும். இந்த கணபதி ஹோமம் செய்வதால் விநாயகர் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

கணபதி ஹோமத்தால் கிடைக்கும் பயன்:

         இந்த ஹோமனத்தினை மேற்கொள்பவர்கள் வாழ்வில் எந்த தடையும் இல்லாமல் நினைத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றி கொள்வர் . மேலும் இந்த ஹோமத்தினால் விநாயகர் அருள் கிட்டி சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.

எப்போது செய்வது:

            இந்த கணபதி ஹோமம் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். குறிப்பாக ஒரு தொழில் துவங்கும் போது செய்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.  எடுத்த காரியம் வெற்றி பெரும்.


என்று செய்வது:

           கணபதி ஹோமம் என்பது அதிகாலை நான்கு முதல் ஐந்து மணிக்குள் செய்து முடிக்க வேண்டும். குறிப்பாக வெள்ளி கிழமை அல்லது சதுர்த்தி நாள் அன்று செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

ஹோமத்தில் பயன்படுத்தும் பொருள்களின் பயன்:

              கணபதி ஹோமத்தில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு பயன் உண்டு. முக்கியமாக ஆயிரம் கீற்று தேங்காய் கொண்டு இந்த ஹோமத்தினை செய்தால் செல்வம் பெருகும். நெல்பொரி  கொண்டு நெய்வேத்தியம் செய்தால் அஷ்ட ஐஸ்வரியம் கிட்டும். திருமணம் விரைவில் கைகூட திரிமதுரம் பொடி மற்றும்  நெல்பொரி கொண்டு செய்ய வேண்டும்.  நினைத்த காரியம் அனைத்தும் நிகழ்ந்தேற
சாதம் மற்றும் நெய் கொண்டு செய்ய வேண்டும்.

               வாழ்வில் முன்னேற தாமரை மலர் கொண்டு கணபதி ஹோமம் செய்ய வேண்டும். தேன் கொண்டு செய்ய தங்கம் அதிகமாக சேரும். அருகம்புல் கொண்டு செய்தால் குபேரன் அருள் கிட்டி செல்வம் கொழிக்கும். மோதகத்தினை கொண்டு நெய்வேத்தியம் செய்தால்  நினைத்த காரியம் அனைத்திலும் வெற்றி காண்பர்.

எங்கு செய்யலாம்:

              கணபதி ஹோமத்தினை வீட்டில் அல்லது கோவிலில் நல்ல வேத வித்தகரை கொண்டு அனுஷ்டிக்க வேண்டும்.


எட்டு திரவியங்கள்:

            பொரி , அவல், சத்துமா,  கரும்புத்துண்டு, மோதகம், வாழைப்பழம், தேங்காய் கீற்று , எள் ஆகிய எட்டு திரவியங்கள் கணபதி ஹோமத்திற்கு மிக முக்கியமாக உள்ளது.

No comments:

Post a Comment