வலிப்பு மற்றும் நரம்பு சம்மந்தமான அனைத்து நோய்களும் தீர வழிபட வேண்டிய கோவில் பக்தரவல்லலீஸ்வரர் கோவில் ::
எங்கு உள்ளது :
இந்த திருக்கோவில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலை என்ற ஊரில் உள்ளது.
கோவில் பெயர்:
அருள்மிகு பக்தர வல்லீஸ்வரர் திருக்கோவில் திருவீழிமிழலை.
எப்படி செல்வது:
இந்த திருக்கோவிலுக்கு கும்பகோணத்தில் இருந்து திருவீழிமிழலை பேருந்தில் ஏறி திருவீழிமிழலை என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கலாம். அல்லது திருவாரூர் செல்லும் பேருந்தில் ஏறி திருவீழிமிழலை என்ற நிறுத்தத்தில் இறங்கலாம்.
எங்கு உள்ளது :
இந்த திருக்கோவில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலை என்ற ஊரில் உள்ளது.
கோவில் பெயர்:
அருள்மிகு பக்தர வல்லீஸ்வரர் திருக்கோவில் திருவீழிமிழலை.
எப்படி செல்வது:
இந்த திருக்கோவிலுக்கு கும்பகோணத்தில் இருந்து திருவீழிமிழலை பேருந்தில் ஏறி திருவீழிமிழலை என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கலாம். அல்லது திருவாரூர் செல்லும் பேருந்தில் ஏறி திருவீழிமிழலை என்ற நிறுத்தத்தில் இறங்கலாம்.
நடை திறந்திருக்கும் நேரம்:
இத்திருக்கோவில் காலை ஏழு மணி முதல் பதினோரு மணி வரையிலும் அதேபோல் மாலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் இருக்கும்.
சிவன் மற்றும் அம்பாள்:
இக்கோவிலில் வீற்றிருக்கும் சிவ பெருமான் பக்த்ர வல்லீஸ்வரர்வென்றும் அம்பாள் பக்த்ர வள்ளியம்மன் என்ற பெயரோடு காட்சி தருகின்றனர் .
கோவில் சிறப்பு :
கொடிய நோயான வலிப்பு மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள் இந்த கோவிலில் வந்து வழிபட்டால் நோய் பூரணமாக குணமாகும் என்பது ஐதீகம்.
ஸ்தல வரலாறு:
முன்னொரு காலத்தில் புரூரவஸ் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தார். அவருடை மனைவியின் பெயர் பக்தர வள்ளி. அவளுக்கு தீராத வலிப்பு நோய் இருந்து வந்தது. இதனை அறிந்த மன்னன் தந்து மனைவிக்கு இப்படி ஒரு நோய் அறிந்து மிகவும் துன்பப்பட்டான் . பிறகு அந்த நிறைய சிவன் கோவிலுக்கு அவளை அழைத்து சென்று நோய் குணமாக வேண்டி கொண்டார். ஆனால் பலன் இல்லாமல் போனது.
மிகவும் துன்பத்தில் இருந்த மன்னன் ஆழந்த நித்திரையில் இருந்தார். அப்போது அவர் மனைவியின் கனவில் சிவ பெருமான் தோன்றி திருவீழிமிழலை என்ற ஊர் ஒன்று உள்ளது அந்த ஊரில் ஒரு வலி குளம் ஒன்று உள்ளது .அதில் நீராடி என்னை மனதார பூஜித்தல் வலிப்பு வலி நீங்கும் என்று கூறி மறைந்தார். அவ்வாறே அரசியும் குளத்தில் குளித்து மனமார வேண்டி பூஜை செய்தார். வலிப்பு நோய் தீர்த்தது.
மிகவும் மகிழ்ச்சி அடைந்த சிவ அரசி அந்த சிவ பெருமானுக்கு கோவில் ஒன்று அமைக்க வேண்டும் என்று நினைத்து பெரியவர்கள் பலரின் ஆலோசனை கேட்டு இறுதியாக விநாயகரின் உதவியினை நாடி சிவ பெருமானுக்கு அந்த இடத்தில் கோவில் ஒன்றை கட்டி சிவ பெருமானுக்கு பக்தரவல்லீஸ்வரர் என்றும் அம்பிகைக்கு பக்தரவள்ளியம்மை என்ற பெயரும் சூட்டினார்.
கோவில் பெருமை:
இந்த கோவிலில் மட்டும் தான் தக்ஷிணாமூர்த்தி எனப்படும் சிவ பெருமானின் வேறு அம்சத்திருக்கு முயலகன் கிடையாது.
கோவில் அமைப்பு:
இந்த கோவிலில் விநாயகர், முருகர், தக்ஷிணாமுர்த்தி ஆகியோர் காணப்படுகின்றனர்.
சிறப்பு தினங்கள்:
பிரதோஷம், திருவாதிரை, கார்த்திகை தீபம், பவுர்ணமி ஆகிவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தீர்த்தம்:
இந்த கோவிலில் உள்ள தீர்த்தம் வலி தீர்த்தம் எனப்படும். இந்த கோவில் தீர்த்தத்தில் நீராடி சிவ பெருமானை மனதார வணங்கினால் வலிப்பு நோய் அகலும் என்பது ஐதீகம்.
வேண்டுதல்கள்:
பக்தர்கள் தங்களின் கோரிக்கை நிறைவேறிய உடன் விளக்கு போட்டும் அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்கின்றனர்.
No comments:
Post a Comment