திருமணம் விரைவில் கைகூட வணங்க வேண்டிய கோவில்:: சுந்தரேஸ்வரர் திருக்கோவில்.

திருமணம் விரைவில் கைகூட வணங்க வேண்டிய கோவில்:

           திருமணம் விரைவில் நடக்கவும் நினைத்தது அனைத்தும் நடக்கவும் வழிபட வேண்டிய கோவில் தான் சுந்தரேஸ்வரர் திருக்கோவில்.

எங்கு உள்ளது:

        இந்த திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கொரநாட்டு கருப்பூர் என்ற ஊரில் உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:

          இக்கோவில் காலை ஆறு மணி முதல் பத்து மணி வரையிலும் அதேபோல் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

சுவாமி பெயர்மற்றும் அம்பாள் பெயர்:

       அம்பாள் அன்னை அபிராமி என்ற பெயரில்  :
      இந்த கோவிலில் உள்ள சிவ பெருமான் சுந்தரேஸ்வரர் என்ற பெயர் கொண்டு       அம்பாள் அன்னை அபிராமி என்ற பெயரில்  காட்சி தருகிறார்.

கோவில் சிறப்பு:

       இந்த கோவிலில் நினைத்தது அனைத்தும் நிறைவேறவும் , திருமணம் விரைவில் கைகூடவும் பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.

ஸ்தல வரலாறு:

        அனைத்து உலகத்தையும் படைக்கும் தொழில் மேற்கொள்ளும் பிரம்மாவிற்கு உபதேசம் வேண்டியும் அறிவு கூர்மை வேண்டியும் சிவ பெருமான் ஒன்றை உருவாக்கி அதற்க்கு பூஜை செய்தார் அந்த லிங்கம் தான் சுந்தரேஸ்வரர் என்படும் . பிறகு அந்த லிங்கத்தினை வைத்து சோழர்கள் ஒரு கட்டிய கோவில் தான் சுந்தரேஸ்வரர் கோவில்.

அம்பாள் தோற்றம்:

          இங்குள்ள காளி அம்மன் வரலாறு மிகவும் மெய் சிலிர்க்க வைக்கும் வரலாறாக உள்ளது. ஊரில் உள்ள மக்கள் அனைவரும் ஒரு நாள் காவேரி கரைக்கு சென்றிருக்கும் போது ஒரு பேட்டி ஒன்று அந்த தண்ணீரில் வருவதை பார்த்து மக்கள் அனைவரும் அந்த பெட்டியை எடுத்து அதனை திறந்து பார்க்க வேண்டும் என்ற நோக்கில் இருந்தனர். அப்போது அந்த பெட்டியை திறந்தார் அதில் காளி அம்மனின் கழுத்து வரை உள்ள ஒரு சிலை ஒன்று இருந்தது. மக்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் போது ஒரு சிறிய பெண்ணின்  மேல் காளி இறங்கி காளியின் பெருமைகளை கூறிவிட்டு இந்த காளியின் கதையை கூறினாள்.

காளி வரலாறு:

         விக்கிரமாத்தித்தன் என்ற மன்னன் பூஜித்த காளி என்றும் அந்த மன்னன் காளியினை இரண்டாக பிரித்து மூட்டை கட்டி ஒரு பெட்டியில் வைத்து இரண்டையும் வெவ்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று சூழல் மிகுந்த ஒரு ஆற்றில் போட்டார் என்றும் அந்த சிறுமி கூறினாள். பிறகு அந்த காளி அம்மனுக்கு எப்படி பூஜை செய்ய வேண்டும் என்ற விவரத்தையும் அவளே கூறியது மிக சிறப்பு.

     பிறகு அந்த காளி அம்மனை ஊர் கடைசியில் உள்ள ஒரு சிறிய கீற்று கொட்டகைக்குள் வைத்து வழிபட துவங்கினர். வெள்ளி கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் அம்மனுக்கு படையல் போட்டு அம்மனை வழிபட்டனர். ஒரு நாள் அந்த கொட்டகைக்கு தீப்பிடுத்தது மக்கள் அனைவரும் மிகவும் போராடி அந்த அம்மனை அந்த கொட்டகையில் இருந்து காப்பாற்றினார். பிறகு அந்த அம்பாளை எங்கு வைப்பது என்று தெரியாமல் விழித்து கொண்டு இருக்கும் காஞ்சி மகா பெரியவர் இங்கு வந்து அந்த அம்பாளை சிவ பெருமானின் கோவிலான சுந்தரேஸ்வரர் கோவிலில் வைத்து அம்மன் கூறியபடி வணங்க வேண்டும் என்று கூறினார்.

     ஆதலால் அன்று முதல் இந்த கோவிலில் அம்பாள் கூறிய படியே பூஜைகள் அனைத்தும் செய்யப்படுகின்றன.
ஊரின் பெயர்:

       இந்த ஊருக்கு முன்னொரு காலத்தில் திருப்படலனம் என்ற பெயர் உண்டு. பிறகு இந்த ஊருக்கு காளி வந்ததால் இந்த ஊர் காளியின் ஊர் என்று கூறினார் பிறகு காளி அம்மன் குறைவாக வந்ததால் இந்த ஊருக்கு குறைகாளி என்ற பெயரும் பிறகு அது மருவி கொரநாட்டு கருப்பூர் என்ற ஆனது.
சிறப்பு தினங்கள்:

         ஆடி அம்மாவாசை, வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமை, ஆடி கிருத்திகை, திருவாதிரை, சிவ ராத்தரி ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கோவில் அமைப்பு:

        இந்த கோவிலில் விநாயகர், முருகர், நவகிரகம், தக்ஷிணாமூர்த்தி, துர்க்கை மற்றும் பைரவர் ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருவது சிறப்பாக உள்ளது.

ஸ்தல விருக்ஷம் மற்றும் திருக்குளம்  :

         இத்திருக்கோவில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்ததாக உள்ளது. இந்த கோவிலில் ஸ்தல விருக்ஷமாக பாதிரி மரமும் திருக்குள தீர்த்தமாக பிரம்மா தீர்த்தமும் உள்ளது.

வேண்டுதல்கள்:

         பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய உடன் அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் அர்ச்சனை செய்தும் விளக்கு ஏற்றியும் அபிஷேகம் செய்தும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.



No comments:

Post a Comment