திருமண தடை , குழந்தை பெரு மற்றும் நாக தோஷம் தீர வழிபட வேண்டிய கோவில் :: நடனபுரீஸ்வரர் திருக்கோவில்.

திருமண தடை , குழந்தை பெரு மற்றும் நாக தோஷம் தீர வழிபட வேண்டிய கோவில்:

            திருமண தடை அகலவும், குழந்தை பேரு பெறவும், ஜாதகத்தில் நாக தோஷம் இருந்தால் அவற்றில் இருந்து விடுபடவும் வழிபட வேண்டிய கோவில் தான் நடனபுரீஸ்வரர் திருக்கோவில்.

எங்கு உள்ளது:

          இந்த திருக்கோவில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கண்களாஞ்சேரி என்ற ஊரில் அமைந்துள்ளது.

எப்படி செல்வது:

            இத்திருக்கோவிலுக்கு திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பேருந்தும் ஏறி கண்களாஞ்சேரி என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, பிறகு நாகூர் சாலையில் கல்யாண இருப்பு என்ற ஊரில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

             திருவாரூரில் இருந்து சுமார் பதிமூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:

                இந்த திருக்கோவில் காலை ஐந்து மணி முதல் பதினோரு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மாய் வரையிலும் திறந்திருக்கும்.

சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:

             இக்கோவிலில் உள்ள சிவ பெருமான் நடனபுரீஸ்வரர் என்றும் அம்பிகை நடனபுரிஸ்வரி என்ற பெயர் கொண்டும் அழகுற காட்சி தருகின்றன.
கோவில் சிறப்பு:

       இந்த கோவிலில் அதிகமாக திருமணத்தடை மற்றும் குழந்தை பேரு மற்றும் நாக தோஷங்கள் நிவர்த்தியாக பக்தர்கள் அதிகம் வருகின்றனர்.

 ஸ்தல வரலாறு:

           இத்திருக்கோவில் சோழர்கள் கட்டிய கோவில் ஆகும். திருவாரூரில் உள்ள தியாகராஜர் தனது மனைவியை அழைத்து கொண்டு இந்த உலகத்தில் தர்மங்கள் அனைத்து நிலைநாட்டிட வேண்டும் என்றும் , உலா மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று ஒரு யாகத்திற்கு சென்றார். அப்போது அம்பாள் மற்றும் சிவ பெருமான் புலவன் மற்றும் புலவர் மனைவி வேடம் போட்டு கொண்டு இந்த ஊரில் இருந்து நடனம் ஆடி பிறகு சென்றனர். பிறகு இதனை அறிந்த சோழ மன்னன் இந்த ஊரில் ஒரு கோவில் கட்டினான்.

          அந்த கோவிலில் அம்பாள் மற்றும் சுவாமி பிரதிஷ்டை செய்து நடனேஸ்வரர் என்றும் நாடானேஸ்வரி என்றும் பெயர் சூட்டி வழிபட்டான்.

கோவில் அமைப்பு:          

              இத்திருக்கோவிலில் சொறி விநாயகர், முருகர், இடப்பக்கம் தலை சாய்த்தபடி உள்ள நந்தி, துர்க்கை, பைரவர், நாகர் மற்றும் சண்டீஸ்வரர் ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.

 சிறப்பு தினங்கள்:

             இந்த கோவிலில் பிரதோஷம், அமாவாசை , திருவாதிரை, கார்த்திகை தீபம் மற்றும் மாசி மகம் முதலியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஸ்தல விருக்ஷம் மற்றும் திருக்குளம்:

           இந்த கோவிலில் அரசமரம் மற்றும் வில்வ மரமும் திருக்குளத்தில் லட்சுமி தீர்த்தமும் உள்ளது. இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்தது.

வேண்டுதல்கள்:           

           பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்து விளக்கு போடும் , புது வஸ்திரம் சாற்றியும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.

அருகில் உள்ள கோவில்:

           இந்த கோவிலுக்கு அருகில் சுயம்பு லிங்கமாக உள்ள  பாதாளப்பர் திருக்கோவில் உள்ளது.


No comments:

Post a Comment