செல்வங்கள் பெறுக வணங்க வேண்டிய கோவில் :
செல்வங்கள் பெறுக கடன் தொல்லையில் இருந்த அகல வழிபட வேண்டிய கோவில் தான் ஜம்பு நாத சுவாமி திருக்கோவில்.
எங்கு உள்ளது;
இந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நல்லிச்சேரி என்ற ஊரில் உள்ளது.
எப்படி செல்வது:
இத்திருக்கோவிலுக்கு தஞ்சாவூரில் உள்ள அய்யம்பேட்டை என்ற ஊரில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆட்டோவில் செல்லலாம்.
நடை திறந்திருக்கும் நேரம் :
இத்திருக்கோவில் காலை எட்டு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.
சுவாமி மற்றும் அம்பாள் பெயர் :
இத்திருக்கோவிலில் உள்ள சிவ பெருமான் ஜம்புநாதஸ்வாமி என்றும் அம்பாள் அலங்காரவல்லி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.
கோவில் பெருமை:
இந்த கோவிலில் சப்த கன்னியரின் ஒருவரான வைஷ்ணவி தேவி வணங்கிய திருத்தலம்.
ஸ்தல வரலாறு:
இந்த கோவில் இருந்த இடம் அடர்ந்த காடாய் இருந்தது. இந்த கோவிலை மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கட்டியதாக கோவிலில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. மேலும் இந்த கோவிலை சப்த கன்னியரின் ஒருவரான வைஷ்ணவி தேவி தனது பதினெட்டு வயதில் சிவ பெருமானையும் அம்பாளையும் ஒரு சேர வழிபட்டதாக கூறப்படுகிறது.
கோவில் அமைப்பு:
இந்த கோவிலில் இரட்டை விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், நவகிரகம், நந்தி மற்றும் விஷ்ணு துர்க்கை ஆகியவர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருவது சிறப்பு.
ஊர் பெயர் :
இப்போது நல்லிச்சேரி என்ற இந்த ஊர் முன்னொரு காலத்தில் பல பெயர்களை கொண்டது சிறப்பு. முதலில் இந்த கோவிலை நந்தியெம்பெருமான் வந்து வழிபட்டதால் இந்த கோவிலில் நந்திகேஸ்வரரும் என்ற பெயர் வந்தது. பிறகு இந்த ஊரை சுற்றி நிறைய வயல் வெளிகள் இருந்ததால் இந்த கோவிலுக்கு பக்கத்தில் அதிகமாக நெல் குவித்து வைக்கப்பட்டிருக்கும். ஆதலால் இவை நெல்லுச்சேரி என்று அழைக்கப்பட்டது. பிறகு அது திரிந்து இப்போது நல்லிச்சேரி என்று கூறப்படுகின்றனர்.
சிறப்பு தினங்கள்:
இந்த திருக்கோவிலில் பவுர்ணமி, திருவாதிரை, பிரதோஷம், திருக்கார்த்திகை மற்றும் மாசி மகம் ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வேண்டுதல்கள்:
இந்த கோவிலில் செல்வங்கள் பெருகவும் கஷ்டங்கள் குறையவும் பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். மேலும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் சிறப்பு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம்சாற்றியும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.
பழமை:
இந்த கோவில் சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்தது ஆகும்.
.

No comments:
Post a Comment