லட்சுமி குபேர பூஜை மற்றும் அதன் பயன்களும்




லட்சுமி குபேர ஹோமம் :

        கடன் தொல்லையில் இருந்து விடுபட மற்றும் செல்வம் குறையாமல் இருக்க ஒவ்வொரு வீட்டிலும் லட்சுமி குபேர ஹோமம்  செய்வது அவசியமாக உள்ளது.

எப்போது  செய்வது:  

       இந்த பூஜையை செய்வதற்கு நல்ல நாளினை தேர்ந்தெடுப்பது அவசியம்.  எதாவது ஒரு வெள்ளி கிழமை அல்லது பவுர்ணமிகளில் தொடங்க  வேண்டும் . பிறகு அந்த நாளில் இருந்து ஒன்பது வாரம் அல்லது ஒன்பது மாதம் என செய்ய வேண்டும். குடும்பத்தில் யார் வேண்டுமானாலும் இதனை செய்யலாம். ஆனால் ஒன்பது வாரம் அல்லது மாதம் ஒருவரே செய்வது மிக சிறப்பு. ஆனால் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் மட்டுமே செய்ய வேண்டும்.

என்ன தேவை:

         இந்த பூஜைக்கு ஒன்பது காசு முறையே எண்பத்து ஒரு காசு இருக்க வேண்டும். அந்த காசானது எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக ஒரு ரூபாய் எடுத்து கொண்டால் எண்பத்தியொரு ஒரு ருபாய் காசுகள் இருக்க வேண்டும்.

எப்படி செய்வது:

           இந்த பூஜையை செய்ய தேர்ந்தெடுத்த நாளில் அதிகாலை எழுந்து நீராடி, முதலில் குலதெய்வத்தையும் பிறகு விநாயகரையும் மனதார வேண்டி கொள்ள வேண்டும்.

         பிறகு தீபம் ஏற்ற வேண்டும் . பிறகு சுவாமி முன் ஒரு மரத்தினால் ஆனா பலகை வைத்து அந்த பலகையில் கீழே உள்ள கட்டத்தினை வரைய வேண்டும். அதற்க்கு உள் உள்ள எண்ணினை அரிசிமாவால் எழுத வேண்டும். கட்டம் குங்குமத்தால் போட வேண்டும். பிறகு கட்டத்திற்கு மேல் ஸ்ரீ என்ற லட்சுமியின் திருநாமத்தினை மஞ்சள் பொடி கொண்டு எழுத வேண்டும். பிறகு கட்டத்தில் காசுகளை வைக்க வேண்டும். கட்டத்தில் எழுதியிருக்கும் எண்களை  மறைக்காதவாறு காசுகளை  வைக்க வேண்டும்.  கட்டத்தில் வைத்த  நாணயங்களின் மேல் லட்சுமி எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். ஆகவே வரைந்த கட்டத்தின் முன் நெய் தீபம் அல்லது நல்லஎண்ணெய் தீபம் வைக்க வேண்டும்






பூஜிக்கும் முறை:

        இப்போது சில உதிரி புஷ்பங்களை கொண்டு  மஹாலக்ஷ்மி தாயே எங்களாலும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ வளம் கொழித்து அவை நீங்காமல் காக்க வேண்டும் என்று மனதார பூஜிக்க வேண்டும்.

ஸ்லோகம்:

         மனதார வேண்டிய பிறகு இந்த ஸ்லோகத்தினை சொல்லி உதிரி புஷ்பம் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.

       மகாலட்சுமியே போற்றி! 
      மங்கள லட்சுமியே போற்றி! 
      தீபலட்சுமியே போற்றி! 
      திருமகள் தாயே போற்றி!   
     அன்னலட்சுமியே போற்றி! 
     கிருஹ லட்சுமியே போற்றி! 
     நாரண லட்சுமியே போற்றி! 
     நாயகி லட்சுமியே போற்றி!   
    ஓம் குபேர லட்சுமியே போற்றி போற்றி!

         
                    என்று கூறியவாறே  சிறிய புஷ்பத்தை நீங்கள் வரைந்திருக்கும் குபேர யந்திரத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் போடவேண்டும் .
வளம் யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி!
குலம் செழிக்கச் செய்திடுவாய் குபேரனே போற்றி!
செல்வங்கள் தந்திடுவாய் சிவன் தோழா போற்றி!
உளமாரத் துதிக்கின்றோம் உத்தமனே போற்றி போற்றி!
இந்தத் ஸ்லோகத்தை கூறி மனதார குபேரனை வேண்டி கொள்ள வேண்டும் .

நெய்வேத்தியம்:

           அர்ச்சனை செய்தவுடன் சாம்பிராணி ஏற்ற வேண்டும். பிறகு பால் அல்லது பால் பாயசம் கொண்டும் நெய்வேத்தியம் செய்ய வேண்டும். பிறகு சூடம் ஏற்ற வேண்டும். பூஜை நிறைந்தது.

மங்கள பொருட்கள்:

          பூஜை முடிந்த அன்றைய மாலை பொழுதில் யாருக்காவது வெற்றிலை, பாக்கு , மஞ்சள், குங்குமம்  ஆகியவை கொடுக்கலாம். வசதி குறைவாக இருந்தால் பூஜை முடியும் ஒன்பதாவது முறையில் வைத்து கொடுக்க வேண்டும்.

மறுநாள்:

            பூஜை முடிந்த அன்று மறுநாள் நாணயங்களை பாதுகாக்க வேண்டும் . கட்டத்தினை ஒரு ஈர துணி கொண்டு அழிக்க வேண்டும். அடுத்த முறை வேறு ஒரு நாணயணத்தினை வைத்து செய்ய வேண்டும் . இதேபோல் ஒன்பது வாரம் செய்ய வேண்டும்.

இறுதியில் என்ன செய்ய வேண்டும்:

       ஒன்பது வார முடிவில் பத்தாவது வாரம் பூஜை செய்த நாணயங்களை எடுத்து கொண்டு கோவிலில் உள்ள சிவ பெருமானின் உண்டியலில் போட வேண்டும் அல்லது பெருமாளின் கோவிலில் உள்ள தாயார் சன்னதியில் போட  வேண்டும்.

மஹாலக்ஷ்மி வருகை:

          ஒன்பது வார முடிவில் யாருக்காவது மஞ்சள் குங்குமம் போன்ற மங்கள பொருட்கள் வைத்து மனதார கொடுக்க வேண்டும். மஹாலக்ஷ்மியே மங்கலப்பொருட்கள் வாங்க வருவார் என்பது ஐதீகம்.

குபேர பூஜை:

            இந்த குபேர பூஜையினை வருடத்திற்கு ஒரு முறையாவது அனுஷ்டித்து வந்தால் செல்வம் பெருகி, குறையாத செல்வமும் வீட்டில் மகிழ்ச்சியும் பொங்கும் என்பது ஐதீகம்.

       





     

No comments:

Post a Comment