நல்ல பதவி கிடைக்க நீண்ட ஆயுள் பெற வழிபடவேண்டிய கோவில் தான் தண்டீஸ்வரர் கோவில்

எங்கு உள்ளது:

       இந்த திருக்கோவில் சென்னையில் உள்ள வேளச்சேரி என்ற இடத்தில் உள்ளது.

 நடை திறந்திருக்கும் நேரம்:

       இந்த திருக்கோவில் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

சிவன் மற்றும் அம்பாள்:

      இங்குள்ள சிவ பெருமான் தண்டீஸ்வரர் என்றும் அம்பிகை கருணாம்பிகை என்ற பெயர் கொண்டு காட்சி தருகின்றனர்.

கோவில் சிறப்பு:

       இந்த திருக்கோவிலில் நல்ல பதவி கிடைப்பதற்கும் , போன பதவி கிடைப்பதற்கும், நீண்ட ஆயுள் பெறவும் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது

ஸ்தல வரலாறு:

       முன்னொரு காலத்தில் சோமசுரன் என்ற அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் அனைவரையும் துன்புறுத்துவதில் மிகவும் வல்லமை பெற்று  இருந்தான்.ஒரு நாள் அந்த அரக்கன் பிரம்மாவிடம் இருந்து நன்கு வேதங்களான ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வண வேதங்களை எடுத்து வந்தான். வேதங்கள் மிகவும் துன்பப்பட்டன.

       பிறகு அந்த நன்கு வேதங்களையும் மஹா விஷ்ணு அர
க்கனிடம் இருந்து கைப்பற்றி பிரம்மாவிற்கு  அளித்தார். அந்த நான்கு வேதங்களும் அரகனிடம் இருந்த தங்களின் பாவத்தினை போக்குவதற்காக சிவ பெருமானை வேண்டி  இருந்து தங்களின் பாவத்தை போக்கி கொண்டது..

கோவில் அமைப்பு:

     இந்த கோவிலில் முருகர்விநாயகர்,வீரபத்திரர் , ,லட்சுமி, சரஸ்வதி ,  
துர்க்கை, சப்த கன்னியர் ஆகியோர் உள்ளனர்.

வீரபத்திரர் அமைப்பு:

      பொதுவாக வீரபத்திரர் நின்ற கோலத்தில் தான் எல்லா கோவிலில்களிலும் காட்சி தருவார் . ஆனால் இந்த கோவிலில் அமர்ந்த நிலையில் காட்சி தருவது மிகவும் சிறப்பாக உள்ளது.

வீரபத்திரர் வரலாறு: வீரபத்திரர் தோன்றிய கதை:

     வலிமை மிக்க அசுரன் ஒருவன் சப்தகன்னியர்களை மிரட்டி கொண்டு இருந்தான். சப்த க்ளன்னியர் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த அரக்கனை அழிக்க வேண்டும் என்று புறப்பட்டனர். ஆனால் அரக்கனுக்கு பதிலாக அறியாமல் ஒரு முனிவரை கொன்று விட்டனர். இதனால் அவர்கள் அனைவருக்கும் முனிவரைக்கொன்ற பாவம் தொற்றி கொண்டது .

     ஆனால் அரக்கனின் மிரட்டல்  அடங்கவில்லை.முனிவரை கொன்ற சாபம் மற்றும் அரக்கனின் மிரட்டல் இவற்றால் அவர்கள் செய்வதறியாது நின்று சிவ பெருமானை வணங்கி வேண்டினர்பெருமானும் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி வீரபத்திரர் ஒன்றை உருவாக்கி அதனை அரக்கனை அழித்து சப்த கன்னியரை காப்பாற்றுமாறு ஆணையிட்டார். அதுவே வீரபத்திரர் என்று ஆனது.

வீரபத்திரர் அமைப்பு:

      இந்த கோவிலில்  வீரபத்திரர் அமர்ந்த  நிலையில் காட்சி தருகிறார். மேலும் அவர் வலது காலை மடக்கி கையில் ருத்திராக்ஷ மலை வைத்து கொண்டு இடது கையில் கோடரி என்ற ஆயுதம் ஏந்தி காட்சி தருகிறார்.

செல்லி அம்மன் சன்னதி:

       இந்த கோவிலில் சப்த கன்னியர் அமர்ந்த இடம் செல்லியம்மன் சன்னதி என்று அழைக்கப்படுகிறது. சப்த கன்னியரின் ஒரு கன்னியர் மட்டும் செல்லி அம்மன் என்று அழைக்கப்படுகிறது. இந்த அம்மனுக்கு பவுர்ணமியில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.


யோக தக்ஷிணாமூர்த்தி:

     இந்த திருக்கோவிலில் தக்ஷிணாமூர்த்தி யோக தக்ஷிணாமூர்த்தி என்ற பெயர் கொண்டு விளங்குகிறார். வேதங்கள் யாவும் இந்த இடத்தில் தோஷம் நீங்க பெற்றதால் அவ்வாறு பெயர் வந்ததாக கூறப்படுகிறது.






No comments:

Post a Comment