கடன் தீர வழி பட வேண்டிய கோவில்:
கடன் தொல்லை தீரவும், பிள்ளை பேறு பெறவும், திருமண தடை நீங்கவும்
வழிபட வேண்டிய மிக முக்கிய திருத்தலமாக உள்ளது பத்ரகாளி அம்மன்
திருக்கோவில்.
எங்கு உள்ளது:
இந்த திருக்கோவில் திருவாரூர்
மாவட்டத்தில் பூந்தோட்டம் என்ற ஊரில் அமைந்த்துள்ளது.
நடை திறந்திருக்கும் நேரம்:
இந்த திருக்கோவில் ஆனது காலை ஏழு
மணி முதல் பதினோரு மணி வரையிலும் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும்
திறந்திருக்கும்.
மூலவர் பெயர்:
இந்த கோவிலில் வீற்றிருக்கும்
அம்பாள் பெயர் அஷ்டபுஜ பத்ரகாளி அம்மன்
மற்றும் மாப்பிள்ளை வீராசாமி திருக்கோவில்.
ஸ்தல வரலாறு:
இந்த கோவிலில் அம்மன் மிகவும்
பழங்கால கோவிலாக திகழ்கிறது. இந்த அம்மன் இந்த ஊரையே காப்பாற்றும் தெய்வமாக
உள்ளது. முன்னொரு காலத்தில் இந்த ஊரில் அதிகமாக மக்களின் நகை மற்றும் பணம் காணமல்
போய் உள்ளது. மக்கள் அனைவரும் ஒன்று
சேர்ந்து செய்வதறியாது இருந்தனர்.
பிறகு சகலத்திற்கும் சாட்சியாக
விளங்கும் மாரி அம்மனை இந்த ஊரில் உள்ள பக்தர்கள் வேண்டி கொண்டனர்.
அம்மன் மனம் உருகி இந்த ஊரை காபாற்றுவதன்
பொருட்டு மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரு அம்மன் சிலையை நிறுவினர்.
அந்த அம்மனே காக்கும் தெய்வமாக
இந்த ஊரில் உள்ளது. பிறகு அம்மனின் மகிமையை அறிந்த சிலர் இந்த அம்பாளுக்கு கோவில்
காட்டி சில சில சிலைகளை நிறுவினர்.
அம்பாள் அமைப்பு:
இந்த அம்பாள் எட்டு கைகளோடு காட்சி
தருவதோடு மட்டும் அல்லது முதல் கையில் அரக்கனின்
தலை,இரண்டாம்
கைளில் தீச்சட்டி,
மூன்றாம் கையில் சூலம்,
நான்காம் கையில் கத்தி,
ஐந்தாம் கையில் பூ உடைய தாம்பாளம்,
ஆறவது கையில் குங்குமத்தை ஏந்திய
தாம்பாளம். மற்ற இரு கைகள் பக்தர்கள் அருபாளிப்பதர்க்கு . என்று எட்டு கைகளுடன்
காட்சி தருகிறாள்.
மேலும் இந்த அம்பாள் அருகில் சில
சிறுவர்கள் மாலையுடன் நிற்பதாக சிற்பங்கள் உள்ளது. அம்பாள் காதில் தூது மற்றும்
கழுத்தில் தாலி, பச்சை நிற உடை, கிரீடம் , மூக்குத்தி ஆகியவற்றுடன்
அழகாக உண்மையான அம்பாள் இருப்பது போன்று
காட்சி தருகிறாள்.
மாப்பிள்ளை சுவாமி அமைப்பு:
இந்த சுவாமி, உட்கார்ந்து இருந்த
படி அழகுடனும் புன்முருவளுடனும் அருள்பாலிக்கிறார்கள். மேலும் இந்த ஸ்வாமின்
பின் இருவர் காவல் காக்க நிற்கின்றனர்.
பூந்தோட்டம் பெயர் காரணம்:
முன்னொரு காலத்தில் இந்த ஊரில்
அதிகமாக பூக்கள் அதிகமாக மிகுந்த காடு இருந்தது. அந்த காட்டில் இருந்து பூக்களை
பறித்து இங்குள்ள கோவில் அனைத்திருக்கும்
மக்கள் அனுப்பி வைப்பார். பிறகு இந்த ஊரில் அந்த காடுகளை அழித்து பல
வீடுகளை மக்கள் அமைத்தனர்.பூக்கள் அதிகமாக
இருந்த காரணத்தினால் இந்த ஊர் பூந்தோட்டம் என்று பெயர் பெற்றது.
கோவில் அமைப்பு:
இந்த கோவில் ஆற்றின் வடக்கு புறம்
பார்த்து அமைந்துள்ள கோவிலாக உள்ளது. மேலும் இந்த கோவிலில் இடது புறம் ஒரு மண்டபம்
உள்ளது. அந்த மண்டபத்தில் தான் சுமார் ஐநூறு பக்தர்கள் வந்து அம்பாளை தரிசனம்
செய்யும் விதத்தில் உள்ளது.
இந்த கோவிலில் பிள்ளையார், கால பைரவர், நாக கன்னி, குதிரையை பிடித்த காவல்
தெய்வம், ஆகியோர்
அமைந்துள்ளார்.
கால பைரவர் தோற்றம்:
கால பைரவர் இங்கு ஒரு குடத்தில்
ஒரு அறுபத்தி நான்கு அவதாரத்தில் கிழக்கு பார்த்த படி பக்தருக்கு காட்சி தருவது
இந்த கோவிலில் மிக சிறப்பாக உள்ளது. இந்த பைரவரை அஷ்டமி நாளில் வழிபட கடன் தொல்லை
நீங்கும் என்பது ஐதீகம்.
வேண்டுதல்கள்:
இந்த கோவிலில் கடன் தொல்லை தீர, திருமண தடை நீங்க, குழந்தை பேரு பெற்றிட இந்த
கோவிலில் வந்து மனமார உருகி வேண்டி கொண்டால் நடக்கும் என்பது ஐதீகம்.
பக்தர்கள் தங்களின் கோரிக்கை
நிறைவேறிய உடன் சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும் பொங்கல் இட்டும்
நிய்வேதனம் செய்கின்றனர்.
பவுர்ணமி நாளில் வரும் அஷ்டமி
நாளில், பூசணிக்காய்
அல்லது தேங்காயில் தீபமேற்றி தங்கள்
கோரிக்கையை நிறைவேற்றுகின்றனர்.
திருமண தடை நீங்க அம்பாளுக்கு
கல்யாணத்தில் செய்யும் அலங்காரங்கள் அனைத்தும் அம்பாளுக்கு செய்து தகல் திருமண
தடையை போக்கி கொள்கின்றனர்.
ஸ்தல விருக்ஷம்:
இந்த கோவில் சுமார் ஐநூறு
ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் தல விருக்ஷமாக அரச மரமும்,வேம்பு மரமும்
உள்ளது. சதல தீர்த்தமாக அரசால் மாநதி தீர்த்தம் உள்ளது.
which is the best date to do pooja in punnai nallur marriyamman temple...any specific dates?
ReplyDelete