NINAITHTHATHU NIRAIVERUM SOWNDHARESWARAR THRIUKOVIL :: SAITHAPETTAI


 நினைத்தது நிறைவேற வணங்க வேண்டிய கோவில்:

       நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேற வணங்க வேண்டிய கோவில்  சௌந்தேஸ்வரர் திருக்கோவில் .

எங்கு உள்ளது:

         இந்த திருக்கோவில் சென்னையில் உள்ள சைதாப்பேட்டை என்ற இடத்தில் பிராமண தெருவில் உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:

         இந்த திருக்கோவில் காலை ஐந்து மணி  பத்து மணி  வரையிலும் அதேபோல் மாலை நன்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும்  இருக்கும்.

சுவாமி பெயர்:

           இக்கோவிலில் உள்ள சிவபெருமான் சௌந்தரேஸ்வரர் என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார்.

கோவில் சிறப்பு:

            இந்த கோவிலில் மிக சிறப்பாக கருதப்படுவது நினைத்தது அனைத்தும்  நிறைவேறும் கோவில் மற்றும்  இந்த திருக்கோவிலில் மட்டும் தான்  ஸ்தல விருக்ஷங்கள் உள்ளது. இது காண கிடைக்காத ஒன்றாகும்.

ஸ்தல வரலாறு:

    சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வணிகம் செய்யும் வணிகர் ஒருவர் தனது வணிகம் மிகவும் நஷ்டத்தில் இருந்ததால் அந்த வணிகர் செய்வதறியாது இருந்தார். அந்த வணிகர் சிவ பெருமான் மீது  தீராத பக்தியுடன் இருப்பர். ஆதலால் வணிகம் மிகுந்த நஷ்டத்தில் இருப்பதால் சிவ பெருமானிடம் வணிகம் சீராக சென்றால் தனக்கு கோவில் கட்டுவதாக சிவ பெருமானிடம் வேண்டி கொண்டார் . சிவ பெருமானும் அவரது வணிகம் லாபமடைய  செய்தார்.ஆகவே அவர் சிவ பெருமானுக்கு கட்டிய கோவில் சௌந்தரேஸ்வரர் திருக்கோவில்.
      மேலும் இந்த கோவிலுக்கு பூஜைகள் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் அவரே இந்த கோவிலில் எழுதி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த  கோவிலில் அவர் எழுதி வைத்த படி தான் பூஜைகள் நடக்கின்றன என்பது சிறப்பு மிக்கது.

ஊர் பெயர்:

     இந்த ஊர் முன்னொரு காலத்தில் வட நாரையூர்  என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டது. நாரை என்ற பறவை வகை  இந்த ஊரில் உள்ள சிவ பெருமானை  இந்த ஊர் வடநாரையூர் என்ற அழைக்கப்பட்டது.

ஸ்தல விருக்ஷம்:

       இந்த கோவிலில் ஸ்தல விருக்ஷம் வன்னி , கொன்றை, வில்வம் ஆகிய மூன்று ஆகும்.

கோவிலில் விஷேஷ தினங்கள்:

        இந்த கோவிலில் பிரதோஷம் , கிருத்திகை, மகம், ஷஷ்டி ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

வேண்டுதல்கள்:

          இந்த கோவிலில் பக்தர்கள் தங்களின் கோரிக்கை நிறைவேறியதும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு  விளக்கு ஏற்றி தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.

       






































































       



No comments:

Post a Comment