ராகுஸ்தலம் :: ராகு பரிகார கோவில் :: Thirunageswaram temple
ராகு பரிகார
ஸ்தலம்
ஊரின் பெயர் : திருநாகேஸ்வரம்
மூலவர் : அருள்மிகு
நாகநாத சுவாமி
அம்மன் : கிரிகுஜாம்பிகை .
பிறையணி அம்மன்,
ராகுபகவான் கோவிலின் வெளி பிராகத்தில்
இருதேவியருடன் உள்ளார் .
காலசர்ப்ப தோஷம்,
களத்திற தோஷம் முதலிய தோஷங்கள்
இக்கோவிலில் உள்ள ராகுவை வழிபடுவதன் மூலம் நீங்கும் .
அமைந்துள்ள இடம் : கும்பகோணதிலிருந்து பேருந்தில் காரைக்கால் சீல்லும் வழியில்
சரியாக ஆறு கிலோ மீட்டர் சென்றால் திருநாகேஸ்வரம் உள்ளது . இதன் அருகே
உப்பிலியப்பன் கோயில் என்ற பெருமாள் கோவிலையும் சென்று வழிபடலாம்
வரலாறு
நாகேஸ்வரம் என்ற ஊரில் சுசீல முனிவர் என்று ஒருவர் இருந்தார் . அவருடைய மகன்
சுகர்மன் என்பவன் காட்டின் வழியே சென்று கொண்டிருந்தபோது தக்கன் என்ற பெயருடைய
பாபு அவனை கடித்தது . உடனே கோபம் கொண்ட முனிவர் நீ மனிதனாக பிறக்க வேண்டும் என்று
பாம்பிற்கு சாபம் தந்தார் .
ராகுவுக்குரிய சிறப்பான என்ற பெயர் பெற்ற தலம் இது .
சாபத்திலிருந்து விடுபடுவதற்காக
தக்கன் லிங்கத்தை பூஜித்து வந்தான் .மனமிறங்கிய சிவன் தக்கனுக்கு காட்சி
தந்து சாபத்திலிருந்து விடுபட செய்தார் .
நாகத்தை சாபத்திலிருந்து விடுபட செய்ததால் நாகநாதர் என்ற பெயர் வந்தது .
இங்குள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கிரிகுஜாம்பிகை .ராகுவும் விநாயகரும் தனித்தனி சன்னதிகளில்
அருள்பாலிக்கின்றனர் .மிகப்பெறிய ராகு தோஷம் உள்ளவரும் இங்குள்ள ராகுவை வழிபட ராகு தோஷம்
நிவர்த்தியாகும் . மற்றும் லட்சுமி ,
சரஸ்வதி , அம்மன்
சன்னதியில் இடம்பெற்றுள்ளனர் .
தோஷ நிவர்த்தி
கடுமையான ராகு தோஷம் உடையவர்கள் ராகுவுக்குபாலை கொண்டு அபிஷேகம் செய்தால் ராகு
தோஷம் நிவர்த்தியாகும் .நவகிரகத்தில் ஒன்றான ராகு வீதியுலா செல்வது மிகச்சிறப்பான ஒன்றாகும் .
No comments:
Post a Comment