திருமண தடை நீங்கும் திருமணஞ்சேரி : Temple for marriage

திருமண தடை  நீங்கும் திருமணஞ்சேரி :

         திருமணஞ்சேரி என்னும்  திருத்தலம் என்பது திருமண தடையை நீக்க வல்லது. மேலும் இந்த புனித தலத்தில் பூஜை செய்து வழிபட்டால்  த்கிருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.  மேலும் இந்த கோவிலில்  அறுபதாம் ஆண்டு திருமண விழா  மற்றும் என்பதாம் ஆண்டு நிறைவு விழா ஆகியவை  கொண்டப்டபடுகிறது .



எங்கு உள்ளது:
      திருமணஞ்சேரி என்னும் ஊர் மயிலாடுதுறை அருகே உள்ள  குத்தாலத்தில்  இருண்டு ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து  நிறைய பேருந்துகள் உள்ளது.



நடை திறப்பு நேரம்:

       இத்திருக்கோவில் காலை ஏழு மணி முதல் ஒரு மணி வரையிலும் மாலை மூன்று முப்பது மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்து இருக்கும் .

ஈசன் மற்றும் அம்பாள் பெயர்:

     இந்த கோவிலில் வீற்றிரூக்கும்  ஈச பெருமானின் பெயர் அருள் வள்ளல் நாதர் , உதவாக நாதர் என்ற பெயரில் இறைவி பெயர் அருள்பாளிகிறார்.
    இந்த திருக்கோவிலில் திருநாவுக்கரசர்  மற்றும்
திருஞானசம்பந்தர் பதிகம் பாடியுள்ளார்.


 
திருதல வரலாறு:
   இந்த திருத்தலத்தில் பார்வதி அம்மன்
கையிலாயத்தில் சிவபெருமானை வேண்டி   மறுபடி சிவனை மனம் முடிக்க வேண்டும் என்றும் வேண்டினாள்.  சிவனும் அவ்வாறே வாக்களித்தார்.  உமா தேவி மகிழ்ச்சியுற்று இருந்தால். அப்போது பார்வதி சிறிது பிழை செய்தார். அதனை கண்டு  கோபம் கொண்ட சிவன் பார்வதி தேவிக்கு பசுவாக மாறும்படி சாபம் அளித்தார். துன்பத்தில் இருந்த பார்வதி தேவி சாப விமோசனம் பெறுவதற்கும் , தன்னை மணந்து கொள்ளவும் சிவனை வணங்கினாள் . அனால் சிவனோ நேரம் வரும்போது கூறுவதாக கூறினார்.

பசு உருவம் பார்வதி தேவி மட்டும் கொள்ளவில்லை . அவருடன் சேர்ந்து லக்ஷ்மி, சரஸ்வதி ஆகியோரும் பசு வடிவம் பெற்று இருந்தனர்.  இந்த மாடு மேய்க்கும் தொழிலை விஷ்ணு கொண்டிருந்தார்.  அப்போது அம்பிகை தனது பாலை சிவா பெருமானுக்கு பொழிந்து சிவனை குளிர செய்து சாப விமோசனம் பெற்று  தனது உண்மையான வடிவத்தை பெற்று திருமணம் பூண்டார்.

  அப்போது பாரத மகரிஷி என்னும் மு னிவர்  சிவனை வேண்டி யாகம்  நடத்தினர். அவர் நடத்திய யாகத்தின் முன் ஈசனுக்கும் அம்பிகைக்கும் திருமணம் நடந்தது.  ஆதலால் இங்கு திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை

கோவிலின் சிறப்பு:

     இந்த கோவிலில் திருமணம் ஆகாதவர்கள் வந்து அர்ச்சனை செய்தல் விவாகம் இனிது நிறைவேறும் என்பது அக்காலத்தில் இருந்து நடைபெற்று வரும் நம்பிக்கை. மேலும் இந்த கோவிலில் மிக சிறப்புகளில் ஒன்றாக  கருதபடுவது தோஷ நிவர்த்திகள் .  ஜாதகத்தில் ஏதேனும் ராகு தோஷம் இருந்தால் அவர்கள் இங்குள்ள ராகு பாகானுக்கு அபிஷேகம் செய்ய ராகு தோஷம் நீங்கும். மேலும் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் கூட இந்த தலத்தில் வந்து திருக்குளத்தில் நீராடி ரகு பாகவானை  மனதார வழிபட  விரையில் புத்திர பாக்கியம் கிட்டும்.
இக்கோவிலில் உள்ள ராகு பகவானுக்கு பால் என்றால் மிகவும் பிடித்த ஒன்றாகும். ஆகவே ராகு பாகானுக்கு பால் பொங்கல் பிரசாதமாக செய்து அதனை உண்டு வர புத்திர பாக்கியம் கிடும் என்பது ஆன்றோர் வாக்கு.

திருமணம் ஆக செய்ய வேண்டியவை:

     இந்த திருகோவிலில் திருமணம் ஆக இந்த கோவிலில் உள்ள சப்தகிரி தீர்த்தத்தில் முதலில் குளித்துவிட்டு , பிறகு மூலவராக உள்ள கல்யாண சுந்தரருக்கு மலை சற்ற வேண்டும். பிறகு  அர்ச்சனை செய்து அங்கு உள்ள தீபம் வைக்கப்படும் மேடயில் எண்ணி ஐந்து தீபம் ஏற்ற வேண்டும். பிறகு அங்கு திருமண மேடையில் வழங்கப்படும் எலுமிச்சம் பழத்தை உப்பு, சர்கரை  சேர்க்காமல்  தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். பிரசாதமாக வழங்கப்படும் மாலையை  பத்திரப்படுத்தி வீட்ற்கு சென்றதும் அதனை ஒரு முறை போட்டு இறைவனை மனதார வணங்க வேண்டும். பிறகு கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதமான விபூதி மற்றும் குங்குமத்தை தினமும் பயன்படுத்த வேண்டும்.

   மேலும் இந்த பத்திரபடுத்தபட்ட  மாலையானது  திருமணம் ஆனா உடனே இருவரும் வந்து கோவிலில் இட்டு அர்ச்சனை செய்து என்துதலை முடிக்க வேண்டும்.

கோவிலின்  தோற்றம் :

     இந்த கோவில் ஆனது ஐந்து கோபுரங்களை கொண்டது . இந்த கோவிலில் கணபதி, முருகன், லக்ஷ்மி, துர்கை  நந்தியம்பெருமான் ஆகியோர் காட்சி அழிகின்றனர். இந்த கோவிலில் தான் மன்மதன் கண் திறக்கும் காட்சி உள்ளது. உற்சவர் மூர்த்தி பிரகாரங்களில் உள்ளார். மேலும்  சிவ  பெருமானின்  கழுத்திற்கு மலையாக வந்து திருமணத்தை  நடத்தி வைத்த ஏழு சமுத்திரங்களும் ஒரே தீர்தகுலத்தில் உள்ளது.  இந்த கோவில் சோழ மண்டல கோயில் . திருப்பணி ஆகியவை மிக சிறப்பக நடைபெறும்.

No comments:

Post a Comment