திங்களூர் :: கயிலாயநாதர் (சந்திரன்) :: Chandiran Temple Thingaloor

சந்திரன் ஸ்தலம் திங்களூர் : செவ்வாய் பரிகார கோவில் :: சந்திர தோஷம் பரிகார கோவில்

நவக்ரஹ வாசஸ்தலமான சந்திரனுக்கு உகந்த இடமாக திங்களூர் திகழ்கிறது. இந்த ஊர் நவக்ரஹ கோயிலில் ஒன்றாக கருதப்படுகிறது. இது திருவையாறில் இருந்து கும்பகோணம் செல்லும் பாதையில்  மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பழனம்  தொலைவில் இடது பக்கமாக சென்றால் திங்களூர் சந்திர பகவானை தரிசிக்கலாம். திருபழனம் என்பது மிகும் பிரசித்தி பெற்ற பாடல் பெற்ற திருதலமாகும் .



இந்த திங்களூர்  கைலாசநாதர் கோவில் ஆனது   தஞ்சாவூர்  மாவ ட்டம் , திருவையாறு வட்டம், கும்பகோணம் வழியில் அமைந்து உள்ளது. திருவையாரில் இருந்து பல பேருந்துகள் இங்கு இயக்கபடுகிறது.  இந்த ஆலயம் காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரையிலும்  அதே போல்  மாலை  4.00 மணி முதல் இரவு  8.00 மணி வரையிலும்  செயல்படும் .


திங்கள் என்ற சொல்லுக்கு சந்திரன் என்று பொருள்படும்.  இங்கு குடி கொண்டிருக்கும் ஈச பெருமானின் பெயர் கைலாசநாதர் ,  அம்பிகையின் பெயர் பெரியநாயகி. இத்திருகோயிலில் சுந்தர் மற்றும் அப்பர் பல பதிகங்களை பாடி உள்ளனர். அப்பதிகமான அப்பர் (6-25-3),  சுந்தரர் (7-31-6)



அப்பர்,  சுந்தரர் மட்டும்  அல்லாது  திருநாவுகரசரும் இந்த தலத்தை  போற்றி  பாடியுள்ளார்.  திருநாவு கரசர் எழுதிய  6 வது திருமுறையில் 25 ஆம் பதிகத்தில் 3-வது பாடலில் இந்த  திருத்தலத்தை பட்டிய குறிப்புகள் உள்ளன என்பது சான்றாக உள்ளது. இந்த பதிகம் அனைத்தும் திருவாரூர்  தலத்திருக்கு  சொந்தமானது.



சுந்தரர் இந்த தளத்தை பற்றிய ஒரு குறிப்பில் கூறியதாவது , திங்களூ ரை  சுற்றி உள்ள மாவூர், தேரூர்  மற்றும் திங்களூரில் வீற்றிருக்கும் மேலும் தனது அழகிய சடை மீது பிறையை அணிந்து , வீடுகளின் மிக அம்சமாக விளங்கும்  பெரிய மடங்களையும் உடைய அழகிய ஊரில் , அயல் வெளிகளின் நீர் வளம் உள்ள மிக அழகிய தோற்றமும்  கொண்ட ,  அனைத்து  ஊர்களிலும் உள்ள அனைரும்  உமையாளின்  பதியே  என்னுடைய  " ஈசனே ஈ சனே " என்று அழைக்கும்  மக்கள் அழைக்க நீ எங்கு சென்று உள்ளாயோ ? என்று திருநாவுக்கரசர் தனது  பதிகத்தில் கூறியுள்ளார்.சுந்தர் தனது பதிகத்தில் உள்ள சான்றாக 6 ஆம் பாடலில்  உள்ளது.  ஆனால் இந்த  திருபதிகம் திருஇடையாரு தலத்திருக்கு  உரியதாகும் .
மேலும் சுந்தரர் கூறுவதாவது,  தமிழில் விளங்குபவான் தான் இறைவன்  என்றும் தங்களை விட பக்தியில் யாரும் சிறந்து விளங்க மாட்டார் என்றும் கூறிய  சுந்தரர் , இது உங்கள் ஊர் மற்றும் உங்களை விட பக்தியில் சிறந்து வி லங்குபவரின்  ஊர் என்றும் சொல்லும்  அனியாரின் பொது உடமை நான் என்று கூறிய இறைவா தனக்கு பிடித்த ஊர் திங்களூர் என்று சொல்லும் ஈச பெருமானே  என்று சுந்தரர் தனது 6 அம பாடலின் மூலம் கூறி உள்ளார் .

தல வரலாறு:

     திங்களூரில் அப்பூதி அடிகள் என்ற ஓரோர்  இருந்தார்.அவர் திருநாவுக்கரசர் மீது மிகுந்த பற்றுடன் இருந்தார். அவர் திருநாவுக்கரசர் மீது இருந்த அன்பினால் தன்னிடம் உள்ள கோசலை , தண்ணீர்  பந்தல், தர்ம சாலை , அன்னம் இடும் சாலை ஆகிய அநை த்திருக்கும் திருநாவுக்கரசர் பெயர் வைத்து அகம் மகிழ்ந்தார்.  ஒரு முறை திருநாவுக்கரசர்  திங்களூர் வரும்போது அவை  அனைத்தும் கண்டார்.

அப்போது ஊரில் உள்ளார்களிடம் அதை பற்றி கேட்ட அப்போது அப்பூதி அடிகள் என்று தெரிய வந்தது .  உடனே அவர் இல்லத்திருக்கு செல்ல முடிவெடுத்தார். அதனை கண்ட அப்பூ தி  அடிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் . திருநா வு கரசருக்கு விருந்து கொடுக்க விரும்பினர். உடனே அவர் மனையிடம் சொல்லி விருந்துக்கான ஏற்பாடுகளை  செய்தார். இருந்தும் தயாரானது. உடனே அப்பூதி அடிகள் தனது மகனை கூப்பிட்டு சாப்பிடுவதற்கு நன்கு குருத்த வாழை இலை வேண்டும் என்றும் சிக்கிரம் பறித்து வர வேண்டும் என்றும் தனது  மகனிடம் கூறி தோட் ட த் திற்ர் க்கு  அனுப்பினர் .

அப்போது மகனும் தோட்டத்திற்கு  சென்று வாழை இலை  பறிக்க சென்றான். அப்போது வாழை தோட் டத்தில் எதிர் பாராத விதமாக  நாகம் ஒன்று தீண்டியது .  அவன் வாழை  தோட்டத்தில் இறந்து விட்டான். அப்பூதி அடிகள் அதனை கண்டு அதிர்ச்சி உற்றான். தந்து மகன் இறந்தது தெரிந்தால் அப்பர் உண்ண மாட்டார் என்றும் அப்பர் உணவு உண்பது  தடைபடும் என்றும் எண்ணி அப்பூதி அடிகள் மகன் இறந்ததை மறைத்து அப்பரை உணவு உண்ண  அழைத்தார்.



ஆனா ல்  அப்பரோ அப்பூதி  அடிகளின் மகனையும் உணவு உண்ண அழைத்தார் . ஆனால் அப்பூதி  அடிகள் தனது மகன் இறந்து விட்டத்தை  அப்பருக்கு தெரிவித்தார்.  உடனே அந்த சிறுவனின் உடலை கோயிலுக்கு எடுத்து சென்று அதனை கண்டு  அதிர்ச்சி உற்ற அப்பர் பதிகம் பாட முடிவெடுத்தார் . அப்போது " ஒன்று கொ லம் " என்று தொடங்கும் பாடலை பட ஆரம்பித்தார்.
அந்த பாடலை படி முடித்த உடன் சிறுவன் தூக்கத்திலிருந்து உயிர் பிழைக்கிறான். இந்த அதிசயமான நிகழ்ச்சி நடந்த இடம் "திங்களூர் " ஆகும். மேலும் இந்த தலத்தின் மற்றுமொரு சிறப்பாக கருதப்படுவது வருடா  வருடம் பங்குனி  உத்திரம் அன்று சரியாக  காலை 6 மணிக்கு  சூரிய கதிர்கள் ஈச பெருமானது உடம்பில் படுவது மற்றொரு  சிறப்பு . சூரிய கதிர் ஈசனின் மீது படர்வதால் அன்று சூரிய பகவானுக்கு சூரிய பூஜையும் 
சூரிய கதிர் பட்ட அடுத்த நாள் பெளர்ணமி பாட்டி முகத்தன்று சந்திர ஒளி சிவ பெருமான் மீது படரும். ஆதலால் அன்று  மாலை சந்திர பூஜையும் நடைபெறுவது        சிறப்பு இந்த திருக் கோவிலில் சந்திர பகவானுக்கு தனி சன்னதி உண்டு . மேலும் அப்பூதி  அடிகளாரின் மகனை பாம்பு கடித்த விஷத்தில் இருந்து காபா ற்றியதால் இங்கு  வசிக்கும் மக்களுக்கு பாம்பு  கடித்தால் விஷம் ஏறுவதில்லை .      
குறிப்பாக  ஜாதகத்தில்  சந்திரன்  தோஷம்  இருபவருக்குஇத்திருக்கோவிலுக்கு  வந்து  அர்ச்சனை அபிஷேகம்  செய்பவர்களுக்கு  சந்திர தோஷம்  விலகும்  என்பது ஐதீகம் .  

மேலும் ஜாதகத்தில்  சந்திர தோஷம் நீங்க இத் திருகோவிலில் உள்ள இத் திரு குளத்தில் புனித நீராடி சந்திர பகவனை மனதார  வழிபட்டால் சந்திர தோஷம் நீங்கி சகல நன்மைகளும் கிட்டும்  
இந்த ஆலயம் கிழக்கு நோக்கி உள்ளது . ஆனால்  தெற்கு நோக்கிய வாயில் பயன்படுத்த படுகிறது . இங்கு உள்ள சிவ  பெருமானின் பெயர் கைலாயநாதர் இங்கு வீற்றிருக்கும்  அம்பிகையின் பெயர் பெரியநாயகி. இக்கோவிலின் சிறப்பு தெற்கு பார்த்த வாயில் பெரியநாயகி  அம்பாளின் சன்னதி. மூலவரை  சுற்றி நிறைய சன்னதி  உள்ளன .கோவிலுக்கு அருகாமையில் மிகவும் பிரசித்தி பெற்ற சந்திர திருக்குளம் உள்ளது. மூலவரை சுற்றி உள்ள வெளி பிரகாரத்தில் முருகன் சன்னதியும் விஷம்  தீர்த்த விநாயகர் சன்னதி இதை தவிர  சண்டீகேஸ்வரர்  உடனுறை சண்டிகேஸ்வரி அம்மனும்  தனி சன்னதியில் வீற்று  இருகிறார்கள்.             இந்த தலத்தின் அதிபதியான சந்திரன் தனி சன்னதியில் உள்ளார். அவர் மேற்கு நோக்கி பார்த்தபடி சினை நோக்கி உள்ளார். இத்திருத்தலத்தில்  உள்ள உள்  பிரகாரத்தில் வலதுபுரம்  அப்பூதி அடிகள்  மனைவி , இடது பக்கமாக அப்பூதி அடிகள் மற்றும் முதல் திருநாவுக்கரசர் , ஆருக்கு அடுத்து அந்த இளைய திருநாவுக்கரசர் ஆகியோர்  சிலைகள் உரூவாக்கப்பட்டு   உள்ளது.  மேலும் இந்த  கோவிலில் சிறப்பு பூஜைகளாக  மார் கழி  திருவாதிரை ,  பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் , மஹா சிவராத்திரி  ஆகியவை மிக சிறப்பாக கொண்டடப்படுகிறது .


அதுமட்டும் அல்லாமல் பிறந்த ஆறு மாதத்தில்  உள்ள குழந்தைக்கு முதன் முதலில்  அன்னம் ஊட்டும்  "அன்ன பிரவேசத்திற்கு " மிகவும் உகந்த இடம்  இந்த புனித  தலமான  திங்களூர்  கோயில்
இத்திருகோவிலின் சந்திரன் தோஷம் நீங்க சுவாமிக்கு மற்றும் அம்பாளுக்கு  வஸ்திரம் சாற்றி கோவிலில் திருப்பணி வேலை செய்யும் போது திருப்பணி வேலை செய்து தனது வேண்டுதலை நிறை வேற்றலாம்.

No comments:

Post a Comment