Nelliananathar temple :: Tiurnellikaval

திருநெல்லிகாவல்  கோவில்:

      திருநெல்லிக்காவல் கோவில் மிகவும்  கோவில் ஆகும். இது பாடல் பெற்ற  திருத்தலங்களில்  ஒன்று. இந்த கோவிலில்  நெல்லி வன நாதர் குடி கொண்டுள்ளார். இந்த திருத்தலம்  அமைந்துள்ள இடம் திருநெல்லிக்கா.

சிவனின் பெயர் மற்றும் அம்பாளின் பெயர்:

     இங்கு வீற்றிக்கும் சிவா பெருமானின் பெயர் நெல்லிவன நாதர்  மற்றும் அம்பாளின்  பெயர் மங்களநாயகி  அம்பாள்.




எப்படி செல்வது:

      திருவாருர்ரில் இருந்து  திருத்துறைபூண்டி செல்லும் பாதையில் திருநேல்லிகாவல் உள்ளது. திருத்துறைபூண்டி ரயில் நிலையத்தில் இருந்து நிறைய ரயில்கள்  இயக்கபடுகின்றன.
திருவாரூரில் நிறைய பேருந்துகள் உள்ளன.

நடை திறக்கும் நேரம்:

   இத்திருக்கோவில் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் மாலை ஆறு மணி முதல் எட்டு முப்பது மணி வரையிலும்  இயங்கும்.

தல வரலாறு:

    சக்தி மிகுந்த மரங்களாக  விளங்கும் தேவ லோக மரங்கள் பாரிஜாதம், மந்தாரம், கற்பகம் , அரிசந்தனம்,  சந்தானம், ஆகிய மரங்கள் நினைத்தது நிறைவேறும் . ஆதலால் அந்த மரங்கள் அனைத்தும் மிகவும் ஆணவத்தோடு காணப்பட்டது. அந்த மரங்கள் அனைத்தும் தேவ  லோகத்தில்  உள்ளது. அப்போது துர்வாச முனிவர் ஒருவர் ஒருமுறை தேவலோகம்  வந்தார். அப்போது மரங்கள் அவரை மதிக்காமல்  இருந்தது.  அதனால் அவர் அந்த மரங்களுக்கு  சாபமிட்டார்.  அப்போது சாபம் நீங்கியும் தேவ லோகத்திற்கு வந்து மீண்டும் அதன் தன்மையை உணர்த்தியது. மேலும் நெல்லி மரத்தின் அருமையை புரிந்து கொள்ளுவதற்காக  சிவ பெருமான்  நெல்லி மரத்தின் முன் சுயம்புவாக தோன்றினார்.
        அந்த  ஐந்து மரங்கள் அனைத்தும் ஈச  பெருமானை வழிபட்டு மீண்டும் தேவ லோகத்திற்கு சென்றன. அந்த நெல்லி மரத்தில் சுயம்புவாக இருந்ததால் அந்த  சிவ  பெருமான் நெல்லிவனநாதர் என்று அழைக்கபடுகிறது.இறைவன்  இந்த தலத்தில்  இறைவன் நெல்லி  மரத்தின் அடியில் அமைந்ததால் இந்த திருத்தலம் நெல்லிக்கா என்று அழைகபடுகிறது.
கோவிலின் அமைப்பு:
    இந்த திருகோவிலில் மேற்கு நோக்கி ஐந்து ராஜ கோபுரங்களும் கோபுரத்தில் முன் கவசம் பொருந்திய கோடி மரமும் உள்ளது. மேலும் விநாயகர் ,  சுப்பிரமணியர்,  ,கஜலக்ஷ்மி,  துர்கை, நெல்லிவனநாதர்,  பைரவர் , நவக்ராஹகங்கள் ,சோமஸ்கந்தர் ஆகியோர்  உள்ளனர். மேலும் இந்த கோவிலில்  மிகவும் பிரசித்தி பெற்ற நடராஜர் மண்டபம் உள்ளது,.  மேலும் இந்த திருகோவிலில் வண்ணமயமான சிற்பங்கள் உள்ளன. இந்த கோவிலில் சண்டீகேஸ்வரர் அமைந்துள்ளார்.

கோயிலில் சிறப்பு:

    இந்த கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குவது கிருஷ்ணா பட்சத்தில் உள்ள பூஜைகள் . மாசி மாதம் பதினெட்டாம்   தேதி முதல்  ஏழு நாட்களுக்கு சூரிய கதிரானது சிவ பெருமானின் மீது விழும். ஆதலால் அந்த சூரியனுக்கு   பூஜை செய்யும் வகையில் சூரிய பூஜை  நடைபெறும்.
இந்த தலத்தில்  சூரியன், துர்வாசன் ,   சனிபகவான் ,  பிரம்மா, திருமால் ஆகியோர் வழிபட்ட  தலமாக விளங்குகிறது.

தீர்த்த குளம்:
   இந்த திருகோவிலில் அருகே தீர்த்தம் உள்ளது. அந்த தீர்த்தத்தின் பெயர்  ரோக நிவாரண தீர்த்தம் .  இந்த தீர்த்தம் சகல நோய்களுக்கும் நிவாரணியாக உள்ளது. கந்தர்வன் என்பவன் மிகும் கொடிய  நோயினால் பாதிக்கப்பட்டான் .  அவனுக்கு நோய் தீர்க்கும் நிவாரணிய உள்ளது இந்த தீர்த்தம் என்று ஊர் மக்கள் அனைவரும் சொல்ல இந்த கந்தர்வன் தீர்த்தத்தில் குளித்தார். உடனே நோய் தீர்ந்தது என்று வரலாற்று சிறப்பு உள்ளது.

No comments:

Post a Comment