கோவிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்.?
இந்த ஒரு அறிவியல் பூர்வமான பதிவை அனைவரும் படித்துவிட்டு சொல்லுங்கள் கோவிலுக்கு !!
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன்
இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.
எல்லா ஆகம லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது.
பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.
எப்படி என்று கேட்பவர்களுக்கு கொஞ்சம்
விளக்கமாக தெரிந்து கொள்வோமா !!
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன்.
இது பொதுவாக ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள்
மற்றும் ஆழ்ந்த
இடங்கள் தான் இதன்
ஐடென்டிட்டி.
கோயில்களில் ஒரு அபரிதமான காந்த
சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம்
கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத்
போல் திரஸ்ட் வகை ஆகும்.
முக்கியசிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.
அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி.
பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.
நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? என்ன
அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும்.
இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி.
ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும்.
இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ்
காஸ்மிக் எனர்ஜி.
மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் டபுளாக கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.
இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு,
தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்களே செய்து பாருங்கள்.
இரண்டேநாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும்.
ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம்மற்றும் எத்தனை வருடம் பால், தயிர்,
பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம்,
விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.
அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும்.
பூக்கள், பச்சைகற்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி
(புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்), கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை
கோயிலில் உள்ளது போல் எங்கும்
கிடைக்காது.
இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம்.
இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு
ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.
இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க...
இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம்
இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல்சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.
கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.பிராகாரம்:-
மக்கள் ஒன்று கூட, ஊர் நன்மைக்காக
பொதுக்கூட்டங்கள் கூட்ட, சந்தை
அமைக்க, பிள்ளைகள் விளையாடி மகிழ.
பல அறைகள்:-
தானியம் சேகரிக்க, கருவூலமாக, பொக்கிஷ அறையாக, மக்கள் பதிவுகளை வைக்க, நகராட்சி அலுவலகமாக.
சிற்பங்கள்:-
நம்மால் மறக்கப்பட்ட பரப்பல உண்மைகளை நமக்கு நினைவுறுத்த.
இந்து ஆலயங்களா இல்லை மருத்துவ ஆலயங்களா !!
நாள்தோறும் ஏதேனும் ஒரு
ஆலயத்துக்கு சென்று வந்தால் நாம் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கலாம் என்பது நிதர்சனம்.
ஒன்றன் பின் ஒன்றாக இன்று சித்தர்களின் குரல் முக பக்கத்தில் வாயிலாக கூறுகிறேன் கேளுங்கள்..
🌺(1) கை கால்களை கழுவுதல்:-
கோவிலிற்குள் நுழைவதற்கு முன் நமது கை கால்களை நீரால் கழுவிவிட்டு உள்ளே செல்லுதல் வேண்டும். அவ்வாறு நாம் செல்லும் போது கிருமிகளை ஆலயத்துக்கு
வெளியிலேயே அக அசுத்தங்களை
கலைந்துவிட்டு செல்கிறோம்..
🌺(2) கோபுர வழிபாடு:-
ஆண்களாக இருந்தால் கோவில் கோபுரத்தை நோக்கி இரு கைகளை மேலே தூக்கி வணங்குதல் வேண்டும்.
அவ்வாறு செய்வதனால் கோவில் கோபுர கலசத்தில் உள்ள தங்கம் வெள்ளி, பித்தளை ஆகிய
உலோகங்களோடு சேர்ந்த நவ தானியங்கள் மூலம் பரப்பப்படும் மின் காந்த ஈர்ப்பு சக்திக்குள் நமது உடல் வருகிறது.
அந்த நொடியில் இருந்து நமது உடல் நல்ல ஈர்ப்புசக்தி (Positive Energy)க்கு ஆட்படுகிறது..
🌺(3) விநாயகர் வழிபாடு:-
தோப்புக்கரணம் போடுதல், ஞான குட்டு வைத்துக் கொள்ளுதல், அத்தனையும் ஆசனங்கள் இந்த ஆசனங்களை செய்யும் போது நமது நரம்பு மண்டலங்கள் புத்துணர்ச்சி பெருகிறது...
🌺(4) மூலவர் வழிபாடு:-
ஆலயங்களில் மூலவரை பல வகை மலர்களாலும் துளசியாலும், வில்வ இலைகளாலும் இன்ன பிற மூலிகைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
அது நுகர்தலின் மூலம் நமது உடலுக்குள்ளும் அதன் அளவில்லாத பயன் சேரும்..
🌺(5) தீபாராதனை:-
பல ஆலயங்களில் சூடங்களின் மூலம் தீப ஆராதனை இருக்கும். சில ஆலயங்களின் விளக்கெண்ணெய் மூலம் தீப ஆராதனை இருக்கும். இரண்டும் கிருமி நாசினியாக
செயல்படுகிறது..
🌺(6) விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம்:-
இந்த நான்கும் வாசனை பொடிகள் மட்டுமல்ல, சிறந்த கிருமி நாசினியும் கூட.
அதிலும் இந்த விபூதி குங்குமத்தின் மகிமை இருக்கிறதே சொல்லில் அடங்காதது.
உங்களுக்கு ஏதேனும் சிராய்ப்பு காயங்கள் இருந்தால் அதன் மீது விபூதியை போட்டு வாருங்கள் இரண்டே நாட்களில் காயத்தின் வடு கூட தெரியாமல் மறையும்..
🌺(7) பிரசாதம்:-
துளசி தீர்த்தம்,
பொங்கல்,
புளி சாதம்,
தேங்காய் சாதம்,
எழுமிச்சை சாதம்,
பொங்கல்
இவைகளே கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது அத்தனையும் மருத்துவகுணம் வாய்ந்தது.
🌺(8) பிரகாரத்தை சுற்றி வருதல்:-
நீங்கல் நன்றாக கணக்கெடுத்துக் கொண்டால் கோவில் பிரகாரத்தை மூன்று முறை சுற்றி வருதல் வேண்டும்.
அப்படி கணக்கில்
வைத்துக் கொண்டால் நீங்கள் குறைந்தபட்சம் 1இல் இருந்து 3 கிலோமீட்டர் நடை பயிற்சி செய்வதற்கு சமம்..
🌺(9) குரு த்யானம்:-
அனைவரும் குரு பகவானிடத்தில் 5 நிமிடம் தியானம் இருந்து செல்லுதல் வேண்டும்.
அதன் மூலம் மன நிம்மதி கிடைக்கிறது. மனதிற்கு அமைதியான தியானமும் கிடைக்கிறது.
🌺(10) நவக்கிரஹ வழிபாடு மற்றும் சக்கரத்தாழ்வார்:-
பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் சன்னதி இருக்கிறது ஒரு முறை சுற்றி வர வேண்டும்.
அதுவே சிவபெருமான் கோவிலில் நவ கிரகங்களை 9 முறை சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும்.
அங்கு நவ கிரகங்களை 9 வகையான எண்ணெய்களின் மூலம் அபிஷேகம் செய்திருப்பார்கள்.
அதன் மருத்துவ குணங்களும் நமது உடலையே சாரும்.
🌺(11) கொடிமர வழிபாடு:-
எல்லா ஆலயங்களிலும் கொடி மரத்தின் முன் விழுந்து வணங்குதல் வேண்டும். அதுவும் ஒரு வகையான ஆசனமே....
கோவில் ரகசியங்கள்:-
கர்ப்பக்கிரக அமைப்பு, அர்ச்சனை அபிஷேக ஆராதனைகளின் விஞ்ஞான விளக்கம்:-
ஒத்த அதிர்வு கொண்ட காற்றுமண்டலம், ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணுடைய ஒலிக்குப் பெரும் ஓசை எழுப்பவல்லது
(Maximum Sound) என்பது தெரிந்ததே. ஆகம சிற்ப சாஸ்திரங்கள், விக்ரகத்தின் உயரத்துக்கேற்ப கர்ப்பகிரகத்தின் உள் அளவை வரை வரையருத்திருக்கின்றன.
"ஓம்" என்ற ஒலிக்குக் கர்ப்பக்கிரகத்தில் உள்ள காற்று மண்டலம் ஒத்த அதிர்வு அளிக்கும்படி அதன் உள்ளளவு அமைக்கப்பட்டிருக்கிறது.
அப்போது காற்றின் ஒவ்வொரு மூலக்கூறும் பெரும் வீச்சுடன் ஒத்த அதிர்வு அடைய முடியும்.
ஆலயத்தில் மூல விக்கிரகத்திற்கு தண்ணீர், எண்ணெய், தேன், பால், தயிர், விபூதி ஆகியவற்றை கொண்டு அபிசேகம் செய்வதன் தத்துவம்.
இந்த ஒவ்வொரு பொருளுக்கும் மின்கடத்தும் திறன் (conductivity) மாறுபடுகிறது.
தயிர், பால், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யும்போது விக்கிரகத்தின் மின்கடத்தும் திறன் அதிகமாகிறது.
எண்ணெய், தேன், விபூதி, குங்குமம், பூ ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது இதன் மின்கடத்தும் திறன் குறைந்தாலும் நிலையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் அபிசேகப் பொருள்களான குங்குமம், பால், தயிர், தேன், தண்ணீர் ஆகியவற்றின் pH மதிப்பும் அளவிடப்பட்டுள்ளன.
ஒரு திரவத்தின் pH-ன் மதிப்பு அதிகரிப்பது, அதன் எதிர்மின்னூட்டம் (Negative
Concentration) அதிகரிப்பதையே குறிக்கும். குங்குமம், சந்தனம், மஞ்சள், தண்ணீர் ஆகியவை அதிக pH மதிப்பு கொண்டவை.
இவற்றைக் கொண்டு அபிசேகம் செய்வதால்
கர்ப்பக்கிருகத்தில் உள்ள காற்று
மண்டலத்திலும் எதிர்மின்னூட்டங்கள்
அதிகரிக்கும்.
அபிஷேகத்தைத் தொடர்ந்து தீபாராதனை செய்யும்போது காற்று மண்டலத்தில் ஒரு மின்தேக்கியை வைத்து மின்னூட்டதை அளந்தால் தூபம், தீபம் காட்டும் மாறுபாட்டால் மின்னூட்டம் மாறுபடுவது (Charge) தெரியும்.
எதிர்மின்னூட்டமும் ஈரப்பதமும் உள்ள காற்று மண்டலம் கர்ப்பக்கிருகத்தினுள் அமைந்து உள்ளது.
அந்தக் காற்று மண்டலத்துள் "ஓம்" என்ற ஒலியுடன் (பிரணவ மந்திரம்) அர்ச்சனை செய்யும்போது அந்த ஓலி விக்கிரகத்தில் பட்டு எதிரொலிக்கிறது.
இதனால் அந்தக் காற்றுமண்டலத்தில் இதனால் அந்தக்காற்று மண்டலத்தில் பெரும் அலைவும்; முத்ததிர்வும் (Maximum Amplitude at Resonance) கிடைக்கிறது.
இந்நிலையில் ஏற்படும் காற்றுவீச்சு எதிரே உள்ள பக்தர்களின் மேல்படும்போது அவர்களுக்கு உள்ளவளமும் – உடல்நலமும் கிடைக்கிறது.
இந்த விஞ்ஞான உண்மையை அன்றே
அறிந்திருந்த நமது முன்னோர்கள் இத்தகைய ஆலயங்களை மலைகள் மீதும், கடற்கரையிலும், மூலிகைகள் அடங்கிய சோலைப்பகுதிகளிலும், அருவிக்கரையிலும், ஆற்றங்கரையிலும் கட்டி இருக்கிறார்கள்.
இந்த இடங்களில் உள்ளத்தூயமையும் உடல் நலமும் ஒரு விதமான
Fresh energy கிட்டுகிறது.
இதற்காகத்தான் ஆறுகால அபிஷேகங்கள் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்றன.
அர்ச்சனைகளும் ஆராதனைகளும் நடத்தப்படுகின்றன.
இதன் விளைவாக விக்கிரத்தில் தொடர்ந்து அதிர்வுகள் நிலைத்திருக்கும். ஆலயத்தில் உள்ள கர்ப்பகிருகத்தின் அமைப்பு இதனை சேமித்துப் பாதுகாக்கும் வண்ணம்
அமைக்கப்பட்டிருக்கிறது.
மூல விக்ரகம் ஒலி அலைகளின் எதிரொலியை எழுப்பவில்ல விதத்தில் அமைந்துள்ளது.
அடியில் பொருத்தப்பட்டுள்ள எந்திரத்தகடு ஆற்றல் சேமிப்புக்கலனாகவும் காற்று மண்டலம் அந்த சக்தியை ஏற்றிச் செல்லும் முறையிலும் முறையிலும் அமைந்துள்ளன.
இதன் முழுப்பலனும் வழிபடவரும் பக்தர்களுக்கு போய்ச் சேர்கிறது. அவர்கள் இவற்றை ஏற்பவர்களாக (Receiver) விளங்குகிறார்கள்.
கர்ப்பக்கிரகத்தில் உள்ள காற்றுமண்டலத்தில் பிராணவாயு அழுத்தம் அதிகரிக்கிறது.
அந்தக்
காற்று மண்டலம் பிராணவாயுக் கூறுகளை அதிகமாக பெறுவதால் பதர்களின் உடல்நலம் சீர்பெற உதவும். ஒலியின் திசைவேகம் ஈரப்பததில் அதிகமாக இருக்கும்.
ஆகையால் எப்போதும் அபிசேக நீரினால் ஈரமாகவே உள்ள கர்ப்பக்கிருகம் இந்த நிலையை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது.
ஆலயங்களின் அமைப்பும் அதன் உள்ளமப்பும் இவ்வாறு ஆகம பூர்வமாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் கணிக்கப்பட்டே அமைந்திருக்கின்றன.
இதனால் மனிதர்களுக்கு உடல்நலமும், உள்ளவளமும் கிடைக்கின்றது.
யந்திரங்களில் பதிவு செய்த சக்தியானது குறிப்பிட்ட காலம்வரைதான் நிலைத்திருக்கும்.
இந்த கால அளவானது அதில் பதிவாகியுள்ள உச்சாடனத்தின் அளவு, உருக் கொடுத்தமுறை, உருக் கொடுத்த மாந்திரீகனின் மன ஒருமைப்பாடு, யந்திரம் எழுதிய உலோகத் தகட்டின் அளவு, சித்தியான பின்பு அதனை வணங்கும் முறையைப் பொறுத்து அமையும்.
கோயில்களில் இருக்கும் சக்தியானது
மூலவரிற்கு கீழே வைக்கப்படும் யந்திரத்தகட்டினாலேயே உண்டாகிறது.
இந்த தகடு யாகங்கள் மூலம் உரு கொடுக்கப்படுகிறது.
அத்துடன் நித்திய பூஜைகள் முறைப்படி செய்யப்படுகின்றன.
இதன் கால அளவு 12 வருடகாலங்கள்.
அதனாற்தான் 12 வருடத்திற்கு ஒரு முறை கும்பாவிஷேகம் செய்யப்பட்டு யந்திரத்தகடுகள் புதிப்பிக்கப்படுகின்றன.
ஆக நமது ஆலயங்களை முறையாக
வழிபட்டாலே ந்மது தீய எண்ணங்களையும் துளைத்துவிடலாம். சுகமுள்ள ஆரோக்கியமான வாழ்வு பெறலாம் !!
நான் மீண்டும் சொல்கிறேன் அற்புதங்கள், பல ஆரோக்கிய ரகசியங்கள் நிறைந்ததுதான் பல்லாயிரம் பில்லியன் வருடங்கள் பழமையான நம் புனிதமான இந்து மதம்..
இன்னும் எத்தனை எத்தனையோ அற்புதமான விஷயம் கோவிலில் உள்ளது.
அதனால் தான் கோவிலுக்கு காலை மற்றும் மாலை செல்லுங்கள் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
இவை அனைத்தும் மாற்று மத வழிபாடுகளிலும்
அந்த மாற்றுமத வழிபாட்டு தளங்களிலும் இந்த
மகிழ்ச்சி
ஆனந்தம்
சந்தோஷம்
புத்துணர்வு
மனநிம்மதி
இவை ஒன்று கூட கிடைக்காது
🌲ஒம் நமச்சிவாய நம🌲Gமேலும் ஆன்மிக தகவல்களுக்கு
7298999798
No comments:
Post a Comment