திருமணம் கைகூட வழிபட வேண்டிய கோவில்::
திருமணம் விரைவில் கைகூடவும்,குழந்தைகள் அறிவு கூர்மையாக இருக்கவும் வழிபட வேண்டிய தெய்வம் அதுல்ய நாதேஸ்வரர் கோவில்.
எங்கு உள்ளது:
இந்த திருக்கோவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி என்ற ஊரில் அமைந்துள்ளது.
நடை திறக்கும் நேரம்:
இந்த திருக்கோவில் நடை காலை ஆறு மணி முதல் பத்து மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.
சுவாமி மற்றும் அம்பாள்:
இந்த கோவிலில் உள்ள சிவ பெருமான் அதுல்ய நதீஸ்வரர் என்றும் சௌந்தர்ய கனகாம்பிகை என்ற பெயருடனும் காட்சி தருகின்றனர்.
விரைவில் திருமணம் நடக்கவும் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.
ஸ்தல வரலாறு:
உமையம்மையின் தந்தையாயாகிய தக்க்ஷன் அனைவரையும் அழைத்து யாகம் ஒன்று வளர்க்க முடிவெடுத்தார். பிறகு அவர் அனைவரையும் கூப்பிட்டு சிவ பெருமானை மட்டும் அழைக்காமல் இருந்தார். அதனை அறிந்த சிவ பெருமான் தக்க்ஷன் செய்த தவறினை கண்டு மிகவும் கோபம் கொண்டு தாண்டவம் ஆட துவங்கினார். பிறகு அந்த தாண்டவத்தினால் வந்த கோபத்தின் ரூபமாய் வீரபத்திரர் என்ற சிறப்பு உருவம் ஒன்று உருவானது. அந்த வீரபத்திரரை அனுப்பி தக்க்ஷனை அழிக்குமாறு கூறினார். அதன்படியே வீரபத்திரரும் தக்ஷனை அழித்தார்.
பிறகு வீரபத்திரர் கடும் தவம் புரிந்து சிவ பெருமானை காண முயன்றான். அவரின் தவத்தின் பயனாக சிவ பெருமான் தனது வாகனமான ரிஷப வாகனத்தில் காட்சி தந்தார் என்பது சிறப்பு.
வீரபத்திரர்:
இந்த கோவிலில் சிவ பெருமானின் கோபத்தின் வெளிப்பாடான வீரபத்திரர் தோன்றியதால் இந்த கோவிலில் உள்ள வீரபத்திரரை மனதார வேண்டி கொண்டால் மனதில் தோன்றும் அத்தனை பயங்களும் போகும் என்பது ஐதீகம்.
ஜைமினி முனிவர்:
ஜைமினி முனிவர் என்பவர் சாம வேதங்களின் குரு என்று கூறலாம். அந்த அளவிற்க்கு சாம வேதங்களை கற்று தீர்ந்தார். அவருடைய குரு வேத வியாசர் ஆகும். ஜைமினி முனிவர் சாம வேதத்திற்கு சிவ பெருமான் மயங்கி தனக்கு நினைத்தது அனைத்தையும் செய்வார் என்று கூறி இந்த கோவிலில் தான் தான் எழுதிய சாம வேத நூல்களை வெளியிட்டு சிவ பெருமானின் அருளை பெற்றார் என்பது வரலாறு.
கோவில் அமைப்பு:
இந்த திருக்கோவிலில் விநாயகர், முருகர், துர்க்கை, கோஷ்ட தக்ஷிணாமூர்த்தி மற்றும் சண்டீகேஸ்வரர் ஆகியோர் தனி தனி சன்னதிகளில் அழகுற காட்சி தருகின்றனர்.
விசேஷ தினங்கள்:
இக்கோவிலில் சிவ ராத்திரி, பிரதோஷம், திருவாதிரை , கார்த்திகை தீபம் ஆகியவை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனை தவிர ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வரும் ஐந்தாம் நாள் இங்குள்ள தென்பெண்ணை நதியுடன் காவிரி நீர் கலக்கும் என்பது ஐதீகம். அப்படி ஒன்று கூடும் போது அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அம்பாளை பல்லக்கில் ஏற்றி அந்த கரைக்கு அழைத்து வருவார் இன்றும் இந்த திருவிழா மிக சிறப்பாக கருதப்படுகிறது.
ஸ்தல விருக்ஷம் :
இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்தது ஆகும். இந்த கோவிலில் ஸ்தல விருக்ஷமாக கொன்றை மரம் வன்னி மரம் உள்ளது சிறப்பு.
இந்த கோவிலில் பக்தர்கள் தங்களின் கோரிக்கை நிறைவேறியதும் அவர்கள் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் , விளக்கு ஏற்றியும் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை தீபம் ஏற்றியும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி
வருகின்றனர்
இக்கோவிலில் அர்ச்சனை அபிஷேகம் ஹோமம் செய்ய
7298999798
No comments:
Post a Comment