குலதெய்வ வழிபாடும் அதன் பயன்களும்:

 






குலதெய்வ வழிபாடும் அதன் பயன்களும்:

         குலதெய்வ வழிபாடு என்பது நம் முன்னோர்கள் முதல் தொன்று தொட்டு வரும் ஒரு சம்பிரதாயமாக கருதப்படுகிறது.

குலதெய்வம் என்பது:

        குலதெய்வம் என்பது நமது குடும்பத்தை தலைமுறை தலைமுறையாக காப்பாற்றும் தெய்வம் ஆகும். ஆதலால் தான் இதனை குலதெய்வம் என்று கூறுகின்றனர்.






எதனால் குலதெய்வ வழிபாடு:

     குலதெய்வ வழிபாடு செய்வதால் கடன் தொல்லை , நோய் பிணி, குடும்ப சண்டை ஆகியவை அகலும். வருடம் ஒரு முறை குலதெய்வ வழிபாடு செய்வது மிக அவசியம்.

குலதெய்வம் உருவான முறை:

        ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலைமுறை தலைமுறையாக ஒரு தெய்வம் பாதுகாத்து வருவது வழக்கம் அப்படி உருவானது தான் குலதெய்வம் எனப்படும்.

        மேலும் பெண் சுமங்கலியாகவோ அல்லது குழந்தையாகவோ இறந்திருந்தால் அந்த பெண் அந்த குடும்பத்தை காப்பாள் என்பது ஐதீகம். அந்த பெண்ணையே குலதெய்வமாக சில குடும்பங்கள் வழிபட்டு வருகின்றனர்.

குலதெய்வ பூஜை :

       குலதெய்வ பூஜை என்பது முறையே நடப்பதில்லை . அந்த குடும்பத்தில் உள்ள முன்னோர்கள் அல்லது அந்த குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஆரம்பித்த ஒன்றாக உள்ளது. அவை அனைத்தும் அந்த குடும்பத்தில் உள்ளவர் மட்டுமே பங்கேற்க முடியும்.

Image result for குலதெய்வம் images

குலதெய்வ வழிபாடு:

       குலதெய்வ வழிபாட்டில் அதிகமாக வீட்டில் நடக்கும் அனைத்து விசேஷங்களுக்கும் குலதெய்வ வழிபாடு என்பது மிக முக்கியம். உதாரணமாக குழந்தை பிறந்தால், காத்து குத்துதல், வேலை கிடைத்தால் மற்றும் விஷேஷ தினங்களில் குல தெய்வ வழிபாடு நடத்தினால் செல்வம் சேரும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment