திருமண தடை நீங்க வணங்க வேண்டிய கோவில்:
திருமண தடை நீங்கவும்
குடும்பத்தில் நிலவும் கஷ்டம் தீரவும் வழிபட வேண்டிய தெய்வம் தான் செல்லாண்டி
அம்மன் திருக்கோவில் திருப்பூர் .
எங்கு உள்ளது :
இந்த திருக்கோவில் திருப்பூர்
மாவட்டத்தில் நொய்யல் நதிக்கரையில் வளம் பாலம் என்ற
இடத்தில் அமைந்துள்ளது.
நடை திறக்கும் நேரம்:
திருக்கோவில் ஆனது காலை ஆறு மணி
முதல் பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி
வரையிலும் திறந்திருக்கும்.
கோவில் சிறப்பு:
இந்த திருக்கோவிலில் திருமண தடை
நீங்கவும், குழந்தை வரம்
வேண்டியும் , குடும்ப
கஷ்டம் தீரவும் இந்த கோவிலில் வந்து வழிபடுகின்றனர்.
ஸ்தல வரலாறு:
வீடு கட்டுவதற்கு கல் எடுத்து வர
திருப்பூரில் இருந்து திருவுடையூருக்கு சென்றனர். அப்போது அது பாண்டியர் ஆட்சி
காலம். அவர்கள் எடுத்து வந்து கொண்டிருந்த பொழு நொய்யல் நதிக்கரையில் மழை பெய்து
தண்ணீர் வெள்ளம் போல காட்சி அளித்தது.
வெள்ளம் கரை புரண்டு
ஓடியதால் பாதி கல் மட்டும் எடுத்து வைத்து
மீதி கல்லை கரையில் வைத்து சென்றனர். ஒரு கல்லினை
வடக்கு பக்கத்தில் இருந்த வனத்தில் இட்டு
சென்றனர்.
அந்த இடம் தான் இப்போது இருக்கும் பிச்சம்பாளையத்தில் இருக்கும் மாறி அம்மன்
கோவில். மற்றொரு கல்லானது முனியப்பன் கோவிலாக உள்ளது.
இவர்கள் அனைவரும் மறுநாள் வந்து
அந்த கல்லினை தூக்கும் போது அந்த கல் மிகவும் பலமாக இருந்தது. அவர்கள் கல்லினை தூக்கி கொண்டிருக்கும் போது
அருகில் அம்மன் தோன்றி என்னை இங்கு வந்து பிரதிஷ்டை செய்துள்ளீர்கள் . நான்
இங்கேயே இருந்து விடுகிறேன் என்று கூறினார். அந்த கோவில் தான் இப்போது எழுந்தருளி
இருக்கும் செல்லாண்டி அம்மன் கோவில்.
நொய்யல் நதி:
இந்த நொய்யல் நதி தான் 1945 முதல்
1970 வரை இந்த நதியில் இருந்து தான் அம்மனுக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்தனர் என்பது வரலாறு.
இந்த நதியில் 16 அடி உயரம் பாம்பு இருப்பதாக வரலாறு.
பாம்பு நடமாட்டம்:
இந்த நொய்யல் நதியில் உள்ள பாம்பு
ஒவ்வொரு வருடமும் தீ மிதி திருவிழாவின் பொது குண்டத்தின் வருவதாக ஐதீகம்.
அம்பாள் அமைப்பு:
நான்கு திருகரங்களுடன் நின்ற
நிலையில் இருக்கும் அம்மன் தான் சிறப்பு. அம்மனை சுற்றி மயானம் தான் உள்ளது.
அம்மனின் வாகனமாக யாழி உள்ளது.
கோவில் அமைப்பு:
இந்த கோவிலில் செல்லாண்டி அம்மன்
வடக்கு பார்த்தும்,
பேச்சியம்மன்,
கன்னிமார்களும் முருகன்,
அரசமரத்தடி விநாயகர்,
தட்சினாமூர்த்தி,
ரிஷப வாகன சிவன்,
நீலி தேவி,
நீளிகண்டி,
மகாமுனி, ,முத்தையன், கருப்பராயன், முநீஸ்வரர்ன், கிருஷ்ணாம்பாள், கிருஷ்ணா அய்யர், மகேஸ்வரி, வைஷ்ணவி, துர்கை, ராகு கேது ஆகியோர் காட்சி
தருகிறார்கள்.
வேண்டுதல்கள் :
இந்த கோவிலில் திருமண தடை நீங்கவும், குழந்தை வரம் வேண்டியும், பக்தர்களின் குடும்ப
கஷ்டம் .தீருவதர்க்கும்,
வியாபார செழிப்பதர்க்கும்,
பில்லி சூனியம் தீரவும் மக்கள் இங்கு அதிகமாக வருகின்றனர்.
பக்தர்கள் இங்கு வந்து தங்களின்
கோரிக்கை நிறைவேறிய உடன் பால் குடம்
எடுகின்றனர்.பிறகு அக்னி குண்டம் மிதிகின்றனர். அம்மனுக்கு பட்டினால் ஆன
புடவையை வாங்கி கொடுத்தும்,
அபிஷேகம் செய்தும்,
அர்ச்சனை செய்தும்,
விளக்கு ஏற்றியும் தங்களின்
வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்கின்றனர்.
No comments:
Post a Comment