நாக தோஷங்கள் அனைத்தும் தீர வணங்க வேண்டிய கோவில்:
அஷ்ட நாக தோஷம் எனப்படும்
அனைத்து வகையான தோஷங்களும் தீர வழிபட வேண்டிய கோவில் தான் வடபாதி அம்மன் கோவில்.
எங்கு உள்ளது:
இந்த திருக்கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடபாதி என்ற ஊரில்
உள்ளது.
நடை திறந்திருக்கும் நேரம்:
காலை ஆறு மணி முதல் பத்து மணி
வரையிலும் அதேபோல் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும்
திறந்திருக்கும்.
ஸ்தல வரலாறு:
சிவனின் மனைவியான பார்வதி தேவி
சிவபெருமானின் .கண்களை மூடினார். அப்போது அனைத்து உலகமும் இருளில் மூழ்கியது.
அப்போது சிவ பெருமான் கோபம் கொண்டு பார்வதி தேவிக்கு இட்டார். பிறகு திருக்கடிகை என்ற ஆற்றின் அருகில் சென்று தன்னை நினைத்து தவம் இருக்கும்
படியும் கூறினார்.
அந்த ஆணையை பார்வதி தேவி
நிருபிக்கும் விதமாக அந்த தோட்டத்தில் வந்து சப்த மாதாக்களுடன் பூஜை .செய்து
வந்தார்.
நாட்கள் வெகுவாக ஓடியது. வழக்கமாக
பங்குனி உத்திர பெருநாளில் அம்பாளும்,சிவனும் கல்யாண நாளாக ,கொண்டாடுவதுண்டு. அன்று
பங்குனி
முக்காலமும் அறிந்த தேக்வர்கள்,முனிவர்கள் என அனைவரும் சிவனையும் பார்வதியையும் வணங்கி
ஆசிவாதம் பெறுவார்.
அன்று பங்குனி உத்திரம் கைலாயத்தில் சிவ பெருமான் தனியாக இருப்பார்
என்று அறிந்து சப்த மாதக்களில் கவுமாரியை
தோட்டத்தில் காவலுக்கு வைத்து மற்றவர்களை அழைத்து கொண்டு கயிலாய்த்திரு சென்றார்.
பிறகு அதனை எல்லாம் அறிந்த கந்தர்வர்கள்
சப்த மாதாக்களின் கவுமாரியை
மயக்கமுற செய்து விட்டு தோட்டத்தில் இருந்த அத்தனை பூக்களையும் பறித்து எடுத்து
சென்று விட்டனர்.பிறகு அதனை கண்ட தேவி
அனைத்தையும் உணர்ந்தால். கந்தர்வர் அனைவரையும் தனது நெற்றியில் உள்ள தீயினால்
அழித்து அங்கேயே சந்தமாக அமர்ந்து காட்சி
தந்தாள்.
பூக்களின் நடுவில் அமர்ந்ததால்
அந்த அம்மனை பூமாத்தமம்மன் என்று பக்தர்கள் கூறினார்.
பூமாத்தம்மன் அமைப்பு:
இந்த கோவிலில் உள்ள அம்பாள் பத்ம
பீடம் என்னும் பீடத்தில் அமர்ந்து தண்டை நாடி வரும் பக்தருக்கு
அருள்பாலிக்கிறார்கள். மேலும் லலிதா சஹஸ்ரநாமத்தில் ஆதி சங்கரர் அம்பாளை
தக்ஷிணாமூர்த்தி ரூபினி என்று போற்றியுள்ளார் .
அதனை நிருபிக்கும் வகையில்
தட்சிணாமூர்த்தி போல கல்லினால் ஆன மரத்தின் கீழ் அம்பிகை வீற்றிருக்கிறாள்.
மேலும் இந்த அம்பாள் பூணூலினை அணிந்து பக்தருக்கு காட்சி தருகிறார்.
தாலாட்டு:
பூமாத்தம்மனின் தாலட்டினை பாடினால்
குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது
வரலாறு.
கோவில் அமைப்பு:
இந்த கோவிலில் வேப்ப மரம், அரசமரம், விஜயகனபதி, நாகளின்கேஸ்வரர், .நாகங்கள், அங்காளபரமேஸ்வரி, தன்வந்திரி, சப்தமாதக்கள், அதர்வண பத்ரகாளி, பிரத்யங்கிரா மூர்த்தி, சிவன், அபிராமி,சர்ப்ப லிங்கேஸ்வரர்,பால முருகன்,
பால கனேஸ்வரர், அகத்தியர்,ரேணுகா
பரமேஸ்வரி
போன்றவர்கள் காட்சி தருகின்றனர்.
மூலவர் பிராகாரத்தில் ஞான சக்தி
கணபதி ஐந்து தலை நாகம்,
தம்பதி சமேதராய் முருகர்,
பாம்பன் சுவாமிகள், அருணகிரிநாதர்,அஷ்ட புஜ
பைரவர், கருப்பனச்வாமி ஆகியோர் அருள்பாளிகின்றனர்.
வேண்டுதல்கள்:
இங்கு அசத தோஷம் நீங்கும் அஷ்ட
நாகம் உள்ளதால் இங்கு நாகங்களுக்கு விளக்கு வைத்து பூமத்தம்மனுக்கு குங்குமத்தால்
அர்ச்சனை செய்ய மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் . மேலும் அம்பாளுக்கு தங்கத்தால்
திருமாங்கல்யம் சாற்றிட திருமாங்கல்யம்
நீடித்து இருக்கும் என்பது ஐதீகம்.
மேலும் இந்த திருகோவிலில் அஷ்ட நாக
தோஷம், கால சர்ப்ப
தோஷம் என்று நாகத்தினால் வரும் தோஷங்கள் அதனையும் நிறைவேரும் திருத்தலமாக உள்ளது.
அம்பாள் சிறப்பு:
இந்த கோவிலில் வீற்றிருக்கும்
அம்மன் கல்லினால் ஆனது. மேலும் இந்த அம்பாள் ஒரு கண் மேல் பார்த்தும் இன்னொரு கண்
பூமியை பார்த்தும் உள்ளது சிறப்பு. காதில் தோடாக குழந்தையும் மறு காதில் மகர
குண்டலமும் அணிந்து இந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.
ஸ்தல விருக்ஷம்:
இந்த கோவிலில் தல விருக்ஷமாக கருதபடுவது
கல்வாழை, அரசமரம்
ஆகும்.
விசேஷ தினங்கள்:
இந்த திருகோவிலில் அம்மாவாசை,பவுர்ணமி, அஷ்டமி,நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரை வருடபிறப்பு,ஆணி திருமஞ்சனம்,
ஆடிப்பூரம்,
சாரதா நவராத்த்ரி,
மார்கழி உற்சவம்,
மாசி மகம் ,
சிவ ராத்திரி ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடபடுகிறது.
No comments:
Post a Comment