Navagrha Temple Sooriyanar Temple:: Sooriyan

சூரியனார் கோவில் :

    இத்திருதலமனது நவக்ராங்களின்  ஒன்றான   சூரியனுக்கு தனிக் கோவில் அமைந்துள்ள இடம் தான்  சூரியனார் கோவில். இத்திருத்தலம்  சூரிய தோஷம் இருந்தால் அதற்கு பரிகம் செய்யும்  அமைந்து உள்ளது.





அமைந்துள்ள இடம்:

    கும்பகோணத்துக்கு அருகே பூம்புகார் செல்லும் பாதையில் உள்ளது.   அணைக்கரை யில் இருந்தும் நிறைய பேருந்துகள் உள்ளது., சூரியனார் கோவிலுக்கு அருகே திருமங்கலக்குடி உள்ளது. அங்கும் நிறய பேருந்துகள் உள்ளது.

இறைவன் மற்றும் இறைவி :

        இங்கு வீற்றிருக்கும் ஈசனின் பெயரே சூரியனஆகும்.
கோவிலில் சிறப்பம்சம் :

  நவக்ராஹங்களின் முதன்மை மற்றும்  முக்கியமானது  சூரியன் ஆகும். மேலும் சூரியனுக்கு உள்ள இரண்டு கோவில் ஒன்று திருமங்கலக்குடி அருகில் உள்ள சூரியனார் கோவில்., மற்றொன்று கூனர்க் கோவில். கோனார்க் கோவிலில் சிலை கிடையாது. அனால் சூரியனார் கோவிலில் சிலை அதிமாக உள்ளார்.

சூரியனின்  பெருமை:

    சூரியன் என்றல் அதன் ஒளி மற்றும் அதன் வெப்பத்தை யாராலும் தாங்கி கொள்ள  .இயலாது . ஆனால் அவற்றை கட்டுபடுத்தும்   விதமாக குரு பகவன் இறவன் முன் நின்று மக்களுக்கு சரியான
வெப்பம் மற்றும் ஒளியை வழங்குகிறார் .
;இந்த திருக்கோவில் இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமையானது என்று சான்றோர் கூறுகிறார். மேலும் இந்த திருத்தலம் தான் சூரியனுக்கு தூந்திர முதல் திருக்கோவில் .

கோவிலின் சிறப்பு :
    இந்த திருகோவிலில் தான் சூரியன் தனது  மனைவியான உஷா தேவி மற்றும்  சாயா தேவி உடன் கட்சி தருகிறார். மேலும் திருமனக்ளத்தில் காட்சி தர்வதால் திருமண பாக்கியம் கைகூடும் . மேலும் நாவக்ரஹங்களில்  முதன்மை யாக கருதிய சூரியனே இங்கு முக்கியமாக உள்ளது அது  மட்டும் இல்லாமல் நவக்ராஹங்களும்  உள்ளத்தால்  அனைத்து நவக்ராஹங்கலுக்கும் எற்ற திருத்தலமாக உள்ளது

திருதல வரலாறு:

        பூம்புகாரில் வசித்து வந்த உச்சிகிழான் என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பூந்தோட்டம் ஒன்று அமைத்தார் . அவர் அமைத்த தோட்டம்    இயற்கை சீற்றத்தால்  அழிந்தது. ஆதலால் அதற்கு பதிலாக இறைவன் இந்த திருத்தலத்தை நிறுவியதாக கூறபடுகிறது .
மற்றொரு வரலாறாக காலவ முனிவர் என்ற ஒருவர் இருந்தார். அவர் மிக கடுமையான நோய் தொழு நோயினால் அவதி பட்டர். அப்போது நவகிரகத்தை வேண்டினால் சரி ஆகிவிடும் என்று தெரிந்து நவகிரகத்தை வேண்டினர்.  அப்போது சிவா பெருமான் அவர் முன் தோன்றி  குறைகளை நிறைவேற்றினர்.

அதனை கண்டு காலவ முனிவர் மீது  பெரும் கோபம் கொண்டார் பிரம்மா . மேலும் எனது வார்த்தையை மீறி நீங்கள் கடுந்தவம் மேற்கொண்டதால்  பூலோகத்தில் உள்ள அனைவரும்  தொழுநோய் பிடிக்கும் படி சாபம் இட்டர்
முனிவர் தான் செய்த தவறை உணர்த்தால் பரிகாரம் கேட்க வெள்ளை இருக்கு தோட்டதிருக்கு சென்றால்  பரிகாரம் கிடைக்கும் என்று கூறினார். அங்கே சிவ பெருமான் காட்சி தந்து  அருள் புரிந்தார்.  சிவ பெருமான் நீங்களே இந்த தலத்தில் அருள்பாளிகுமாறு கூறினார் .

இத்திருத்தலத்தின் மட்டற்ற சிறப்பு:

     இந்த திருதலமானது சூரியனுக்கு மட்டும் அல்லாது ஏழரை ஆண்டுகள் வர கூடிய சனி தோஷம் , சனியினால் வர கூடிய  அனைத்து  தோஷங்களும் இந்த குளத்தில் நீராடி பனிரெண்டு வாரம் ஞாயிறு  கிழமைகளில் வேண்டி அர்ச்சனை செய்து வழிபட்டால் சனி மட்டும் அல்லது மற்ற  எந்த தோஷங்களும் வரத்து என்பது ஐதீகம் .
மேலும் சூரியனால் அருள கூடிய சூரிய பார்வை புத்தி ஆகியவை  சூரியனார் கோயிலில் வந்து ஞாயிறு அன்று சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம்  நடத்த சூரிய பகவன் அருள் புரிவர் .

.திருக்கோவில் அமைப்பு:

  இந்த தலத்தில்  சூரிய பகவானும் அவரது மனைவியும்  சேர்ந்து அருள் புரிகிறார்கள் .   சூரிய பாகனின் வாகனம் குதிரை என்பதால் அஆருக்கு முன் குதிரை உள்ளது. சூரியனின் கையில் கமல மலர்களை கொண்டுள்ளார் .
மேலும் இந்த திருத்தலத்தில் நவக்ரிஹங்களின் தனி தனி சன்னதிகள் உள்ளது. இவை அனைத்தும் ஈச பெரூமானால் வழங்கபட்டது .
ஸ்தல  விருக்ஷம் வெள்ள இருக்கு மரம் உள்ளது.

கோவில் வேண்டுதல்கள் :

  இந்த கோவிலில் உள்ள சூரியனுக்கு நேர்த்தி கடனாக தான் நிரைஎரியது நடந்தால் நாடி பூஜை செய்யப்படும், மேலும் சூரியனுக்கு மிகவும் பிடித்தமான சர்க்கரை பொங்கல், ரவா பொங்கல் காணிக்கையாக கொடுகின்றனர்.  மேலும் துலா பாரமும் நடைபெறுகிறது.

சூரியனுக்கு உகந்தவை:

     சூரியனின் தல விருக்க்ஷமாக கருதபடுவது இருக்கம் மரம், சிவப்பு  நிறம் சூரியன் விரும்புவது. மேலும் சிவப்பு வஸ்திரம் சாற்றி வழிபட்டால் நினைத்தது  நிறைவேறும் .  சூரிய பாகவானுக்கு  உகந்த மலர் தாமரை  மற்றும் எருக்கம் பூ . வாகனமாக எழுதீர் பூட்டிய குதிரை உள்ளது.  பிடித்த பண்டம் சர்க்கரை பொங்கல் மற்றும்  ரவையில் செய்த உண்வு  மற்றும் கோதுமையினால் ஆன பண்டம் .

 கோவில் நடை திறக்கும் நேரம்:

    காலை ஆறு மணி முதல் பதினொரு  மணி வரையிலும்  மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரையிலும் உள்ளது.















Thirunageswaram temple: ராகுஸ்தலம் :ராகு பரிகார கோவில்

ராகுஸ்தலம்  :: ராகு பரிகார கோவில் :: Thirunageswaram temple 

ராகு பரிகார ஸ்தலம்

ஊரின் பெயர் : திருநாகேஸ்வரம்

மூலவர்  : அருள்மிகு நாகநாத சுவாமி

அம்மன் : கிரிகுஜாம்பிகை .
          பிறையணி அம்மன்,


ராகுபகவான் கோவிலின் வெளி  பிராகத்தில் இருதேவியருடன் உள்ளார் .
காலசர்ப்ப தோஷம், களத்திற தோஷம்  முதலிய தோஷங்கள் இக்கோவிலில் உள்ள ராகுவை வழிபடுவதன் மூலம் நீங்கும் .



அமைந்துள்ள இடம் : கும்பகோணதிலிருந்து பேருந்தில் காரைக்கால் சீல்லும் வழியில் சரியாக ஆறு கிலோ மீட்டர் சென்றால் திருநாகேஸ்வரம் உள்ளது . இதன் அருகே உப்பிலியப்பன் கோயில் என்ற பெருமாள் கோவிலையும் சென்று வழிபடலாம்


வரலாறு

நாகேஸ்வரம் என்ற ஊரில் சுசீல முனிவர் என்று ஒருவர் இருந்தார் . அவருடைய மகன் சுகர்மன் என்பவன் காட்டின் வழியே சென்று கொண்டிருந்தபோது தக்கன் என்ற பெயருடைய பாபு அவனை கடித்தது . உடனே கோபம் கொண்ட முனிவர் நீ மனிதனாக பிறக்க வேண்டும் என்று பாம்பிற்கு சாபம் தந்தார் .

ராகுவுக்குரிய சிறப்பான என்ற பெயர் பெற்ற தலம் இது .


 சாபத்திலிருந்து விடுபடுவதற்காக  தக்கன் லிங்கத்தை பூஜித்து வந்தான் .மனமிறங்கிய சிவன் தக்கனுக்கு காட்சி தந்து சாபத்திலிருந்து விடுபட செய்தார் .

நாகத்தை சாபத்திலிருந்து விடுபட செய்ததால் நாகநாதர் என்ற பெயர் வந்தது .

இங்குள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கிரிகுஜாம்பிகை .ராகுவும் விநாயகரும் தனித்தனி சன்னதிகளில்  அருள்பாலிக்கின்றனர் .மிகப்பெறிய ராகு தோஷம் உள்ளவரும் இங்குள்ள ராகுவை வழிபட ராகு தோஷம் நிவர்த்தியாகும் . மற்றும் லட்சுமி , சரஸ்வதி , அம்மன் சன்னதியில் இடம்பெற்றுள்ளனர் .

தோஷ நிவர்த்தி

கடுமையான ராகு தோஷம் உடையவர்கள் ராகுவுக்குபாலை கொண்டு அபிஷேகம் செய்தால் ராகு தோஷம் நிவர்த்தியாகும் .நவகிரகத்தில் ஒன்றான ராகு வீதியுலா செல்வது மிகச்சிறப்பான ஒன்றாகும் .

திங்களூர் :: கயிலாயநாதர் (சந்திரன்) :: Chandiran Temple Thingaloor

சந்திரன் ஸ்தலம் திங்களூர் : செவ்வாய் பரிகார கோவில் :: சந்திர தோஷம் பரிகார கோவில்

நவக்ரஹ வாசஸ்தலமான சந்திரனுக்கு உகந்த இடமாக திங்களூர் திகழ்கிறது. இந்த ஊர் நவக்ரஹ கோயிலில் ஒன்றாக கருதப்படுகிறது. இது திருவையாறில் இருந்து கும்பகோணம் செல்லும் பாதையில்  மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பழனம்  தொலைவில் இடது பக்கமாக சென்றால் திங்களூர் சந்திர பகவானை தரிசிக்கலாம். திருபழனம் என்பது மிகும் பிரசித்தி பெற்ற பாடல் பெற்ற திருதலமாகும் .



இந்த திங்களூர்  கைலாசநாதர் கோவில் ஆனது   தஞ்சாவூர்  மாவ ட்டம் , திருவையாறு வட்டம், கும்பகோணம் வழியில் அமைந்து உள்ளது. திருவையாரில் இருந்து பல பேருந்துகள் இங்கு இயக்கபடுகிறது.  இந்த ஆலயம் காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரையிலும்  அதே போல்  மாலை  4.00 மணி முதல் இரவு  8.00 மணி வரையிலும்  செயல்படும் .


திங்கள் என்ற சொல்லுக்கு சந்திரன் என்று பொருள்படும்.  இங்கு குடி கொண்டிருக்கும் ஈச பெருமானின் பெயர் கைலாசநாதர் ,  அம்பிகையின் பெயர் பெரியநாயகி. இத்திருகோயிலில் சுந்தர் மற்றும் அப்பர் பல பதிகங்களை பாடி உள்ளனர். அப்பதிகமான அப்பர் (6-25-3),  சுந்தரர் (7-31-6)



அப்பர்,  சுந்தரர் மட்டும்  அல்லாது  திருநாவுகரசரும் இந்த தலத்தை  போற்றி  பாடியுள்ளார்.  திருநாவு கரசர் எழுதிய  6 வது திருமுறையில் 25 ஆம் பதிகத்தில் 3-வது பாடலில் இந்த  திருத்தலத்தை பட்டிய குறிப்புகள் உள்ளன என்பது சான்றாக உள்ளது. இந்த பதிகம் அனைத்தும் திருவாரூர்  தலத்திருக்கு  சொந்தமானது.



சுந்தரர் இந்த தளத்தை பற்றிய ஒரு குறிப்பில் கூறியதாவது , திங்களூ ரை  சுற்றி உள்ள மாவூர், தேரூர்  மற்றும் திங்களூரில் வீற்றிருக்கும் மேலும் தனது அழகிய சடை மீது பிறையை அணிந்து , வீடுகளின் மிக அம்சமாக விளங்கும்  பெரிய மடங்களையும் உடைய அழகிய ஊரில் , அயல் வெளிகளின் நீர் வளம் உள்ள மிக அழகிய தோற்றமும்  கொண்ட ,  அனைத்து  ஊர்களிலும் உள்ள அனைரும்  உமையாளின்  பதியே  என்னுடைய  " ஈசனே ஈ சனே " என்று அழைக்கும்  மக்கள் அழைக்க நீ எங்கு சென்று உள்ளாயோ ? என்று திருநாவுக்கரசர் தனது  பதிகத்தில் கூறியுள்ளார்.சுந்தர் தனது பதிகத்தில் உள்ள சான்றாக 6 ஆம் பாடலில்  உள்ளது.  ஆனால் இந்த  திருபதிகம் திருஇடையாரு தலத்திருக்கு  உரியதாகும் .
மேலும் சுந்தரர் கூறுவதாவது,  தமிழில் விளங்குபவான் தான் இறைவன்  என்றும் தங்களை விட பக்தியில் யாரும் சிறந்து விளங்க மாட்டார் என்றும் கூறிய  சுந்தரர் , இது உங்கள் ஊர் மற்றும் உங்களை விட பக்தியில் சிறந்து வி லங்குபவரின்  ஊர் என்றும் சொல்லும்  அனியாரின் பொது உடமை நான் என்று கூறிய இறைவா தனக்கு பிடித்த ஊர் திங்களூர் என்று சொல்லும் ஈச பெருமானே  என்று சுந்தரர் தனது 6 அம பாடலின் மூலம் கூறி உள்ளார் .

தல வரலாறு:

     திங்களூரில் அப்பூதி அடிகள் என்ற ஓரோர்  இருந்தார்.அவர் திருநாவுக்கரசர் மீது மிகுந்த பற்றுடன் இருந்தார். அவர் திருநாவுக்கரசர் மீது இருந்த அன்பினால் தன்னிடம் உள்ள கோசலை , தண்ணீர்  பந்தல், தர்ம சாலை , அன்னம் இடும் சாலை ஆகிய அநை த்திருக்கும் திருநாவுக்கரசர் பெயர் வைத்து அகம் மகிழ்ந்தார்.  ஒரு முறை திருநாவுக்கரசர்  திங்களூர் வரும்போது அவை  அனைத்தும் கண்டார்.

அப்போது ஊரில் உள்ளார்களிடம் அதை பற்றி கேட்ட அப்போது அப்பூதி அடிகள் என்று தெரிய வந்தது .  உடனே அவர் இல்லத்திருக்கு செல்ல முடிவெடுத்தார். அதனை கண்ட அப்பூ தி  அடிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் . திருநா வு கரசருக்கு விருந்து கொடுக்க விரும்பினர். உடனே அவர் மனையிடம் சொல்லி விருந்துக்கான ஏற்பாடுகளை  செய்தார். இருந்தும் தயாரானது. உடனே அப்பூதி அடிகள் தனது மகனை கூப்பிட்டு சாப்பிடுவதற்கு நன்கு குருத்த வாழை இலை வேண்டும் என்றும் சிக்கிரம் பறித்து வர வேண்டும் என்றும் தனது  மகனிடம் கூறி தோட் ட த் திற்ர் க்கு  அனுப்பினர் .

அப்போது மகனும் தோட்டத்திற்கு  சென்று வாழை இலை  பறிக்க சென்றான். அப்போது வாழை தோட் டத்தில் எதிர் பாராத விதமாக  நாகம் ஒன்று தீண்டியது .  அவன் வாழை  தோட்டத்தில் இறந்து விட்டான். அப்பூதி அடிகள் அதனை கண்டு அதிர்ச்சி உற்றான். தந்து மகன் இறந்தது தெரிந்தால் அப்பர் உண்ண மாட்டார் என்றும் அப்பர் உணவு உண்பது  தடைபடும் என்றும் எண்ணி அப்பூதி அடிகள் மகன் இறந்ததை மறைத்து அப்பரை உணவு உண்ண  அழைத்தார்.



ஆனா ல்  அப்பரோ அப்பூதி  அடிகளின் மகனையும் உணவு உண்ண அழைத்தார் . ஆனால் அப்பூதி  அடிகள் தனது மகன் இறந்து விட்டத்தை  அப்பருக்கு தெரிவித்தார்.  உடனே அந்த சிறுவனின் உடலை கோயிலுக்கு எடுத்து சென்று அதனை கண்டு  அதிர்ச்சி உற்ற அப்பர் பதிகம் பாட முடிவெடுத்தார் . அப்போது " ஒன்று கொ லம் " என்று தொடங்கும் பாடலை பட ஆரம்பித்தார்.
அந்த பாடலை படி முடித்த உடன் சிறுவன் தூக்கத்திலிருந்து உயிர் பிழைக்கிறான். இந்த அதிசயமான நிகழ்ச்சி நடந்த இடம் "திங்களூர் " ஆகும். மேலும் இந்த தலத்தின் மற்றுமொரு சிறப்பாக கருதப்படுவது வருடா  வருடம் பங்குனி  உத்திரம் அன்று சரியாக  காலை 6 மணிக்கு  சூரிய கதிர்கள் ஈச பெருமானது உடம்பில் படுவது மற்றொரு  சிறப்பு . சூரிய கதிர் ஈசனின் மீது படர்வதால் அன்று சூரிய பகவானுக்கு சூரிய பூஜையும் 
சூரிய கதிர் பட்ட அடுத்த நாள் பெளர்ணமி பாட்டி முகத்தன்று சந்திர ஒளி சிவ பெருமான் மீது படரும். ஆதலால் அன்று  மாலை சந்திர பூஜையும் நடைபெறுவது        சிறப்பு இந்த திருக் கோவிலில் சந்திர பகவானுக்கு தனி சன்னதி உண்டு . மேலும் அப்பூதி  அடிகளாரின் மகனை பாம்பு கடித்த விஷத்தில் இருந்து காபா ற்றியதால் இங்கு  வசிக்கும் மக்களுக்கு பாம்பு  கடித்தால் விஷம் ஏறுவதில்லை .      
குறிப்பாக  ஜாதகத்தில்  சந்திரன்  தோஷம்  இருபவருக்குஇத்திருக்கோவிலுக்கு  வந்து  அர்ச்சனை அபிஷேகம்  செய்பவர்களுக்கு  சந்திர தோஷம்  விலகும்  என்பது ஐதீகம் .  

மேலும் ஜாதகத்தில்  சந்திர தோஷம் நீங்க இத் திருகோவிலில் உள்ள இத் திரு குளத்தில் புனித நீராடி சந்திர பகவனை மனதார  வழிபட்டால் சந்திர தோஷம் நீங்கி சகல நன்மைகளும் கிட்டும்  
இந்த ஆலயம் கிழக்கு நோக்கி உள்ளது . ஆனால்  தெற்கு நோக்கிய வாயில் பயன்படுத்த படுகிறது . இங்கு உள்ள சிவ  பெருமானின் பெயர் கைலாயநாதர் இங்கு வீற்றிருக்கும்  அம்பிகையின் பெயர் பெரியநாயகி. இக்கோவிலின் சிறப்பு தெற்கு பார்த்த வாயில் பெரியநாயகி  அம்பாளின் சன்னதி. மூலவரை  சுற்றி நிறைய சன்னதி  உள்ளன .கோவிலுக்கு அருகாமையில் மிகவும் பிரசித்தி பெற்ற சந்திர திருக்குளம் உள்ளது. மூலவரை சுற்றி உள்ள வெளி பிரகாரத்தில் முருகன் சன்னதியும் விஷம்  தீர்த்த விநாயகர் சன்னதி இதை தவிர  சண்டீகேஸ்வரர்  உடனுறை சண்டிகேஸ்வரி அம்மனும்  தனி சன்னதியில் வீற்று  இருகிறார்கள்.             இந்த தலத்தின் அதிபதியான சந்திரன் தனி சன்னதியில் உள்ளார். அவர் மேற்கு நோக்கி பார்த்தபடி சினை நோக்கி உள்ளார். இத்திருத்தலத்தில்  உள்ள உள்  பிரகாரத்தில் வலதுபுரம்  அப்பூதி அடிகள்  மனைவி , இடது பக்கமாக அப்பூதி அடிகள் மற்றும் முதல் திருநாவுக்கரசர் , ஆருக்கு அடுத்து அந்த இளைய திருநாவுக்கரசர் ஆகியோர்  சிலைகள் உரூவாக்கப்பட்டு   உள்ளது.  மேலும் இந்த  கோவிலில் சிறப்பு பூஜைகளாக  மார் கழி  திருவாதிரை ,  பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் , மஹா சிவராத்திரி  ஆகியவை மிக சிறப்பாக கொண்டடப்படுகிறது .


அதுமட்டும் அல்லாமல் பிறந்த ஆறு மாதத்தில்  உள்ள குழந்தைக்கு முதன் முதலில்  அன்னம் ஊட்டும்  "அன்ன பிரவேசத்திற்கு " மிகவும் உகந்த இடம்  இந்த புனித  தலமான  திங்களூர்  கோயில்
இத்திருகோவிலின் சந்திரன் தோஷம் நீங்க சுவாமிக்கு மற்றும் அம்பாளுக்கு  வஸ்திரம் சாற்றி கோவிலில் திருப்பணி வேலை செய்யும் போது திருப்பணி வேலை செய்து தனது வேண்டுதலை நிறை வேற்றலாம்.

திருவெண் காடு புதன் திருத்தலம். Budhan temple Thiruvengadu

திருவெண் காடு  புதன்  திருத்தலம்.  Budhan temple thiruvengadu

திருவெண் காடு  புதன்  திருத்தலம்.  இத்திருக்கோவில் பாடல் பெற்ற திருத்தலம் . அப்பர், மாணி க் கவாசகர், சுந்தரர்,  சம்பந்தர் ஆகியோர் வ ழிபட்ட  பாடல் பெற்ற தலம்.  இது  நவக்ராஹங்களின் ஒன்றான புதனுக்கு உரியதாகும் . இத்திருக்கோயில் நா கப்பட் டினம்  மாவ ட்டம்  சீரிகாழி  வ ட்டத்தில் அமைந்து உள்ளது. மேலும்  தே வா ர திருத்தலமாக   உள்ளது.  இது தேவா ர  திருத்தலமான காஎரி வடகரை  பகுதியில் அமைந்த 11 அது திருத்தலம் ஆகும். இந்திரன் வெள்ளை யானை   வழிப்பட்டதாக  தொன்மையான வரலாறு கூறுகின்றது.


சுயம்பூவாக  தோன்றிய லிங்கம் இங்கு வழிபடபடுகிறது.  இது 11 சிவ வாசச்ச்தலங்களில் ஒன்றாக கருதபடுகிறது. 

தல வரலாறு:



   அசுரன் என்ற ஒருவன் இருந்தன். அவன்  பெயர் மருத்துவன்    .  ஆன் பி ர ம்மா  தேவனிடம் வரம்  பெற்றவன்.  ஆன் தேவர்களுக்கு மிகவும் துன்பம் செய்தான்.  சிவன் தேவர் களுக்கு ஆணையிட்டான்.  திருவெண்காட்டிற்கு சென்று தங்குமாறு சிவா பெருமான் உத்தர வி ட்டார் .   தேவர்களும் மாறுவேடத்தில் வ ந்து  திருவெண்காட்டில் தங்கினர்.   அசுரன் மிகும் தவத்தில் இருந்தன். சிவா பெருமான் ஆன் முன் தோன்றி  வரம் அருளினார்.  சிவ ன் சூலாயுதம்  வ ழங்கினர்.  சியன் அருளிய சூலாயுதத்தால்  ரிஷப தேவரை குத்தி துன்புரித்தினான்.   அதனை கண்டு கோபம் கொண்ட ஈசன்  தனது பஞ்ச முகத்தின் ஒன்றான அகோர மூர்த்தியை  தோன்றவித்தார்.  அகோர மூர்த்தியை கண்ட அசுரன் பயந்து நடுங்கினான்.  பயம் கொண்ட அசுரன் சிவனிடம் சரணா கதி  அடைந்தான்.


 அகோர மூர்த்தியின் காலடியில்  சரணாகதி அடைந்த அசுரன் மற்றும்  துன்பப்பட்ட   ரிஷப தேவர் அங்குள்ள கோயில் மண்டப்பத்தில் இன்றும்  காணலாம்.



  இக்கோயிலின் மற்றும் ஒரு சிறப்பாக கர்தபடுவது காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல் இங்கு தல விருக்ஷமான வடவால் விருக்ஷத்தின் கீழ்  "ருத்ர பாதம் " உள்ளது. இங்கு ஸ்படிக லிகம் உள்ளது. இந்த லிங்கத்திற்கு ஒரு ஆண்டில் நான்கு அபிஷேகமும்  நடைபெறும். மேலும் அங்கு கோவில் கொண்ட நடராஜ் பெருமானுக்கு ஒரு ஆண்டிற்கு  ஆறு கால  அபிஷேகமும் நடைபெறுவது  சிறப்பு அம்சமாகும்.


இங்கு உள்ள ஈசனுக்கு திருவெண்காட்டு பெருமான், திருவெண்காடுடைய நாயனார் , திருவெண்காடர் , திருவெண்காடையார்,  திருவெண்காட்டு தேவர் என்ற சிறப்பு பெயர் பெற்று  திகழ்கிறார்.


இதிகாசத்தில் ஒன்றான இராமாயணத்தில் திருவெண்காடு  பற்றி வால்மீகி  கூறியுள்ளார்.
சிவபெருமானுக்கு மொத்தம் 64 வடிவங்கள். அதில் 43 வது வடிவம் தான் அகோரமூர்த்தி வடிவம். ஆதலால் திருவெண்காட்டில் அகோரமூர்த்தி வடிவம்  சிறப்பு வாய்ந்தது .
இந்த திருவெண்காடு "ஆதி சிதம்பரம்" என்று அழைக்கபடுகிறது. சிவபெருமான் 1008 விதமான  தாண்டவங்கள் புரிந்த தலம் என்ற  .சிறப்பும் உண்டு.  இந்த திருத்தலத்தில் தான் சிவபெருமான் "அனந்த தாண்டவம் "  புரிந்ததாக கூறப்படுகிறது.  இத்திருத்தலம்  108 சக்தி  ஒன்றாக கருதபடுகிறது . புதன் மட்டும் அல்லாது   சூரியன் மற்றும்  சந்திரன் ஆகியோர் வழிபட்ட திருத்தலமாக  உள்ளது.
பரிகார தல ங்களில்  புதனுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது இத்தலம்.


இங்கு மூன்று தீர்த்தங்கள் உள்ளது. அக்னி, சூரியன், சந்திரன் . இந்த மூன்று தீர்த்தங்களும் சிவ பெருமான் அனந்த தாண்டவத்தின் போது சிந்திய வியர்வை துளிகளே . 

படிப்பிற்கு அதிபதியாகவும் "புத " பகவன் திகழ்வதால் படிப்பில் நாட்டம் இல்லாத மாணவர்கள்  இங்கு வந்து தரிசனம் செய்தாலே அது பரிகாரமாக கருதபடுகிறது.  இராமயணத்தில்  வால்மீகி முனிவர் இத்திருத்தலம் பற்றி கூறுவதால்  இந்த தலம் 3000ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த தலம் .  இந்த கோயில் முழோதும் புதன் பரிகார தலமாக உள்ளது .  இந்த கோவிலில் வந்து  வழிபட்டால்  வாழ்கையில் பல நன்மைகளும், அறிவு  மற்றும் புத்தி கூர்மை கிட்டும் என்பது  ஐதீகம் . நவ க்ரஹ  கோயிலில்  இதுவே கடைசி கோவில் ஆகும்.

நவக்ரஹ கோவில்கள் (நவகிரக கோவில்கள் ) :Abathsahyeswarar Temple குருஸ்தலம் :: ஆலங்குடி குருபகவான் திருக்கோவில்:

ஆலங்குடி குருபகவான் திருக்கோவில் : Aalangudi Guru Temple :Abathsahyeswarar Temple :: குரு ::செவ்வாய் பரிகார கோவில்



ஆலங்குடி குருபகவான் திருக்கோவில் என்பது குரு பகவானுக்கு ஏற்ற  வாசஸ்தலமாக  உள்ளது.



இந்த திருக்கோவில் கும்பகோணத்திற்கு மிக அருகமையில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து நீடமன்கலம் போகும் பாதையில் சுமார் 18 கிலோ மீட்டர்  தொலைவில் உள்ளது. கும்பகோணத்தில் இருண்டு பேருந்தும், ரயிலும் இயக்கப்படுகின்றன. அருகில் உள்ள விமான நிலையம் திருச்சி .



இங்கு ஈசன் ஆபத்சகாயேஸ்வரர்  என்ற பெயரும் அம்பிகை ஏலவார்குழலம்மை என்ற பெயரில் எழுந்தருளி உள்ளனர்.  இந்த திருகோவிலில் வீற்றிருக்கும் ஈசன் சுயம்புஅக காட்சி அளிக்கிறார்.  




தல வரலாறு:
    முன் ஒரு காலத்தில் சோழ மன்னன் ஆட்சி காலத்தில் நடந்த கதை இது.  அந்த சோழ மன்னன் பெயர் முசுகந்தன்.  மன்னன் கோவில் கட்டுவதால்  புண்ணியம் என்று நினைத்து தனது மன்னரிடம் பணம்  கொடுத்தார். மன்னரின் பெயர் அமுதோகர். ஆனால் மந்திரியோ  மன்னர் கொடுத்த பணத்தை பயன்படுத்தமல் தன க்கு  புண்ணியம் வர வேண்டும் என்று எண்ணி தன்னுடைய  பணத்தை எடுத்து கோவில் கட்டினர் .


கோவில் கட்டி முடிக்கபட்டது.     மன்னர்  மந்திரியிடம்  கோவிலின்  புண்ணியத்தில் பங்கு கேட்டார். அப்போது மன்னரோ கொடுக்க மறுத்துவிட்டார். அதனால் கோபம் கொண்ட மன்னரோ மந்திரியின் சிரத்தை துண்டிக்க  தனது வாழை கையில் எடுத்தார். அப்போது இறைவன் அவர் கண் முன் தோன்றி  மந்திரியை  தன்னுடன்  அழைத்து சென்றார் என்று இக்கோவிலின்  வரலாறு ஆகும்.

அப்பொழுது சோழர் ஆட்சி காலம் என்பதால் திருவாரூரை  ஆட்சி புரிந்த சோழ மன்னர் திருகோவிலில் உள்ள சுந்தரர் சிலை அமைப்பை பார்த்து பிடித்து போக அந்த திரு உரு வ சிலையை தனது  திருவாரூருக்கு எடுத்து செல் விருபினான். ஆனால்  அர்ச்சகரோ  அந்த சிலையை காப்பற்ற "அந்த சிலை குழந்தை போன்றது  . அந்த சிலைக்கு அம்மை நோய்  தாக்கி  இருப்பதாகவும்  கூறினார்".  இப்படி பொய் ந்கூறி அந்த சிலையை கைப்பற்றினர் அர்ச்சகர்.

அர்ச்சகர் சொன்ன பொய் யினால்  அதனை மெய்யாக்க  அம்மை தழும்புகள் அந்த சிலை யை தாக்கி இருப்பதை இப்போதும் அங்கு காணலாம்.

இத்திருக்கோவில் தீர பாடல் பெற்ற திருத்தலமாகும். ஒருமுறை இத்திருகோவிலுக்கு 
திருஞானசம்பந்தர் வந்த பொழுது பதிகம் பாடி உள்ளார்.  அது மட்டும் அல்லாது ,வீரபத்திரர் , முசுகுந்தர், விசுவாமித்திரர் போன்றோர் வ ழிபட்ட  சிறப்பு தலமாக உள்ளது.
இந்த கோவிலில் இரண்டு தீர்த்தங்கள் உள்ளது. கோயில் அருகே சக்ர தீர்த்தமும் திருகோவிலை சுற்றி  அமிர்தபுஷ்கரிணி தீர்த்தமும் அமைண்ட சிறப்பு பெற்றது.
இத்திருத்தலம் முன்னொரு காலத்தில் திருஇரும்பூளை  என்று அழைக்கபடுகிறது. ஆனால்  தற்பொழுது  ஆலங்குடி  என்று பெயர் பெற்றிருகிறது.  ஒவ்வொரு குருபெயர்சியின் போதும் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது . மேலும் வியாழக்கிழமை  அன்று சிறப்பு மிகு பல பூஜைகள் நடைபெறும் .

இக்கோவிலின் மற்றுமொரு சிறப்பாக விலங்குஅது அதன் கலை நயம் மிக்க சிற்பங்கள். தெற்கு கோபுர வாசலில் மிகும் சிராவ்பு மிக்க சிற்பங்களை காணலாம்.
குரு பகவானுக்கு உகந்த ராசி "தனுசு, மீனம் " ஆகும். குரு பகவானின் அதி தேவதை  "வியாழன்" குரு  பகவானுக்கு உகந்த நிறம் "மஞ்சள் " . குரு பகவானுக்கு மிகவும் பிடித்த தானியம் கடலை . கடலையில்  பொருட்களை   குரு பகவானுக்கு  நிவேதனம் செய்தல் மிகவும் பலன் அளிக்கும்.
குரு பகவானின் உலோகம் தங்கம் . இந்த பகவானுக்கு முல்லை மர்களால் அர்ச்சிக்க நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் முல்லை மலர் குரு பகவானுக்கு உகந்தது. குரு பகவானுக்கு உகந்த ரத்தினம் : புஷ்பராகம். இத்திருகோவி லின்  ஸ்தல விருட்சமாக பூலைச்செடி விளங்குகிறது.
இத்திருத்தலம் பஞ்ச ஆரண்யத் தளங்களின் மிகவும் பிரசித்தி பெற்றதாக கருதபடுகிறது. 

மற்றுமொறு  தல வரலாறாக:

பாற்கடலை கடைந்த பொழுது ஈசன் கொடிய விஷ மாக  ஆலகால உண்ட  இதுஆகும்.  ஈசன் ஆலகால விஷத்தை  குடித்தால் இந்த தல ம் ஆலங்குடி  என்று பெயர் பெற்றதாகவும் கூறுகின்றனர்.


ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயில் புட்லூர் சென்னை - Angala arameswared temle chennai putlur

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயில் புட்லூர் சென்னை 

     இங்கு மூலவராக அங்கலபரமேஸ்வரி அம்மனும் விநாயகர் மற்றும் தாண்டவராயன் ஆகியோர் திகழ்கிறார்கள் . இங்கு வீற்றிருக்கும்  அம்மனின் பெயர்  பூங்காவனத்தம்மன்.  இங்கு வீற்றிருக்கும்  அம்மனின் பெயர்  பூங்காவனத்தம்மன்  .  தல விருக்ஷமாக  வேப்பமரம் உள்ளது .  இத்திருக்கோவில் 500-1000  முன் பழமை வாய்ந்த கோயில் ஆகும்
இத்திருக்கோவில்  திருவள்ளூர்  மாவட்டத்தில் உள்ள ராமபுரம் (புட்லூர்) என்ற ஊரில் அமைந்து உள்ளது

கோவில் வராலாறு :

அந்த ஊரில் விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார் . அவர்  பெயர் பொன்மேனி . அவர் அங்கு வசித்த மகிசுரன் என்பவரிடம் தன் நிலத்தை அடமானம் வைத்தான்.   அடமானம் வைத்த அந்த நிலத்திலேயே அவர் வேலை பார்த்து தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தான்.  மகிசுரன்  மிகவும்  அரக்க குணம் கொண்டவன் . அவன் அந்த ஊர் மக்கள் அனைவரிடமும்  நிலத்தை வாங்கி அனைவரது சொத்தை அபகரிப்பன் . பொன்மேனியால்  கடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை .  தினம் தினம்  அடிவாங்குவதை எண்ணி வருந்தினான். தினம் அடிவாங்குவதைவிட  ஒரே நாளில் செத்து விடலாம் என்று எண்ணினான்.







          கடனை திருப்பி தராததனால்  கோபம் கொண்ட மகிசுரன் பொன்மேனியை   அடித்து உதைத்தான் .   அன்று சிவராத்திரி   .  ஊருக்கு வெளியில் பூங்காவ னம் ஒன்று இருந்தது.  தீய சக்திகள்  உலாவும்  இடமாக அது  இருந்தது. கோபம் கொண்ட மகிசுரன் ஊரில்  அனைவரின்  முன்னிலையில்  ஊருக்கு  வெளியில் உள்ள பூங்காவ னத்தை
சிவராத்திரி  ஒரு நாள் இரவில் பொழுது விடிவதற்குள் உழுது, விதைத்து, நீர்பாய்ச்சி முடிக்குமாறும்  அப்படி முடிக்கவில்லை  என்றால்  கொன்று விடுவதாகவும் எ ச்சரித்து சென்றான்  . தினம் தினம்  அடிவாங்குவதை எண்ணி வருந்தினான். தினம் அடிவாங்குவதைவிட  ஒரே நாளில் செத்து விடலாம் என்று எண்ணினான். அவனின்  இஷ்ட  தெய்வம்  கருமாரி அம்மன்.  கருமாரி அம்மனை மனதில் எண்ணி  நிலத்தை உழ துவங்கினான்.


  நிலத்தை உழுது கொண்டிருக்கும் பொழுது ஒரு முதியவரும் மூதாட்டியும்   அங்குள்ள  மரத்தி ன்  கீழ்  களைப்பார  அமர்ந்தனர்.  மூதாட்டி மிகும் தாகத்தோடு காணப்பட்டாள் . அதை கண்ட பொன்மேனி  மூதாட்டி உடன் வந்த    முதியவரை  அழைத்துக்கொண்டு  தண்ணீர்  எடுத்து வர  சென்றான்.    
தண்ணீர் எடுத்து கொண்டு வரூம் போது  மூதாட்டி அங்கு இல்லை. உடன் வந்த முதியவரும்  இல்லை. அதிர்ச்சி  அடைந்த பொன்மேனி மறுபடியும் நிலத்தை உழ ஆரம்பித்தான். அப்போது கலப்பை பட்ட இடத்தில் இரத்தம்  பீறிட்டது.  அதிர்ச்சி அடைந்த பொன்மேனியை பார்த்து அசரீரி  ஒன்று " மூதாட்டி  வேடத்தில்  வந்தது  அங்காள பரமேஸ்வரி என்றும் முதியவர் வேடத்தில்  வந்தது சிவபெருமான்  என்றும் கூறியது.  

மேலும் அங்காள பரமேஸ்வரி அம்மன் மண் புற்றாக மாறியதாகவும்  ஏர் முனை தன்னை குத்தியதால் இரத்தம்  வந்ததாகவும்  வறுமையில்  வாடும் போதும்  நீ என்னை மறக்காமல் வே ண்டியதா ல்  தான் இ ங்கு ஈசனுடன்  வந்ததாகவும் , அம்மன் அங்கு இருப்பதை உலகில் உள்ள அனைருக்கும் எடுத்து காட்டியதால் சிவனையும் தன்னையும் பூஜிக்கும் பேரு பெட்ட்ரதாகவும்   அந்த அசரீரி கூறியது.  அசரீரி கூறிய அடுத்த நிமிடத்தில்  மண் விலகி புற்று தெரிந்தது. அங்கே அம்மன்

மல்லாக்க படுத்து இருப்பதை அவன் கண்டான். பூங்காவனத்தில்  தோன்றியதால் " பூங்காவனத்து அம்மன் " என்ற பெயர் சூட்டபட்டது.
அங்கு அம்மன் கால் நீட்டி ஆட்டி மல்லாந்து படுத்து வாய் திறந்து பிரசவத்தில் துடிக்கும் பெண்ணாக காட்சி  அளிக்கிறாள்.

கருவறையில் அம்மனுக்கு பின்புறம்  விநாயக மூர்த்தி தாண்டவராயன் என்ற பெயரிலும்  நடராஜ பெருமாள் மற்றும் அங்காள பரமேசுவரி  அம்மன்  வீற்றிருப்பது  இக்கோயிலின்  சிறப்பம்சம்.  அம்மனுக்கு  எதிரில் உள்ள பிரகாரத்தில் நந்தியம் பெருமான் வீற்றிருக்கிறான்.

இக்கோவிலின் பிரகாரத்தில் தல விருக்ச்சமான  வேப்ப மரம் உள்ளது . அந்த வேப்ப மரத்தின் கீழ் மற்றொரு மண் புற்று   உள்ளது.  அந்த மண் புற்றில்  அருகே கருமாரி, விநாயகர், நாக தேவதை ஆகியோர் உள்ளனர்.
இக்கோவிலில் உள்ள மற்றும் ஒரு சிறப்பம்சமாக விள ங்குகுவது  இத்திருகோவிலின்  வேண்டுதல். பெண்கள் ஒரு எலுமிச்சம் பழத்தை அம்மனின் திரு பாதத்தில்  வைத்து தனது புடவை முந்தானையைப் முந்தானையைப் பாதத்தின் அருகே பிடித்து வேண்டுகின்றனர். எலுமிச்சம்பழம் பாதத்தில் இருந்து உருண்டு வந்து முந்தானையில் விழுந்தால் கேட்டது கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை.
சன்னதி முழுவதும்  மஞ்சள் , குங்கும வாசனையுடன் உள்ளது.  பெண்கள் அதிகமாக இக்கோவிலுக்கு வ ருகின்றனர்.


திருமண தடை , குழந்தை பேரு , வீட்டில் வறுமை , கடன் தொல்லை அகியவற்றிலிருந்து  விடுபட  இத்திருகோவிலின்  பிராகா ர த் தில் உள்ள  வேப்ப  மரத்தில் புடவை முந்தானையிலிருந்து சிறிது கிழித்து கோயில் வெளியே மண்புற்று அருகே உள்ள வேப்பமரக்கிளையில் கட்டி விட்டால்  தனது துன்பத்தை அம்மன் தீர்த்து வைப்பதாக ஐதீகம்.






பிரார்த்தனை நிறைவேறியவுடன் அம்மனுக்கு நன்றி கூறும்  வகையில் பூஜை செய்கிறார்கள்.  இங்கு சிறப்பு பூஜையாக சிவராத்திரி, மாசி மகத்தன்று மயான கொள்ளை, ஆடி வெள்ளி, அமாவாசை  ஆகியவை  மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள்  இங்கு அதிகமாக வந்து குழந்தை   செல்வம் வேண்டி  வழிபடுகின்றனர்.

Vriddhagiriswarar Temple, Vriddhachalam

Vriddhagiriswarar Temple, Vriddhachalam

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்

The temple is surrounded by high walls and four gopurams. The mandapam is carved like a chariot. The chains of the temple car were donated by Charles Hyde, the District Collector of the then South Arcot district in 1813.

The most distinguishing feature of Tamilnadu is the proliferation of temples. The ancient Tamils were warned not to settle in a place where there is no temple naturally a large numbers of town and village bear the name of the chief diety of one of the temples located in the place. Virudhachalam an upcoming town 55 kilometer from south Villupuram is a shining example for this naming system.
Virudhagireeswarar Temple is known as Pazhamalainathar Temple. It is situated of the northen bank of the riverManimuthar. It is at a distance of 3 kilometers from Virudhachalam Railway junction and 1 kilometer from Virudhachalam Town Railway Station and 1 kilometer from Virudhachalam Bus Stand.

Moolavar : Vruddha Giriswararar ,pazhamalai Nathar, Mudhu Kundrar
The temple is praised by the three Saivite Saints Gnanasambandar, Tirunavukkarasar and Sundarar in their Thevaram hymns.  This is the 9th Shiva temple in Nadunadu region praised in hymns.

Virudhachalam is one of the 22 places of saivate pilgrimage in Tamilnadu. It is one of the place giving salvation to the departed. It is even considered holier than Holy Kasi i.e. Varanasi. People in the past believed that Pazamalainathar himself the presiding diety here used to ulter Panchatchara Mandiram into the ears of dead. Hence in olden days people of Virudhachalam never bothered to undertake a pilgrimage to Varanasi when they become old and weak. As a result this place is also come to known as Virudhakasi.
This temple has been constructed according to Agama Shastram and it has five Gopurams, five Praharams, five Nandhhi, five Kodimarm and five holy Cars.
Sri Thiruganasambhandar, Sri Thirunavukarasar, saint Sundrar had sung the golory of Pazhamalainathar.
It is to be noted that goddess is worshipped in the form of elderly lady called Periyayahi alias Virudhambihai. At this request of guru Namasivayar she also took the form of young women with the name Balambihai. Vannimaram is the Holy tree.

This temple has been constructed according to Agama Shastram and it has five Gopurams, five Praharams, five Nandhhi, five Kodimarm and five holy Cars.

Sri Thiruganasambhandar, Sri Thirunavukarasar, saint Sundrar had sung the golory of Pazhamalainathar.

It is to be noted that goddess is worshipped in the form of elderly lady called Periyayahi alias Virudhambihai. At this request of guru Namasivayar she also took the form of young women with the name Balambihai. Vannimaram is the Holy tree.

28 லிங்கங்கள்: சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார்.

இந்த லிங்கங்கள் கோயிலின் வடமேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.

28 ஆகமங்களுக்குரிய பெயர்களான காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.

விருத்தாச்சலம் பெயர்காரணம் : "விருத்த' என்றால் "முதுமை' என்றும் "அசலம்' என்றால் "மலை' என்றும் பொருள்படும். எனவே "விருத்தாசலம்' என்றால் "பழமலை' என்பது கருத்தாகிறது.தேவாரத்திருப்பதிகங்களில் அதே பொருளில் திருமுதுகுன்றம் என்று போற்றப்படுகின்றது.

ஐந்து மூர்த்தங்கள்: விநாயகர், முருகன், சிவன், சக்தி, சண்டிகேஸ்வரர்.

இறைவனின் ஐந்து திருநாமம்: விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர்,விருத்தாசலேஸ்வரர், முதுகுன்றீஸ்வரர், விருத்தகிரி.

ஐந்து விநாயகர்: ஆழத்து விநாயகர், மாற்றுரைத்த விநாயகர், முப்பிள்ளையார், தசபுஜ கணபதி, வல்லப கணபதி.

இறைவனை தரிசனம் கண்ட ஐவர்: உரோமச முனிவர், விபசித்து முனிவர், குமார தேவர், நாத சர்மா, அனவர்த்தினி.

ஐந்து கோபுரம்: கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம்.

ஐந்து பிரகாரம் (திருச்சுற்று): தேரோடும் திருச்சுற்று, கைலாய திருச்சுற்று, வன்னியடி திருச்சுற்று, அறுபத்து மூவர் திருச்சுற்று, பஞ்சவர்ண திருச்சுற்று.

ஐந்து கொடிமரம்: இந்த கொடி மரங்களின் முன்புள்ள நந்திகளுக்கு இந்திரநந்தி, வேதநந்தி, ஆத்மநந்தி, மால்விடைநந்தி, தர்மநந்தி என்று பெயர்.

ஐந்து உள் மண்டபம்: அர்த்த மண்டபம், இடைகழி மண்டபம், தபன மண்டபம், மகா மண்டபம், இசை மண்டபம்.

ஐந்து வெளி மண்டபம்: இருபது கால் மண்டபம், தீபாராதனை மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், விபசித்து மண்டபம், சித்திர மண்டபம்.

ஐந்து வழிபாடு: திருவனந்தல், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம்.

ஐந்து தேர்: விநாயகர் தேர், முருகன் தேர், பழமலை நாதர் தேர், பெரியநாயகி தேர், சண்டிகேஸ்வரர் தேர்.

தலத்தின் ஐந்து பெயர்: திருமுதுகுன்றம், விருத்தகாசி, விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி.

முத்தா நதியில் பொன் : ஒருமுறை, சுந்தரர் திருவாரூரில் நடக்கும் பங்குனி உத்திர விழவில் அடியார்களுக்கு அன்னதானம் செய்ய பொருள் சேகரிக்க ஒவ்வொரு தலமாகச் சென்றார். இத்தலம் வரும் போது இறைவன் சுந்தரருக்கு 12 ஆயிரம் பொன்னைத் தந்தார். திருவாரூர் செல்லும் வழியில் கள்வருக்கு பயந்து, இந்த பொன் அனைத்தையும் இங்குள்ள மணிமுத்தா நதியில் போட்டு விட்டு இறைவனின் அருளால் திருவாரூர் குளத்தில் மூழ்கி எடுத்தார். இதை அடிப்படை யாகக் கொண்டே, "ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது போல்' என்ற பழமொழி தோன்றியது.இறைவன் தந்த பொன் மாற்றுக்குறையாத தங்கம்தானா என்று சுந்தரர் மனம் அலைபாய்ந்ததை உணர்ந்த இறைவன் நம்பிக்கைக்காக தும்பிக்கை நாயகனை சாட்சியாக அமைத்து பொன்னை மாற்றுறைத்து காட்டினார். திருவாரூர் குளத்தில் பெற்றுக் கொள்ளவும் செய்தார். எனவேதான் இத்தலத்தில் உள் சுற்று பிரகாரத்தில் அமைந்துள்ள விநாயக பெருமான் மாற்றுரைத்த விநாயகர் என்ற பெயரோடு விளங்குகிறார்.

முருகன் சிவனை பூஜித்த தலம் இது. இறைவனது அருளால் சுந்தரர் பெற்ற பன்னீராயிரம் பொற்காசுகளை கள்வருக்கு பயந்து இந்நதி(மணிமுத்தா)யில் போடப் பெற்று பின்னர் திருவாரூர் குளத்தில் கிடைக்கப் பெற்றாராம். விபசித்து முனிவரால் திருப்பணி செய்யப்பட்ட திருக்கோயில் முதுகுன்றத் திருக்கோயில் ஆகும். மணி முத்தா நதிக்கரையில் அமைந்த முதுகுன்றம் என்பதுதான் பழமலை ஆகும். மற்ற சிவ தலங்களில் துர்க்கை அம்மன் சிவன் கோயிலில் ஆட்சி செய்வதாக அமைந்தி ருக்கும். ஆனால் இந்த முதுகுன்றத்தில் துர்க்கை உமையவளான விருத்தாம் பிகையின் வடக்கு பக்கத்தில் நின்ற கோலத்தில் இருந்து அருளாட்சி செய்வது சிறப்பு வாய்ந்தது ஆகும்.


ஒருமுறை உலகம் அழிந்த போது இந்தத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது என்ற புராணச் சிறப்பைப் பெற்றது. சிவத்தலங்கள் அனைத்திலும் 1008 தலங்கள் சிறப்பானதாக கூறப்படும். இதில் நான்கு தலங்கள் முக்கியமானவை. அதில் விருத்தாசலமும் ஒன்று. தேவர்களுக்காக இறைவன் இங்கு நடனம் ஆடியுள்ளார். சிதம்பரத்தில் சிவன் போட்டிக் காக ஆடிய தலம் என்றும், இத்தலம் சிவன் சந்தோஷத்திற்காக ஆடிய தலம் என்றும் கூறுவர். இங்குள்ள அர்த்த மண்டபத்தில் 4 வேதங்களே 4 தூண்களாக அமைந்துள்ளன. தல விருட்சம் வன்னிமரம் 3ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலில் திருப்பணி செய்த விபசித்த முனிவர், தன் வேலையாட்களுக்கு சம்பளமாக இம்மரத்தின் இலைகளை பறித்து தருவார். அது அவரவர் உழைப்புக்கு ஏற்ப பொற்காசுகளாக மாறிவிடுமாம்.

இத்தல தீர்த்தமான மணிமுத்தாறு நதியில், இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தால், அது கல்லாக மாறி நதியிலேயே தங்கிவிடுவதாக தல புராணம் சொல்கிறது. பெரியநாயகி யம்மை பதிகம், க்ஷேத்திரக் கோவை வெண்பா, பழமலை நாதர் அந்தாதி, பெரியநாயகி விருத்தம், கலித்தொகை, பிட்சாடன நவமணி மாலை, குருதரிசனப்பதிகம், பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்களும் இத்தலத்திற்குரியது. கர்நாடக மன்னன் இத்தலம் வந்த போது பசியால் வாடினான். அப்போது பெரியநாயகி இளமை வடிவெடுத்து பாலூட்டி அவனுக்கு குமார தேவர் என்று பெயர் சூட்டினாள்.

முக்திதலம் : காசியைப்போன்று விருத்தாசலமும் முக்தி தலமாகும். இங்குள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி மூலவர் பழமலைநாதரை வழிபட்டால், காசியில் நீராடி விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே இத்தலம் "விருத்தகாசி' என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் "காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி' என்ற பழமொழி கூட உண்டு. இத்தலத்தில் இறக்கும் உயிர்களை அன்னை விருத்தாம்பிகை தன் மடியில் வைத்து, தன் புடவைத் தலைப்பால் விசிறி அவைகளின் பாவங்களை விலக்குகிறாள். சிவபெருமான் அருகே அமர்ந்து கொண்டு, உயிர்கள் மோட்சம டைவதற்காக "நமசிவாய' எனும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்கிறார் என தலபுராணம் கூறுகிறது.

பாலாம்பிகை : யுகம் கண்ட தலமான இங்குள்ள அம்மனின் திருநாமம் விருத்தாம் பிகை. ஒருமுறை திருவண்ணா மலையிலிருந்து சிதம்பரம் செல்ல வந்த குரு நமச்சிவாயர், இத்தலத்தில் இரவு தங்கினார். அப்போது அவருக்கு பசி ஏற்பட்டது. பசியை போக்க, இத்தல பெரியநாயகியிடம் சோறு வேண்டி, "கிழத்தி' என்ற சொல் வரும்படி ஒரு பாடல் பாடினார். இதைக்கேட்ட பெரியநாயகி கிழவி வேடத்தில் அங்கு வந்து, ""கிழவி எவ்வாறு சோறு கொண்டு வர முடியும்? இளமையுடன் இருந்தால் தான் நீ கேட்டது கிடைக்கும்,''என கூறி மறைந்தாள். இதைக்கேட்ட குரு நமச்சிவாயர்,"அத்தன் இடத்தாளே, முற்றா இளமுலை மேலார வடத்தாளே சோறு கொண்டு வா''என பாடினார். இந்த பாட்டில் மயங்கிய அம்மன் இளமைக்கோலத்துடன் அவருக்கு காட்சி கொடுத்து சோறு போட்டாள். அன்று முதல் "பாலாம்பிகா' என்ற பெயர் இவளுக்கு ஏற்பட்டது.


இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். குமார தேவர், குருநமச்சிவாயர், சிவப்பிரகாசர், ராமலிங்க அடிகளார் ஆகியோரும் பாடியுள்ளனர்.

முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் ராஜகோபுரத்தை அடுத்து இடது பக்கம் உள்ள ஆழத்து விநாயகர் சன்னதி விநாயகரின் இரண்டாவது படை வீடாகும்.

பாடியவர்கள்:


திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர், சுந்தரர்

தேவாரப்பதிகம்

ஆடிஅசைந்து அடியாரும் நீரும் அகந்தொறும் பாடிப் படைத்த பொருளெலாம் உமையாளுக்கோ மாட மதிலணி கோபுரம் மணி மண்டபம் மூடி முகில்தவழ் சோலை சூழ் முதுகுன்றரே.

-சுந்தரர்.

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 9 வது தலம்.


திருவிழா:

பிரம்மோற்சவம் - மாசி மாதம் - 10நாட்கள் 9 வது நாள் தேர் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் திருவிழாவாக இது இருக்கும். ஆடிப்பூரம் - 10நாட்கள் திருவிழா - அம்பாள் விசேசம் - திருக்கல்யாணம் - கொடி ஏற்றி அம்பாள் வீதி உலா - ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர் வசந்த உற்சவம் - வைகாசி மாதம் -10 நாட்கள் திருவிழா ஆனித்திருமஞ்சனம்,ஆருத்ரா தரிசனம் , கந்தர் சஷ்டி, சூரசம்காரம் ஆகியவையும் சிறப்பாக நடைபெறுகிறது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் பெரியநாயகருக்கும்(உற்சவர்) சிறப்பு அபிசேகம் நடைபெறுகிறது. பௌர்ணமி அம்மாவாசை மற்றும் பிரதோச நாட்களில் இத்தலத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவர்.

பிரார்த்தனை

இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும்.இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.

இத்தலத்து துர்க்கையம்மனை வழிபடுவோர்க்கு கல்யாண வரம் கைகூடப் பெறுகிறது.மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.

ஞாயிறு அன்று ராகு கால வேளையில் வடைமாலை சாத்தி இத்தலத்து பைரவரை வணங்கினால் அடுத்தடுத்து வரும் இடர்கள் துன்பங்கள் தூளாய்ப் போய்விடும்.

இத்தலத்து பெருமானை வழிபட்டால் இம்மைபயன்களும், மறுமையபயன்களும் கிடைக்கும் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். முத்தாநதியில் நீராடினால் சித்தி பெறுவதுடன் முக்தியும் கிட்டும் என்று புராண நூல்கள் கூறுகின்றன.

சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர்,பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். இது தவிர சுவாமிக்கு சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம்.


இருப்பிடம் :
சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டையிலிருந்து தெற்கே 21 கி.மீ. தூரத்தில் விருத்தாசலம் உள்ளது. விருத்தாச்சலம் நகருக்குள்ளேயே கோயில் இருப்பதால் பக்தர்கள் எளிதில் சென்று வரலாம். முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : கடலூர் - 60 கி.மீ. உளுந்தூர்பேட்டை - 23 கி.மீ. பாண்டிச்சேரி - 83 கி.மீ சிதம்பரம் - 45 கி.மீ

அருகிலுள்ள ரயில் நிலையம் :
விருத்தாச்சலம்

அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி

தங்கும் வசதி :
கடலூர்