KADAN THEERA VAZHIPADA VENDIYA KOVIL :: POONDHOTTAM

கடன் தீர வழி பட வேண்டிய கோவில்:

     கடன் தொல்லை தீரவும், பிள்ளை பேறு பெறவும், திருமண  தடை நீங்கவும்  வழிபட வேண்டிய மிக முக்கிய திருத்தலமாக உள்ளது பத்ரகாளி அம்மன் திருக்கோவில்.

எங்கு உள்ளது:

   இந்த திருக்கோவில் திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்ற ஊரில் அமைந்த்துள்ளது.

நடை  திறந்திருக்கும் நேரம்:

    இந்த திருக்கோவில் ஆனது காலை ஏழு மணி முதல் பதினோரு மணி வரையிலும் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

மூலவர் பெயர்:

     இந்த கோவிலில் வீற்றிருக்கும் அம்பாள் பெயர் அஷ்டபுஜ  பத்ரகாளி அம்மன் மற்றும் மாப்பிள்ளை வீராசாமி திருக்கோவில்.

ஸ்தல வரலாறு:

    இந்த கோவிலில் அம்மன் மிகவும் பழங்கால கோவிலாக திகழ்கிறது. இந்த அம்மன் இந்த ஊரையே காப்பாற்றும் தெய்வமாக உள்ளது. முன்னொரு காலத்தில் இந்த ஊரில் அதிகமாக மக்களின் நகை மற்றும் பணம் காணமல் போய் உள்ளது.  மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்வதறியாது இருந்தனர்.

    பிறகு சகலத்திற்கும் சாட்சியாக விளங்கும் மாரி அம்மனை இந்த ஊரில் உள்ள பக்தர்கள் வேண்டி கொண்டனர்.

 அம்மன் மனம் உருகி இந்த ஊரை காபாற்றுவதன் பொருட்டு மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரு அம்மன் சிலையை நிறுவினர்.

     அந்த அம்மனே காக்கும் தெய்வமாக இந்த ஊரில் உள்ளது. பிறகு அம்மனின் மகிமையை அறிந்த சிலர் இந்த அம்பாளுக்கு கோவில் காட்டி சில சில சிலைகளை நிறுவினர்.

அம்பாள் அமைப்பு:

    இந்த அம்பாள் எட்டு கைகளோடு காட்சி தருவதோடு மட்டும் அல்லது முதல் கையில் அரக்கனின்  தலை,இரண்டாம் கைளில் தீச்சட்டி, மூன்றாம் கையில் சூலம், நான்காம் கையில் கத்தி, ஐந்தாம் கையில் பூ உடைய தாம்பாளம், ஆறவது கையில்  குங்குமத்தை ஏந்திய தாம்பாளம். மற்ற இரு கைகள் பக்தர்கள் அருபாளிப்பதர்க்கு . என்று எட்டு கைகளுடன் காட்சி தருகிறாள்.

    மேலும் இந்த அம்பாள் அருகில் சில சிறுவர்கள் மாலையுடன் நிற்பதாக சிற்பங்கள் உள்ளது. அம்பாள் காதில் தூது மற்றும் கழுத்தில்  தாலி, பச்சை நிற உடை, கிரீடம் , மூக்குத்தி ஆகியவற்றுடன் அழகாக  உண்மையான அம்பாள் இருப்பது போன்று காட்சி தருகிறாள்.

மாப்பிள்ளை சுவாமி அமைப்பு:

     இந்த சுவாமி, உட்கார்ந்து இருந்த படி  அழகுடனும்  புன்முருவளுடனும்  அருள்பாலிக்கிறார்கள். மேலும் இந்த ஸ்வாமின் பின் இருவர் காவல் காக்க நிற்கின்றனர்.

பூந்தோட்டம் பெயர் காரணம்:

      முன்னொரு காலத்தில் இந்த ஊரில் அதிகமாக பூக்கள் அதிகமாக மிகுந்த காடு இருந்தது. அந்த காட்டில் இருந்து பூக்களை பறித்து இங்குள்ள கோவில் அனைத்திருக்கும்  மக்கள் அனுப்பி வைப்பார். பிறகு இந்த ஊரில் அந்த காடுகளை அழித்து பல வீடுகளை மக்கள்  அமைத்தனர்.பூக்கள் அதிகமாக இருந்த காரணத்தினால் இந்த ஊர் பூந்தோட்டம் என்று பெயர் பெற்றது.

கோவில் அமைப்பு:

   இந்த கோவில் ஆற்றின் வடக்கு புறம் பார்த்து அமைந்துள்ள கோவிலாக உள்ளது. மேலும் இந்த கோவிலில் இடது புறம் ஒரு மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்தில் தான் சுமார் ஐநூறு பக்தர்கள் வந்து அம்பாளை தரிசனம் செய்யும் விதத்தில் உள்ளது.

     இந்த கோவிலில் பிள்ளையார், கால பைரவர், நாக கன்னி, குதிரையை பிடித்த காவல் தெய்வம், ஆகியோர் அமைந்துள்ளார்.

கால பைரவர்  தோற்றம்:

       கால பைரவர் இங்கு ஒரு குடத்தில் ஒரு அறுபத்தி நான்கு அவதாரத்தில் கிழக்கு பார்த்த படி பக்தருக்கு காட்சி தருவது இந்த கோவிலில் மிக சிறப்பாக உள்ளது. இந்த பைரவரை அஷ்டமி நாளில் வழிபட கடன் தொல்லை நீங்கும் என்பது ஐதீகம்.

வேண்டுதல்கள்:

     இந்த கோவிலில் கடன் தொல்லை தீர, திருமண தடை நீங்க, குழந்தை பேரு பெற்றிட இந்த கோவிலில் வந்து மனமார உருகி வேண்டி கொண்டால் நடக்கும் என்பது ஐதீகம்.

     பக்தர்கள் தங்களின் கோரிக்கை நிறைவேறிய உடன் சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும் பொங்கல் இட்டும் நிய்வேதனம் செய்கின்றனர்.

     பவுர்ணமி நாளில் வரும் அஷ்டமி நாளில், பூசணிக்காய் அல்லது தேங்காயில்  தீபமேற்றி தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகின்றனர்.

திருமண தடை நீங்க அம்பாளுக்கு

கல்யாணத்தில் செய்யும் அலங்காரங்கள் அனைத்தும் அம்பாளுக்கு செய்து தகல் திருமண தடையை போக்கி கொள்கின்றனர்.

ஸ்தல விருக்ஷம்:

     இந்த கோவில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் தல விருக்ஷமாக அரச  மரமும்,வேம்பு மரமும் உள்ளது. சதல தீர்த்தமாக அரசால் மாநதி தீர்த்தம் உள்ளது.
      

THIRUMANA THADAI NEENGA VAZHIPADA VENDIYA KOVIL :: THIRUPPOOR

திருமண தடை நீங்க வணங்க வேண்டிய கோவில்:

    திருமண தடை நீங்கவும் குடும்பத்தில் நிலவும் கஷ்டம் தீரவும் வழிபட வேண்டிய தெய்வம் தான் செல்லாண்டி அம்மன் திருக்கோவில் திருப்பூர் .

எங்கு உள்ளது :

      இந்த திருக்கோவில் திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் நதிக்கரையில் வளம் பாலம் என்ற 
இடத்தில் அமைந்துள்ளது.

நடை திறக்கும்  நேரம்:

       திருக்கோவில் ஆனது காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் சிறப்பு:

    இந்த திருக்கோவிலில் திருமண தடை நீங்கவும், குழந்தை வரம் வேண்டியும் , குடும்ப கஷ்டம் தீரவும் இந்த கோவிலில் வந்து வழிபடுகின்றனர்.

ஸ்தல வரலாறு:

    வீடு கட்டுவதற்கு கல் எடுத்து வர திருப்பூரில் இருந்து திருவுடையூருக்கு சென்றனர். அப்போது அது பாண்டியர் ஆட்சி காலம். அவர்கள் எடுத்து வந்து கொண்டிருந்த பொழு நொய்யல் நதிக்கரையில் மழை பெய்து தண்ணீர் வெள்ளம் போல காட்சி  அளித்தது.

       வெள்ளம் கரை புரண்டு ஓடியதால்  பாதி கல் மட்டும் எடுத்து வைத்து மீதி கல்லை கரையில் வைத்து சென்றனர்.  ஒரு கல்லினை வடக்கு பக்கத்தில் இருந்த  வனத்தில் இட்டு சென்றனர்.
அந்த இடம் தான் இப்போது இருக்கும் பிச்சம்பாளையத்தில் இருக்கும் மாறி அம்மன் கோவில். மற்றொரு கல்லானது முனியப்பன் கோவிலாக உள்ளது.

       இவர்கள் அனைவரும் மறுநாள் வந்து அந்த கல்லினை தூக்கும் போது அந்த கல் மிகவும் பலமாக இருந்தது.  அவர்கள் கல்லினை தூக்கி கொண்டிருக்கும் போது அருகில் அம்மன் தோன்றி என்னை இங்கு வந்து பிரதிஷ்டை செய்துள்ளீர்கள் . நான் இங்கேயே இருந்து விடுகிறேன் என்று கூறினார். அந்த கோவில் தான் இப்போது எழுந்தருளி இருக்கும் செல்லாண்டி அம்மன் கோவில்.

நொய்யல் நதி:

    இந்த நொய்யல் நதி தான் 1945 முதல் 1970 வரை இந்த நதியில் இருந்து தான் அம்மனுக்கு அபிஷேகம் செய்து  பூஜை செய்தனர் என்பது வரலாறு.
இந்த நதியில் 16 அடி உயரம் பாம்பு இருப்பதாக வரலாறு.

பாம்பு நடமாட்டம்:

    இந்த நொய்யல் நதியில் உள்ள பாம்பு ஒவ்வொரு வருடமும் தீ மிதி திருவிழாவின் பொது குண்டத்தின்  வருவதாக ஐதீகம்.

அம்பாள் அமைப்பு:

    நான்கு திருகரங்களுடன் நின்ற நிலையில் இருக்கும் அம்மன் தான் சிறப்பு. அம்மனை சுற்றி மயானம் தான்  உள்ளது.  அம்மனின் வாகனமாக யாழி உள்ளது.

கோவில் அமைப்பு:     

    இந்த கோவிலில் செல்லாண்டி அம்மன் வடக்கு பார்த்தும், பேச்சியம்மன், கன்னிமார்களும் முருகன், அரசமரத்தடி விநாயகர், தட்சினாமூர்த்தி, ரிஷப வாகன சிவன், நீலி தேவி, நீளிகண்டி, மகாமுனி, ,முத்தையன், கருப்பராயன், முநீஸ்வரர்ன், கிருஷ்ணாம்பாள், கிருஷ்ணா அய்யர், மகேஸ்வரி, வைஷ்ணவி, துர்கை, ராகு கேது ஆகியோர் காட்சி தருகிறார்கள்.

வேண்டுதல்கள் :

   இந்த கோவிலில் திருமண தடை நீங்கவும், குழந்தை வரம் வேண்டியும், பக்தர்களின் குடும்ப கஷ்டம் .தீருவதர்க்கும், வியாபார செழிப்பதர்க்கும், பில்லி சூனியம் தீரவும் மக்கள் இங்கு அதிகமாக வருகின்றனர்.

    பக்தர்கள் இங்கு வந்து தங்களின் கோரிக்கை நிறைவேறிய உடன் பால் குடம்  எடுகின்றனர்.பிறகு அக்னி குண்டம் மிதிகின்றனர். அம்மனுக்கு பட்டினால் ஆன புடவையை வாங்கி கொடுத்தும், அபிஷேகம் செய்தும், அர்ச்சனை செய்தும், விளக்கு ஏற்றியும் தங்களின்  வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்கின்றனர்.



    


RAAGU DHOSHAM POGA VANANGA VENDIYA KOVIL :: PAALAYANKOTTAI

ராகு தோஷம் போக வணங்க வேண்டிய கடவுள்:

     ராகுவினால் வரும் தோஷங்கள் அனைத்தும் தீருவதற்கு வணங்க வேண்டிய தெய்வம் தான் பகவதி அம்மன்

எங்கு உள்ளது:

       இந்த திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாளயங்கோட்டை  என்ற ஊரில் உள்ளது.

நடை திறக்கும் :

        இந்த திருக்கோவில் காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரையிலும் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

தோஷ நிவர்த்தி:

    இந்த திருக்கோவிலில் மிக சிறப்பம்சமாக கருதபடுவது ராகுவினால் வரும் அனைத்து பாதிப்புகளும் இங்கு வந்து வேண்டி கொண்டால் குணமாகும்.

ஸ்தல வரலாறு:

     ராகு என்பவர் ஒருவருக்கு அருகில்  சார்ந்து  இருந்தால் அவர்களுக்கு மிகவும் செல்வ செழிப்பு தரும். மேலும் அவருக்கு பாதகமாக இருந்தால் அந்த ஜாதககாரரை  மிகுந்த கஷ்டத்திருக்கு ஆளாக்கும்.

     ஆகவே இந்த கோவிலில் ராகு தோஷம் போக்கும் கடவுளாக பகவதி அம்மன் இருக்கிறாள்.

கோவிலின் பெருமை:

     இந்த கோவிலில் அதிகமாக வேண்டிகொள்ளபடுவது ராகு தோஷம் தான். ராகு தோஷத்திர்க்கான மிக சிறப்பான கோவில் திருநாகேஸ்வரம் என்பது. ஆனால் இந்த  கோவிலிலும் பகவதி அம்மன் ராகு தோஷம் நிவர்த்தி செய்யும் அம்சமாக உள்ளார் என்பது சிறப்பு.

     மேலும் திருநாகேஸ்வரத்தில் மூலம் கொடுத்த ஒரு ராகு தகடு ஒன்று இந்த கோவிலில் பதிக்கப்பட்டுள்ளது. 

பால் பிரசாதம்:

       இந்த கோவிலில் ஞாயிறு அன்று ராகு காலத்தில் பகவதி அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படும் 

பால்  பிரசாதமாக வழங்கபடுகிறது. இந்த பாலை உண்டால் பிள்ளை பேரு, நோயினால் வரும் ஆபத்து ஆகியவை தீரும் .

கயிறு பிரசாதம்:

    இங்குள்ள சுவாமிகளின் தலையில்  சிகப்பு கயிறு ஒன்று உள்ளது. அதனை பக்தர்கள் எடுத்து கையில் கட்டி கொள்கின்றனர்.

ராகு அபிஷேகம்:

    இங்கு திருநாகேஸ்வரத்தில் செய்யப்படும் அனைத்து அபிஷேகமும் இந்த அம்பாளுக்கு செய்யபடுகின்றனர்.

கோவில் அமைப்பு:

    இந்த திருகோவிலில் உள்ள அம்பாள் தவிர கருமாரி அம்மன், ராகு பகவான், சுடலை மாடச்வாமிவிநாயகர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

வேண்டுதல்கள்:

      நோய் தீர, ராகு தோஷம் நிவர்த்தி பெற, பிள்ளை வரம் பெற ஆகியவற்றிக்கு இந்த திருகோவிலில் வேண்டி கொள்கின்றனர்.

     பக்தர்கள் தங்களின் கோரிக்கை நிறைவேறிய பின்பு, பகவதி அம்பாளுக்கு பொங்கல் வைத்து படைக்கின்றனர். மற்றும் அர்ச்சனை செய்தும் விளக்கு போட்டும் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றுகின்றனர்.

கோவிலில் மட்டற்ற பெருமை:

   ராகு தோஷம் நீங்க பகவதி அம்பாளே ராகு நிவர்த்தியாக மூலவரில் உள்ளார். மேலும் ராகுவிற்கு உண்டான அனைத்தும் இந்த அம்பாளுக்கும் நடைபெறும் என்பது சிறப்பு. அவைகளை பக்தர்களே செய்யலாம்.




NAGA DHOSHAM NEENGA VAZHIPADA VENDIYA KOVIL :: VADAPAATHI

நாக தோஷங்கள் அனைத்தும் தீர வணங்க வேண்டிய கோவில்:

       அஷ்ட நாக தோஷம் எனப்படும் அனைத்து வகையான தோஷங்களும் தீர வழிபட வேண்டிய கோவில் தான் வடபாதி அம்மன் கோவில்.

எங்கு உள்ளது:

    இந்த திருக்கோவில்  காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடபாதி என்ற ஊரில் உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:

     காலை ஆறு மணி முதல் பத்து மணி வரையிலும் அதேபோல் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஸ்தல வரலாறு:

     சிவனின் மனைவியான பார்வதி தேவி சிவபெருமானின் .கண்களை மூடினார். அப்போது அனைத்து உலகமும் இருளில் மூழ்கியது. அப்போது சிவ பெருமான் கோபம் கொண்டு பார்வதி தேவிக்கு  இட்டார். பிறகு திருக்கடிகை என்ற  ஆற்றின் அருகில்  சென்று தன்னை நினைத்து தவம் இருக்கும் படியும்  கூறினார்.

      அந்த ஆணையை பார்வதி தேவி நிருபிக்கும் விதமாக அந்த தோட்டத்தில் வந்து சப்த மாதாக்களுடன்  பூஜை .செய்து  வந்தார்.

    நாட்கள் வெகுவாக ஓடியது. வழக்கமாக பங்குனி உத்திர பெருநாளில்  அம்பாளும்,சிவனும் கல்யாண நாளாக ,கொண்டாடுவதுண்டு. அன்று பங்குனி

 முக்காலமும் அறிந்த  தேக்வர்கள்,முனிவர்கள் என அனைவரும் சிவனையும் பார்வதியையும் வணங்கி ஆசிவாதம்  பெறுவார்.

      அன்று பங்குனி உத்திரம்  கைலாயத்தில் சிவ பெருமான் தனியாக இருப்பார் என்று அறிந்து சப்த மாதக்களில் கவுமாரியை
தோட்டத்தில் காவலுக்கு வைத்து மற்றவர்களை  அழைத்து கொண்டு கயிலாய்த்திரு சென்றார்.
பிறகு அதனை எல்லாம் அறிந்த கந்தர்வர்கள்  சப்த மாதாக்களின்  கவுமாரியை மயக்கமுற செய்து விட்டு தோட்டத்தில் இருந்த அத்தனை பூக்களையும் பறித்து எடுத்து சென்று  விட்டனர்.பிறகு அதனை கண்ட தேவி அனைத்தையும் உணர்ந்தால். கந்தர்வர் அனைவரையும் தனது நெற்றியில் உள்ள தீயினால் அழித்து அங்கேயே சந்தமாக அமர்ந்து காட்சி  தந்தாள்.
    பூக்களின் நடுவில் அமர்ந்ததால் அந்த அம்மனை பூமாத்தமம்மன் என்று பக்தர்கள் கூறினார்.

பூமாத்தம்மன் அமைப்பு:

    இந்த கோவிலில் உள்ள அம்பாள் பத்ம பீடம் என்னும் பீடத்தில் அமர்ந்து தண்டை நாடி வரும் பக்தருக்கு அருள்பாலிக்கிறார்கள். மேலும் லலிதா சஹஸ்ரநாமத்தில் ஆதி சங்கரர் அம்பாளை தக்ஷிணாமூர்த்தி ரூபினி என்று போற்றியுள்ளார் .

      அதனை நிருபிக்கும் வகையில் தட்சிணாமூர்த்தி போல கல்லினால் ஆன மரத்தின் கீழ் அம்பிகை வீற்றிருக்கிறாள்.

மேலும் இந்த அம்பாள் பூணூலினை அணிந்து பக்தருக்கு காட்சி தருகிறார்.

தாலாட்டு:

    பூமாத்தம்மனின் தாலட்டினை பாடினால் குழந்தை பாக்கியம்  கிடைக்கும் என்பது வரலாறு.

கோவில் அமைப்பு:

     இந்த கோவிலில் வேப்ப மரம், அரசமரம், விஜயகனபதி, நாகளின்கேஸ்வரர், .நாகங்கள், அங்காளபரமேஸ்வரி, தன்வந்திரி, சப்தமாதக்கள், அதர்வண பத்ரகாளி, பிரத்யங்கிரா மூர்த்தி, சிவன்அபிராமி,சர்ப்ப  லிங்கேஸ்வரர்,பால முருகன், பால கனேஸ்வரர்அகத்தியர்,ரேணுகா பரமேஸ்வரி
போன்றவர்கள்  காட்சி தருகின்றனர்.

     மூலவர் பிராகாரத்தில் ஞான சக்தி கணபதி ஐந்து தலை நாகம், தம்பதி சமேதராய் முருகர், பாம்பன் சுவாமிகள்அருணகிரிநாதர்,அஷ்ட புஜ பைரவர்கருப்பனச்வாமி ஆகியோர் அருள்பாளிகின்றனர்.
வேண்டுதல்கள்:
     
      இங்கு அசத தோஷம் நீங்கும் அஷ்ட நாகம் உள்ளதால் இங்கு நாகங்களுக்கு விளக்கு வைத்து பூமத்தம்மனுக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்ய மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் . மேலும் அம்பாளுக்கு தங்கத்தால் திருமாங்கல்யம் சாற்றிட  திருமாங்கல்யம் நீடித்து இருக்கும் என்பது ஐதீகம்.
   
     மேலும் இந்த திருகோவிலில் அஷ்ட நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் என்று நாகத்தினால் வரும் தோஷங்கள் அதனையும் நிறைவேரும்  திருத்தலமாக உள்ளது.

அம்பாள் சிறப்பு:

    இந்த கோவிலில் வீற்றிருக்கும் அம்மன் கல்லினால் ஆனது. மேலும் இந்த அம்பாள் ஒரு கண் மேல் பார்த்தும் இன்னொரு கண் பூமியை பார்த்தும் உள்ளது சிறப்பு. காதில் தோடாக குழந்தையும் மறு காதில் மகர குண்டலமும் அணிந்து இந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

ஸ்தல விருக்ஷம்:

    இந்த கோவிலில் தல விருக்ஷமாக கருதபடுவது கல்வாழை, அரசமரம் ஆகும்.

விசேஷ தினங்கள்:

       இந்த திருகோவிலில்  அம்மாவாசை,பவுர்ணமிஅஷ்டமி,நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரை  வருடபிறப்பு,ஆணி திருமஞ்சனம், ஆடிப்பூரம், சாரதா நவராத்த்ரி, மார்கழி உற்சவம், மாசி மகம் , சிவ ராத்திரி ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடபடுகிறது.