தானங்களின் பலன்கள்:

ஒருவர் கொடுக்கும்  தானங்களின் பலன்கள்:

          தானங்களின் பலனானது அவரவர்களின் அடுத்த  பிறவியிலும் அவர்களுக்கு அதன் பலன் என்று சான்றோர்கள்கூறியுள்ளனர். அவை  என்ன என்பதை இங்கு காண்போம் .

உதவி செய்தல்:

      கோவில்களுக்கு சில நிதி உதவி செய்து வந்தால், நீண்ட ஆயுள் ஆரோக்கியம் மற்றும் நல்ல மனைவி அழகு மற்றும் அறிவு உள்ள பிள்ளைகள் அமைவர்.

தங்க தானம்:

        தங்கத்தினை தானமாக கொடுப்பதால்     நீண்ட நாளும் ஒரு போதும் குறைவு இல்லாத பொருளாதாரம் அதாவது லக்ஷ்மி கடாக்ஷம் கிட்டும்.

வெள்ளி தானம்:

        வெள்ளியை தானமாக வழங்குவதால் மிக அழகான தோற்றம் பெறுவார்.

எள்  தானம்:

         கருப்பு எள்ளினை தானமாக கொடுப்பதால் இறந்தவர்கள் என்று கூறப்படும் பித்ரு ஆசீர்வாதம், குழந்தை பேறு  ஆகியவை உண்டாகும்.

தானிய தானம்:

     நவ தானியத்தினை தானமாக கொடுத்தால், குறைவே இல்லாத உணவு கிடைக்கும்.

பசு தானம்:

      கோமாதா தானம் கொடுத்தால்  தாயின் அன்பு நேர்மை தவறாத குடும்பம் என்ற பெரும் புகழும் கிடைக்கும்.

நீர் தானம்:

      நீர் தானம் எனப்படுவது மனிதர்கள் மட்டும் அல்லது விலங்குகளின் தாகம், அதனுடைய பசியை தீர்த்ததால் நோய் நொடி இல்லாத வாழ்வு அமையும்.

நெய் தானம்:

       நெய் தானமாக செய்தால் பேய், பிணி போன்றவை நம்மை விட்டு அகலும்.

அரிசி தானம்:

        அரிசியை தானம் செய்தால் சகல பாவங்கள் போகும்.

தேங்காய் தானம்:

         தேங்காயினை தானமாக கொடுத்தால் எடுத்த காரியத்தில் வெற்றி அமையும்.

ஆடை தானம்:

            ஆடை தானம் அளித்தால் ஆயுள் கூடும்.

தேன்  தானம்:

          சுவை மிகுந்த தேனினை தானமாக அளித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
அன்னதானம்:

              இந்த அன்னதானத்தினை எவர் ஒருவர் வழங்குகிறார்களோ அவர்களுக்கு ஆண்டவருடிய அருள் அதிகமாக கிட்டும் .

எப்படி செய்வது:

     ஒரு மனிதன் தனது வருமானத்தில் ஆறில் ஒரு பங்கிநை  தனக்கென்று ஒதுக்கி வைக்க வேண்டும். அவற்றில் ஒரு பங்கினை தன்னை ஈன்று எடுத்த பெட்ட்ரோருக்கும், இரண்டாவது இறந்தவர்களுக்கு அதாவது பித்ருக்களுக்கு மூன்றாவது  பங்கு இந்த சமூகத்திருக்கு மற்றும்  நான்காவது பங்கினை நம் நாட்டினை ஆளும் அரசர்களுக்கு வரிகளாக க
கடைசி பங்கினை தானமாக வழங்க வேண்டும் என்று
சாஸ்திர புத்தகங்கள் கூறுகின்றன.



திருவாடுதுறை கோவில்

செல்வம் கொழிக்க வழிபட வேண்டிய முக்கிய தலம்:

        மக்கள் அனைவருக்கும் இன்றைய முக்கிய தேவையாக  கருதபடுவது செல்வ வளம். இந்த செல்வ வளம் தரும் முக்கிய கோவில்களில் மிகவும் சிறப்பு பெற்ற கோவிலாக உள்ளது திருவாவடுதுறை கோவில்.

எங்கு உள்ளது:

    இந்த செல்வ வளம் அருளும் திருக்கோவில் கும்பகோணத்தில் இருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த தலத்தின் பெயர்  திருவாடுதுறை.

நடை திறந்திருக்கும் நேரம்:

       இந்த திருக்கோவில் காலை ஆறு மணி முதல் மதியம் பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் இருக்கும்.

தல வரலாறு:

     திருஞானசம்பந்தர் ஒரு நாள் அவரின் தந்தை  யாகம் செய்ய  முடிவெடுத்தார்.அப்போது அவரிடம் ஒன்றும் இல்லை. அப்போது ஞானசம்பந்தரிடம் அவரது தந்தை பொருள் உதவி செய்யுமாறு  கூறினார். உடனே ஞானசம்பந்தர் இந்த தலத்தில் உள்ள இறைவனை வேண்டி பதிகம்  பாடினார். உடனே சிவ பெருமான் அவருக்கு ஆயிரம் பொற்காசுகளை உடைய பொன்னால் ஆன கிளியை பலி பீடத்தில் வைத்தார்.


      ஒன்றுமே இல்லாமல் ஞானசம்பந்தர் சிவ பெருமானை வழிபாட்டு இந்த கொவிழிலில் உள்ள இறைவனை வேண்டி கொண்டு இறைவன் அருள் புரிந்ததால் இந்த தல  இறைவனை வழிபட நிறைய செல்வா வலம் பெருகும் என்பது ஐதீகம்.

குல தெய்வ வழிபாடு பலன்கள்

குல தெய்வ வழிபாடு பலன்கள்:

      குலதெய்வம் என்பது நம் முன்னோர்கள் ஏற்படுத்திய தெய்வம் ஆகும். நம் குடும்பத்தில் ஏதேனும் சுப நிகழ்வு இருந்தால் குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். குல தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்தது கூட்டு  வழிபாடு. அதாவது குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து குல தெய்வத்திற்கு மரியாதை செய்து வேண்டியவற்றை வணங்கி வழிபடுதால் மிக சிறப்பான முறை ஆகும்.

தினசரி வழிபாடு:

 வருடத்திருக்கு ஒரு முறை குல தெய்வத்தினை வழிபாட்டு தினமும் மனதார வீட்டில் வழிபட வேண்டும். பிறகு அதிகமாக குலதெய்வம் உள்ள இடம் மலை, காடு முதலியவைகளை கொண்ட இடமாக இருக்கும். ஆதலால் வருடத்திற்கு இரு முறையாவது குலதெய்வ வழிபாடு என்பது சால சிறந்தது.

குல தெய்வத்தின் மகிமை:

    குல தெய்வத்தின் மகிமையை வழிபாட்டின் மூலம் , உணரலாம்.அதாவது குல தெய்வத்தின் நன்மைகள் பல இருந்தாலும் அது வெளிப்படுவது வழிபாட்டினால் தான். குல தெய்வத்தின் மிக முக்கியமாக திகழ்வது குல தெய்வத்தின் இடம். நாம் குல தெய்வம் உள்ள இடத்திருக்கு வருடத்திருக்கு ஒரு முறையாவது சென்று வணங்க நம் இன்னல்கள் தீரும் .

பூஜை மற்றும் பரிகாரம்:

     குல தெய்வம் வழிபடாமல் இன்ன பிற பூஜைகள் மற்றும் பரிகாரங்களின் பலன்கள் நம்மக்கு  கிடைக்காது. முதலில் குல தெய்வத்தை தினமும் மனதார வணங்கி பின் தனது வேலையை துவங்க வேண்டும்.

குல தெய்வத்தின் சிறப்பு:

    இந்த குல தெய்வ வழிபாட்டால் பல குடும்பங்களுக்கு நம்மை கிடைக்குமே தவிர தீமை அண்டாது என்பது நிதர்சனமான உண்மை. மேலும் இந்த குல தெய்வ வழிபாட்டின் பெருமையை திருப்பதி தேவச்தனனம் தனது பிரசாத பையில் குல தெய்வ வழிபாடு செய்தீர்களா என்ற வாசனம் எழுதி இருப்பதை காணலாம்.

மகா பெரியவருக்கு சரணம்.

ஹோமங்கள் மற்றும் பரிகாரங்கள்

வாழ்வை ஒளி மயமாக்க நடத்தப்படும் பரிகாரங்கள் மற்றும் ஹோமங்கள்:

       ஒரு மனிதன் தனது வாழ்வை அவரவர் தீர்மானிப்பதில்லை. அதனை தீர்மானிப்பது அவர்கள்
பிறக்கும் போது அப்போது உள்ள நவகிரகங்கள் மற்றும் அந்த நவ கிரகங்கள் அவர்களின் ஜாதகத்தில் இருப்பது. மேலும் அந்த ஜாதகங்களின் வீரியமும் தான் ஒவ்வொருவரின் விதகளை முடிவு செய்கிறது.

பலன்கள் :

    இந்த நவகிரகங்களின் அமைப்பால் அவர்களுக்கு நல்லது அல்லது தீயது நடக்கின்றன. ஒரு மனிதனின் பிறப்பானது ஏழு பிறவி என்று நமது முன்னோர்கள்  கூறியுள்ளனர். மேலும் இந்த சாஸ்திரங்கள் கூறுவதாவது ஒருவர் முன் பிறப்புக்களில் செய்த நல்வினைகளால் இந்த பிறவியில் நல்ல காரியங்களும், முன் பிறவியில் செய்த தீய செயல்களால் இந்த பிறவியில் தோஷங்களாகவும்
அவர்களது ஜாதகத்தில் வந்தடையும்.

தோஷங்கள்:

     தோஷங்கள் ஆனது பல வகையாக பிரிக்கப்படும். அவைகலில் மிக முக்கியமானது செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், குடும்ப தோஷம்.அவைகளை பற்றி விரிவாக இங்கு காண்போம்.

செவ்வாய் தோஷம்:

      இந்த தோஷத்தினால் திருமணம் மிகவும் தடைபடும். மேலும் திருமணம் மிகுந்த தாமதமக
நடைபெறும். அப்படி நடந்தாளும் கணவன் மனைவி இருவரில் அடிக்கடி சண்டை நடக்கும்.

களத்திர தோஷம்:

     இந்த தோஷமும் செவ்வாய் தோஷம் போல திருமணம்  நடக்க சில சிக்கல்கள் வரும். மேலும் திருமணம் நடந்த பின் அதிகமாக சண்டை வந்து திருமண பந்தம் முடிவுக்கு வரும் என்ற நிலைமைக்கு கொண்டு செல்லும்.

புத்திர தோஷம்:

    இந்த  தோஷத்தில் குழந்தைகள் திருமணம் ஆனவுடன் பிறக்காமல் மிகவும் கல தாமதம் ஆகும்.
அப்படியே குழந்தை பிறந்தாலும் நல்ல ஆரோகியமான குழந்தை பிறக்காமல் பெற்றோர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களின் மன நிம்மதியை கெடுக்கும் குழந்தையாக பிறக்கும்.

குடும்ப தோஷம்:
        இந்த வகை தோஷத்தில் திருமணம் விரைவில் நடந்தேறி, விரைவில் குழந்தை பேறு அடைவர். ஆனால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியான வாழ்கை இல்லாமல் குடும்பத்தில் அடிக்கடி சண்டை, புத்திரகளால் மகிழ்ச்சி இன்மை, சிலருக்கு குடும்பமே பிரிவு ஏற்பட்டு மணமுறிவு ஏற்படும்.

மனை தோஷம்:

    மேற்சொன்ன தோஷத்தை தவிர மிக முக்கியமானது மனை தோஷம். இந்த தோஷம் உள்ளவர்கள் வீடு எளிதில் வாங்க இயலாது. மேலும் இந்த தோஷத்தால் வீட்டில் அடிக்கடி சண்டை நிகழும் பிறகு அடிக்கடி விபத்து நடக்கும். தேவை இல்லாத நோய் தாக்கும். வீண் செலவு அதிகமாகும். மருத்துவ செலவு அதிகமாகும். தூக்கம் வராது. கெட்ட  நிகழ்ச்சி அடிக்கடி வரும்.

பிற தோஷங்கள்:
      வாழ்வில் இந்த தோஷம் மட்டும் அல்லது பிரேத தோஷம், குல தெய்வ தோஷம், மாந்தி தோஷம், காக வந்திய தோஷம், பிரம்மஹத்தி தோஷம், கால சர்ப்ப தோஷம், நாக தோஷம், பிதுர் தோஷம், பிராமண தோஷம், கர்ம தோஷம், பாவ காயத்த்ரி தோஷம், வாக்கு தோஷம், பைத்திய தோஷம், செய்வினை தோஷம், ஆயுள் தோஷம், பூர்வீக தோஷம் ஆகியவை மனிதனின் ஜாதகத்தில் உள்ள அதிகமான தோஷம் ஆகும்.

   இந்த தோஷங்கள் அனைத்தும் முற்பிறவியில் செய்த பாவங்களால் அவரவர்களுக்கு உண்டாக கூறியவை. நமது ஜாதகத்தில் என்ன தோஷம் உள்ளது என்பதை நம்மால் அறிய முடியும்.  இந்த பாவங்கள்  அனைத்தும் முந்தைய பிறவியில் அவரவர் கடவுளுக்கு செய்த பாவம். இதனை போக்க ஒரே வழி பரிகாரங்கள் மற்றும் ஹோமங்கள் மட்டுமே. இதனை செய்வதன் மூலம் நாம் முன் பிறவியில் செய்த பாவங்களை போக்கி கொள்ளலாம்.

ஹோமங்களின் பலன்கள்:

      ஒவ்வொருவரும்  அவர்கள் முந்தைய பிறவியில் செய்த பாவங்களை போக்க ஹோமம் நிகழ்த்தப்பட வேண்டும். மனிதர்கள் மட்டும் அல்லது தெய்வங்களும் , அரசர்களும்,  சித்தர்களும் கூட ஹோமங்களை செய்துள்ளனர். இன்றும் பலர் ஹோமங்களை செய்து வாழ்வில் வெற்றி அடைபவர்களை கண்கூட காண்கிறோம்.

ஹோமத்தின் பொது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

      ஹோமத்தின் போது கலசங்கள் வைத்து அதில்  நீரில் மஞ்சள் சேர்த்து அந்த நீரை கலசத்தில் சேர்த்து அதன்  மேல்  மாவிலை வைத்து அந்த மாவிலையின் மேல் தேங்காய் வைத்து கலசத்தை சுற்றி நூல் இட்டு அந்த கலசத்தில் தெய்வங்களை ஆவாகனம் செய்ய வேண்டும். பிறகு குத்து விளக்கு ஏற்றி அதில் அஷ்ட லக்ஷ்மிகளை ஆவாகனம் செய்ய வேண்டும். பிறகு ஹோமங்களில் தெய்வங்களை அழைத்து அந்த  தெய்வங்களுக்கு பால்,  பழம், தேன், நெய் உணவாக தந்து உணவாக தந்து தெய்வங்களை நிம்மதி அடிய செய்ய வேண்டும்.

   பிறகு தெய்வங்களின் நாமங்களை சொல்லி, அந்தந்த தெய்வங்களின் மந்திரங்களை சொல்லி
நமது காரியங்கள் வெற்றி அடைய வேண்டும் என்று நினைத்து  நமது தேவைகளை அந்த தெய்வங்களிடம் கூறி நமது கோரிக்கைகளையும் மனதார கூற வேண்டும். பிறகு நமது தோஷங்களை போக்குமாறு வேண்டி கொள்ள வேண்டும்.  அப்படி வேண்டி கொள்வதன் மூலம் நமது தேவைகளை கடவுள் நிறைவேற்றி அனைத்து செல்வங்களையும் தருவார். இந்த ஹோமங்களே நமது வாழ்வில் வளம் சேர்க்கும் மிக முக்கிய ஹோமங்கள் ஆக உள்ளது.

அவற்றில்  சில ஹோமங்களையும் அதன்  பலன்களையும் காணலாம்:

           ஹோமங்களின் மிக முக்கியமானதாக கருதப்படுவது கணபதி ஹோமம், சண்டி ஹோமம் ,  நவக்ரஹ ஹோமம், சுதர்சன ஹோமம், ருத்ர ஹோமம், மிருயுஞ்சய ஹோமம், சுயம்வர ஹோமம், புத்திர ஹோமம், காந்தர்வ ஹோமம், பிரத்தியங்கிரா ஹோமம், லக்ஷ்மி குபேர ஹோமம், தில ஹோமம், கண் திருஷ்டி ஹோமம், கால சர்ப்ப தோஷம் ஆகியவை மிக முக்கியமான ஹோமன்களாக திகழ்கிறது.

கணபதி ஹோமம்:

         கணபதி ஹோமம் செய்திட காரிய தடை நீங்கும்.எந்த செயல்கள் எடுத்தாலும் அதில் வெற்றி பெறுவார்.

சண்டி ஹோமம்:

           சண்டி ஹோமம் செய்திட தரித்திரம் நீங்கி வாழ்வில்  செல்வம் சேரும். பயம் விலகும்.

நவக்ரஹ ஹோமம்:

            நவக்ராஹங்களினால் உண்டான தோஷங்கள் அனைத்தும் விலகி  வாழ்வில் வளம் கொழிக்கும்.

சுதர்சன ஹோமம்:

           இந்த ஹோமம் செய்வதால் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவார். பேய் , பிசாசு, ஏவல், பில்லி, சூனியத்தில் இருந்து விடுபடுவர்.

ருத்ர ஹோமம்:

           ருத்ர ஹோமம் செய்வதால் நீண்ட ஆயள் பெறலாம்.

மிருத்யுஞ்ச ஹோமம்:

            பிரேதத்தினால்   வந்த சாபம் நீங்கும். மந்தியினால் வந்த தோஷம் போகும்.

புத்திர காமேஷ்டி ஹோமம்:

             இந்த ஹோமம் செய்வதால் புத்திர பாக்கியம் விரைவில்  கிட்டும்.

சுயம்வர ஹோமம்:

             சுயம்வர ஹோமம் என்பது பெண்களுக்கு வரும் திருமண தடைவிலகி விரைவில் சுயம்வரம்
நிகழும்,

ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம்:

             இந்த ஹோமம செய்வதன் மூலம் ஆண்களுக்கு  ஏற்படும் திருமண தடை நீங்கும்.

லக்ஷ்மி குபேர ஹோமம்:

              செல்வம் பெருகும்.  பொருளாதார சிக்கல்கள் தீர்ந்து பொருளாதார வளம் அதிகமாக ஏற்படும்.
தில ஹோமம்:

             இந்த  ஹோமம் செய்வதன் மூலம் சனி தோஷம் நீங்கி, பித்ரு தோஷம் நீங்கும்.

ஸ்ரீ பிரத்தியங்கிரா ஹோமம்:

           எதிரிகளால் வரும் தும்பம் போகும். எதிரிகள் தொல்லை இருக்காது. நோய்களில் இருந்து விடுபடலாம் . 

ஸ்ரீ பிரம்மஹத்தி தோஷம்:

           எதிர்களின் தொல்லைகள் நீங்கி எடுத்தட காரியத்தில் வெற்றி பல நன்மைகள் கிட்டும்.

கண்திருஷ்டி ஹோமம்:

            காரியத்தினால் வந்த சிக்கல்கள் விலகி, கண் திருஷ்டி குறையும் .

கால சர்ப்ப தோஷம்:

            திருமணத்தினால் வந்த தடை நீங்கும். வாழ்வில் வரும் துன்பங்கள் நீங்கி வளம் பெருகும். உத்தியோகத்தினால் வந்த தடைகள் விலகும்.


மதுரகாளி அம்மன் :siruvachur madurakaliamman temple

திருமண, குழந்தை வரம் தரும் மதுரகாளி அம்மன் :

     அம்மன் கோவில்களின் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக திகழ்வது மதுர காளி அம்மன் கோவில்.

எப்படி செல்வது:

    இந்த கோவிலுக்கு திருச்சியில் இருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் இருக்கும். அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. திருச்சியில் இருந்து பெரம்பலூர் செல்லும் பேருந்துகள் இந்த நிறுத்தத்தில் நிற்கும்.

கோவில் திறந்திருக்கும் நேரம்:

    இந்த கோவில் காலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் உண்டு. திங்கள் மற்றும் வெள்ளி மட்டும் இந்த கோவில் திறந்திருக்கும்.





ஸ்தல வரலாறு :

    இந்த தலத்தில்  சிலப்பதிகாரத்திற்கு சொந்தமான கண்ணகி மதுரையை அழித்தபின் தனது நிம்மதிக்காக  இந்த ஊரில் வந்து மன நிம்மதி கொண்டாள்  என்று  சில செய்திகள் கூறுகின்றன.
    ஆனால்  முக்கியமான வரலாறாக கருதப்படுவது அந்த காலத்தில்  மந்திரம் செய்யும் மந்திரவாதி     ஒருவன் இருந்தான்.

அவன் இந்த கோவிலில் மிகவும் சிறப்பு பெற்ற செல்லியம்மனை தன து கட்டுப்பாட்டில் வைத்து தவறான செயல்களை செய்ய வைத்தான்.

    அப்போது மதுரையில் வீற்றிருக்கும்  காளி அம்மன் ஒரு நாள் இந்த அம்மனை காண வந்திருக்கிறாள். அன்றைய தினம்  வெள்ளி கிழமை . அப்போது காளி அம்மன் தன்னை இங்கு ஒரு நாள் இரவு தங்க வைக்குமாறு கூறும் போது செல்லி அம்மன் தன்னை கட்டுப்பாட்டில் வைத்துள்ள மந்திரவாதி பற்றி கூறினாள் .

அப்போது தன்னை மந்திரவாதி தன்னை தீய செயல்களுக்கு துணை புரிய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறினால்.  உடனே அதனை கண்டு நீ அஞ்ச வேண்டாம் நான் அதனை பார்த்து கொள்கிறேன் என்று மதுரையில் இருந்து வந்த காளி அம்மன் கூறினாள் .     பிறகு மந்திரவாதி வரும்போது தான் அவனை எதிர்கொள்வதாகவும் கூறினால். காளி அம்மன் கூறிய படியே மந்திரவாதி வந்த உடன் அவனுடன் போரிட்டு செல்லி அம்மனை காப்பாற்றினாள் .

     இதனை அறிந்த செல்லி அம்மன் இந்த ஊரிலே காளி அம்மனை தங்குவதற்கு  வற்புறுத்தினாள் . ஆனால் காளி  அம்மனோ  பிறகு தான் சிறுவாச்சூர் பக்கத்தில் இருக்கும் பெரியசாமி  மலையில் இருப்பதாகவும்  பிறகு சிர்வாசூரில் எப்போழுதுமே காளி அம்மனுக்கு முதலில் வழிபாடு நடத்த வேண்டும் என்றும் கூறிநாள்.

    ஆதலால் தான் இந்த கோவில் திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் தான் திறந்திருக்கும். மற்ற நாட்களில் அம்மன் மலையில் தங்குவதாக ஐதீகம்.

வேண்டுதல்கள்:

     இந்த தலத்தின் மா விளக்கு போடுதல் மிகவும் பிரத்தி  பெற்றதாக உள்ளது. பக்தர்கள் தாங்கள் வேண்டி கொண்ட  இடத்தில் அதாவது கை, வயிறு, நெற்றி நெஞ்சு ஆகிய இடங்களில் நேர்ந்து கொண்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்துகின்றனர்.
மேலும் இந்த கோவிலில் மிக விசேஷமாக கருதபடுவது அன்னதானம் மற்றும் பாலபிஷேகம் .

பக்தர்களின் நம்பிக்கை:

        இந்த திருத்தலத்தில் உள்ள அம்பிகையை வழிப்பட்டால் தனது கோரிக்கை நிறைவேறம் என்பது மக்களின் நம்பிக்கை.

அனைத்திற்கும் தீர்வு:

     இந்த கோவிலில் பில்லி சூனியம், குழந்தை பேறு , திருமணத்தடை, தீராத நோய்கள், வழக்கு சிக்கல், வியாபாரத்தில் நஷ்டம், விவசாயம், கல்வி ஆகியவற்றிக்கு இந்த தலத்தில் வந்து இந்த  அம்மனை வழிபட்டு  சென்றால் தங்களது கோரிக்கை நிறைவேறும் என்பது மக்களின் மிக நம்பிக்கை.

ஸ்தல விருக்க்ஷம்:

   இந்த தலத்தின் விருக்ஷமாக மருதமரம் உள்ளது. தீர்த்தமாக கோவிலுக்கு அருகே திருக்குளம் உள்ளது. இந்த கோவிலில் அய்யனார் காவல் தெய்வமாக காட்சி தருகிறார்.