செல்வம் செழிக்கவும் நோய்கள் விலகவும் வழிபட வேண்டிய கோவில்:
வாழ்வில் செல்வம் செழிக்கவும் , நோய்கள் தீரவும் வழிபட வேண்டிய கோவில் தான் அக்னீஸ்வரர் திருக்கோவில்.
எங்கு உள்ளது:
இந்த கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர் என்ற ஊரில் உள்ளது.
எப்படி செல்வது:
கும்பகோணத்தில் இருந்து சுமார் பதினெட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் ஏறி கஞ்சனூர் என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கொள்ளலாம்.
சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:
இந்த கோவிலில் உள்ள சிவ பெருமான் அக்னீஸ்வரர் என்றும் அம்பிகை கற்பகாம்பிகை என்ற பெயருடனும் அழகுற காட்சி தருகின்றனர்.
ஸ்தல வரலாறு:
முன்னொரு காலத்தில் இந்த ஊரில் வாழ்ந்த வாசுதேவர் என்பவருக்கு சுதர்சனன் என்ற ஒரு மகன் உண்டு . அவன் வைணவ மதத்தில் இருந்தாலும் சிவ பெருமான் மீது மிகுந்த பற்றில் இருந்தான் . திருநீறு, ருத்திராக்ஷ்ம் மட்டுமே அணிவான். ஒருநாள் வசுதேவர் சுதர்சனனை அழைத்து சிவ பெருமானை வழிபடுவாயா என்று இரும்பு கம்பியினை பழுக்க காய்ச்சி சூடு வைத்தான். மகனோ சிவ பெருமானுக்கு அனைத்தும் என்று கூறியது இந்த கோவிலில் உள்ள சிற்ப வடிவில் உள்ளது.
அந்த கோவிலே சிவ பெருமான் கோவிலாக
மாறியது. பிறகு சுதர்சனன் என்ற பெயர் ஹரதத்தர் என்ற பெயர் கொண்டு சிவ தீக்ஷை எடுத்தார். அந்த ஊரில் வசிக்கும் ஒரு செல்வம் மிகுந்த ஒருவர் தினமும் சிவ பெருமானுக்கு அன்னம் வைப்பது வழக்கம்.சிவ பெருமானும் அதனை கனவில் வந்து சாப்பிடுவது போன்று சிவ பெருமான் காட்சி தருவார். ஒருநாள் சிவ பெருமான் கனவில் வரவில்லை. இதனால் அறிய கோவிலுக்கு சென்றார் அந்த செல்வந்தர் அப்போது சிவ பெருமான் ஹரதத்தர் என்பவர் தனக்கு கஞ்சி கொடுத்ததாகவும் அதனை குடித்ததால் தனக்கு பசி எடுக்கவில்லை என்றும் கூறினார். ;இதனால் செல்வந்தர் ஹரதத்தரை தேடி சென்று
வணங்கினார்.
சுரைக்காய் பக்தர் :
இந்த ஊரில் சுரைக்காய் விற்கும் ஒருவர் சிவ பெருமான் மீது அதீத பற்றில் இருந்தார். அவர் ஒரு நாள் சுரைக்காய் அனைத்தையும் விற்று ஒரே ஒரு சுரைக்காய் மட்டும் விதைக்கு வைத்து இருந்தார். அப்போது சிவ பெருமான் அந்தணர் ரூபத்தில் வந்து கேட்க நீங்கள் சுரைக்காய் சாப்பிட கூடாது என்று கூறினார். பிறகு பாதி விதைக்கு என்றும் மீதி கறிக்கும் என்றும் கூறினார். பிறகு அவருக்கு சிவ பெருமான் அருள்புரிந்தார்.
கல் நந்தி :
பிராமணர் ஒருவர் புல் கட்டு தூக்கி கொண்டு செல்லும்போது அந்த புல் கட்டு கீழே விழுந்து ஒரு பசு மாடு இறந்து விட்டது. பசு மாடு இறந்ததால் அவர் பிராமண சமூகத்தில் இருந்து விலக்கப்பட்டார். மேலும் அவருக்கு பசு தோஷம் தொற்றியது. இதனால் செய்வதறியாது ஹரதத்தரிடம் முறையிட்டார். ஹரதத்தரை காண செல்லும் வழியில் சிவனுக்கு பிடித்த ஸ்லோகமான சிவ பஞ்சாட்சரத்தை கூறிக்கொண்டே சென்றார். இதனை கண்டா ஹரதத்தர் பஞ்சாட்சரம் சொன்னதால் பசு தோஷம் விலகியது என்று கூறினார்.
ஆனால் மற்றவர்கள் இதனை ஏற்க வில்லை. பிறகு ஹரதத்தர் இந்த குளத்தில் நீராடி விட்டு சிவ பெருமானின் முன் உள்ள நந்திக்கு ஒரு புல் எடுத்து கொடு அந்த நந்தி புல்லை சாப்பிட்டால் உனக்கு அந்த தோஷம் போய்விட்டது என்று அர்த்தம் என்று கூறினார். பிராமணரும் அவ்வாறே செய்தார். கல் நந்தி புல் சாப்பிட்டு அவரின் தோஷத்தை போக்கியது என்று வரலாறு கூறுகிறது.
சிவபெருமானின் அமைப்பு:
இந்த கோவிலில் சிவ பெருமான் சுயம்பு உள்ளார். மேலும் இங்கு உயர்த்த கோலத்தில் பாணம் ஏந்தி நின்ற வடிவில் காட்சி தருவது மிக சிறப்பாக உள்ளது.
கோவில் அமைப்பு :
இந்த கோவிலில் விநாயகர், முருகர், மஹாலக்ஷ்மி ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.
வேண்டுதல்கள்:
இந்த கோவிலுக்கு அதிகமாக செல்வம் செழிக்கவும் நோய்கள் தீரவும் பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். மேலும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்த்திரம் சாற்றி தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.
ஸ்தல வரலாறு மற்றும் திருக்குள தீர்த்தம்:
ஸ்தல விருக்ஷமாக பலா மரமும் புரசை மரமும், திருக்குள தீர்த்தமாக அக்னீ தீர்த்தமும் , பராசர தீர்த்தமும் உள்ளது.
விசேஷே தினங்கள்:
மாசி மகம், ஆடிப்பூரம், தை மாதம் திங்கள் கிழமை ஹரதத்தர் காட்சி, நவராத்திரி, பிரதோஷம் ஆகிவை வெகு சிறப்பாக கொண்டாடாடுகின்றனர்.