கடன் தொல்லை நீங்க பரிகாரங்கள் :
கடன் என்பது ஒரு மனிதனை வாட்டி வதைக்கும் ஒன்றாகும். ஒருவருக்கு கடன் மேலும் மேலும் இருந்து கொண்டே இருந்தால் நாமே சில பரிகாரங்கள் செய்வதன் மூலம் கடன் தொல்லையில் இருந்து விடுபட்டு வாழ்வில் இன்பம் பெறலாம்.
குலதெய்வ வழிபாடு:
முந்தைய பிறவியில் செய்த பாவங்கள் அதிகமாக இருந்தால் இந்த பிறவியில் கடன் பட்டு இருப்பர் என்பது ஐதீகம். ஆதாலால் முதலில் குலதெய்வ வழிபாடு என்பது முக்கியமான ஒன்றாகும். குலதெய்வ வழிபாடு என்பது குடும்பம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஆகியவை சிறந்து விளங்க குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம்.
மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று குலதெய்வ வழிபாடு செய்வதன் மூலம் கடன் சுமை குறையும். மூன்று பவுர்ணமி குலதெய்வ வழிபாடு செய்வது மிக முக்கியம். கடன் சுமை படி படியாக குறையும்.
தொலைவில் இருந்தால்:
குலதெய்வம் அருகில் இல்லாமல் தொலைவில் இருந்தால் இல்லத்தில் குலதெய்வ படத்தினை வைத்து ஒன்பது பவுர்ணமி தினத்தில் பஞ்ச முகம் எனப்படும் ஐந்து முகம் விளக்கு ஏற்றி வழிபாட்டு வந்தால் கடன் தொல்லை முழுவதுமாக குறையும் . இதேபோல் ஒன்பது பவுர்ணமி வழிபாடு செய்ய வேண்டும். விளக்கு ஏற்றுவதற்கு நெய் பயன்படுத்த வேண்டும்.
மேலும் மூன்று வார வியாழ கிழமை அன்று சுமார் நாற்பத்தியெட்டு எலுமிச்சம் பழம் கொண்டு மாலை தொடுத்து காளிக்கு சாற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து மீளலாம்.
கடன் தொல்லை தீர்க்கும் மந்திரம்:
ஓம் ஸ்ரீம் கம் ஸௌம்யாய கணபதியே வர வரத சர்வ
ஜனம்மே வசமானய் ஸ்வாஹா
ஹிருயாதி ந்யாஸ நிக்விமோக
இந்த மந்திரத்தை ஒரு நாளைக்கு 108 முறை சொன்னால் கடன் தொல்லை தீரும்.
லட்சுமி நரசிம்மர்:
கடன் தொல்லையில் இருந்து மீள லட்சுமி நரசிம்மருக்கு பசும்பாலை காய்ச்சி அதனை நாற்பத்தி எட்டு நாளுக்கு நெய்வேத்தியம் செய்ய வேண்டும். அல்லது பானகம் எனப்படும் எலுமிச்சை சாறு, தண்ணீர், வெல்லம் கலந்தவையை நெய்வேத்தியமாக படைக்க வேண்டும்.
ஸ்லோகம் சொல்ல முடியாதவர்கள் லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை நூற்றி எட்டு முறை சொல்ல வேண்டும்.
No comments:
Post a Comment