சிரார்த்தம் பற்றிய தகவல்கள் :
சிரார்த்தம் எனப்படும் திவசம் என்பது இறந்தவர்களின் மன நிம்மதிக்காக செய்யப்படும் ஒன்றாகும். மேலும் இந்த சிரார்த்தம் என்பது வருடத்திற்கு ஒரு முறை பித்ருக்களுக்கு அளிக்கப்படும் உணவு ஆகும்.
பித்ரு:
பித்ரு என்றால் இறந்தவர்களின் ஆன்மா என்பது பொருள்.
எப்போது செய்வது:
இறந்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த பூலோகத்திற்கு வர இயலாது. அவர்களுக்கு அமாவாசை பவுர்ணமி மற்றும் மஹாளய அம்மாவாசை மற்றும் அவர்களின் இறந்த திதி அன்று மட்டும் வந்து அவர்களுக்கு அளிக்கபடும் உணவு மனதார புசித்து வாழ்த்தி விட்டு செல்வர் என்பது ஐதீகம்.
தர்ப்பணம்:
தர்ப்பணம் என்பது மாத மதம் கொடுப்பது ஆகும். தர்ப்பணம் என்பது காலை ஏழு மணிக்கு முன்பாக கொடுக்க வேண்டும். இந்த தர்ப்பணம் கொடுப்பவர்கள் காலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து காலை ஏழு மணிக்குள் கொடுக்க வேண்டும்.
எள் நீர்:
தர்ப்பணத்தில் கொடுக்கப்படும் எள் மற்றும் நீர் கலந்த கலவை பித்ருக்களின் அமிர்த உணவாக செல்கிறது.
தர்ப்பை:
சுவாதேவி :
சுவாதேவி எனப்படும் ஒரு தேவி தான் இறந்தவர்களின் ஆத்மாக்களை இந்த தர்ப்பை புல் மூலமும் நாம் கொடுக்கும் எள் மற்றும் நீர் மூலமும் அவர்களுக்கு கொடுத்து இந்த புள் மூலமாக மேல் லோகத்திற்கு அழைத்து செல்லப்படும் என்பது ஐதீகம்.
நதிகள்:
தர்ப்பணம் என்பது புண்ணிய நதிகளில் தான் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் முழு பலன் கிட்டும். புண்ணிய நதியில் செய்வதானால் அதிகாலை எழுந்து புண்ணிய நதியில் குளித்து விட்டு பின் அந்த நதியிலே தர்ப்பணம் கொடுக்க பித்துக்களின் ஆசி முழுவதுமாக கிடைக்கும்.
இறந்தவர்களின் திதி:
ஒருவர் இறந்துவிட்டால் அவர்களின் திதி, நாள், கிழமை மற்றும் இறந்த நேரம் இவற்றை குறித்து கொண்டு வருடாவருடம் அந்த திதியில் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் கடன் சுமை, குடும்ப தகராறு நீங்கி வாழ்வில் முன்னேறலாம்.
அமாவாசை:
பொதுவாக அமாவாசை , சூரிய கிரஹணம் மற்றும் சந்திர கிரஹணம் அன்று இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்திட அவர்களின் சத்தி மேலும் அதிகமாகும். அமாவாசை தினத்தில் யாரேனும் ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும். இது மிக முக்கிய ஒன்றாகும்.
தர்ப்பணம்:
ஒருவர் ஒரு வருடத்தில் சுமார் தொன்னூற்று ஆறு முறை தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணம் செய்யும் நாளில் வெங்காயம், பூண்டு, சோம்பு போன்ற வாசனை பொருட்களை சாப்பிட கூடாது. மாமிசம் சாப்பிட கூடாது.
No comments:
Post a Comment