கடன் தொல்லையில் இருந்து விடுபட:
கடன் தொல்லையில் இருந்து விலக குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம்.
வீட்டில் இருக்க கூடாதவை:
கடன் பிரச்சனை இருந்தால் வீட்டில் சில பொருள்கள் இருக்க கூடாது. ஏனெனில் அவை வீட்டில் செல்வம் சேர விடாமல் தடுத்து விடும்.
அவைகள்
புறாக்கூடு, உடைந்த கண்ணாடி, வாடிய மலர்கள், தேன்கூடு, சிலந்தி வலை ஆகையவைகளை முதலில் களைந்தாலே வீட்டில் செல்வம் சேரும் என்பது ஐதீகம்.
வீட்டில் இருக்க வேண்டியது :
வீட்டில் மீன்கள் வளர்த்தால் செல்வம் சேரும் . மீன்கள் மஹாவிஷ்ணுவின் அவதாரம் ஆகும். மீன்களை சிறிது நேரம் பார்த்தால் மனக்குழப்பம் அனைத்தும் நீங்கும் என்பது அறிவியல் ரீதியான உண்மையாகும்.
மேலும் மீன்களில் கோல்டன் பிஷ் எனப்படும் வண்ண மீன்களை வளர்ப்பது மிகவும் பயன் தரும். மேலும் இந்த மீன்களை வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு என்ற திசைகளில் மட்டுமே வைக்க வேண்டும்.
விளக்கு ஏற்றும் முறை:
வீட்டில் அதிகமாக ஏற்றப்படும் விளக்கு காமாட்சி விளக்காக இருக்க வேண்டும். அதில் விளக்கு ஏற்றும் பொது டைமென்ட் கல்கண்டு போட்டு விளக்கு ஏற்றிட வேண்டும்.
ஊறுகாய்:
வீட்டில் விதவிதமான ஊறுகாய் வகைகளை அதிகம் வைத்திருக்க வேண்டும். ஊறுகாய் குபேரருக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால் ஊறுகாய்களை ருசிப்பதற்காகவே குபேரன் வீட்டில் இருப்பர் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment