திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் பெற வழிபட வேண்டிய கோவில்:கற்பக விநாயகர் கோவில்.

திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் பெற வழிபட வேண்டிய கோவில்:

        திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் பெற வழிபட வேண்டிய கோவில் தான் கற்பக விநாயகர் கோவில்.

எங்கு உள்ளது:

       இந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் பட்டி என்ற
ஊரில் உள்ளது.


எப்படி செல்வது: 

              இக்கோவிலுக்கு சிவகங்கை மாவட்ட்டத்தில் உள்ள திருப்புத்தூர் என்ற ஊரில் இறங்கி காரைக்குடி செல்லும் சாலையில் பிள்ளையார் பட்டி என்ற
ஊர் உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:

         இத்திருக்கோவில் காலை ஆறு மணி முதல் பதினோரு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

மூலவர் பெயர்:

        இக்கோவிலில் உள்ள மூலவர் விநாயகர் ஆவர் . அவர் பெயர் கற்பக விநாயகர்.

ஸ்தல பெருமை:

      முருக பெருமானுக்கு எப்படி அறுபடை வீடு உள்ளதோ அதேபோல் விநாயகருக்கும் அறுபடை வீடு உள்ளது. இது ஐந்தாவது படை வீடாகும்.

கோவில் பெருமை:

       இந்த கோவிலில் விநாயகர் மூலவராக கருதப்படுகிறார். மேலும் இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி அன்று சுமார் பதினெட்டு படி அளவில் ராட்சத கொழுக்கட்டை நெய்வேத்தியம் செய்வது வழக்கம்.

வேண்டுதல்கள்:

         இந்த கோவிலில் திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் பெற அதிகமாக பக்தர்கள் வருகின்றனர். மேலும் இந்த கோவிலில்  பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய உடன் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்த்திரம் சாற்றியும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.

ஸ்தல விருக்ஷம்:

       இந்த கோவிலில் உள்ள ஸ்தல விருக்ஷம் மருத
மரம்.

சிரார்த்தம் பற்றிய தகவல்கள்


Image result for சிரார்த்தம் images


சிரார்த்தம் பற்றிய தகவல்கள் :

        சிரார்த்தம் எனப்படும் திவசம் என்பது இறந்தவர்களின் மன நிம்மதிக்காக செய்யப்படும் ஒன்றாகும். மேலும் இந்த சிரார்த்தம் என்பது வருடத்திற்கு ஒரு முறை பித்ருக்களுக்கு அளிக்கப்படும் உணவு ஆகும்.

பித்ரு:

        பித்ரு என்றால் இறந்தவர்களின் ஆன்மா என்பது பொருள்.

Image result for amavasai images

எப்போது செய்வது:

           இறந்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த பூலோகத்திற்கு வர இயலாது. அவர்களுக்கு அமாவாசை பவுர்ணமி  மற்றும் மஹாளய அம்மாவாசை மற்றும் அவர்களின் இறந்த திதி அன்று மட்டும் வந்து அவர்களுக்கு அளிக்கபடும் உணவு மனதார புசித்து வாழ்த்தி விட்டு செல்வர் என்பது ஐதீகம்.

தர்ப்பணம்:

     தர்ப்பணம் என்பது மாத மதம் கொடுப்பது ஆகும். தர்ப்பணம் என்பது காலை ஏழு மணிக்கு முன்பாக கொடுக்க வேண்டும். இந்த தர்ப்பணம் கொடுப்பவர்கள் காலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து காலை ஏழு மணிக்குள் கொடுக்க வேண்டும்.


Image result for எள் நீர்

 எள் நீர்:

        தர்ப்பணத்தில் கொடுக்கப்படும் எள் மற்றும் நீர் கலந்த கலவை பித்ருக்களின் அமிர்த உணவாக செல்கிறது.

     Image result for தர்ப்பை

தர்ப்பை:

         தர்ப்பணம் செய்யும் போது தர்ப்பை புல் எனப்படும் புல்லினை  பயன்படுத்த வேண்டும். ஏனெனில் தர்ப்பை புல்லில் மட்டுமே இறந்தவர்கள் ஒளி வடிவில் வந்து இருப்பதாக ஐதீகம்.

சுவாதேவி :

     சுவாதேவி எனப்படும் ஒரு தேவி தான் இறந்தவர்களின் ஆத்மாக்களை இந்த தர்ப்பை புல் மூலமும் நாம் கொடுக்கும் எள் மற்றும் நீர் மூலமும் அவர்களுக்கு கொடுத்து இந்த புள் மூலமாக மேல் லோகத்திற்கு அழைத்து செல்லப்படும் என்பது ஐதீகம்.


Image result for நதிகள்

நதிகள்:

   தர்ப்பணம் என்பது புண்ணிய நதிகளில் தான் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் முழு பலன் கிட்டும். புண்ணிய நதியில் செய்வதானால் அதிகாலை எழுந்து புண்ணிய நதியில் குளித்து விட்டு பின் அந்த நதியிலே தர்ப்பணம் கொடுக்க பித்துக்களின் ஆசி முழுவதுமாக கிடைக்கும்.

இறந்தவர்களின் திதி:

         ஒருவர் இறந்துவிட்டால் அவர்களின் திதி, நாள், கிழமை மற்றும் இறந்த நேரம் இவற்றை குறித்து கொண்டு வருடாவருடம் அந்த திதியில் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் கடன் சுமை, குடும்ப தகராறு நீங்கி வாழ்வில் முன்னேறலாம்.

அமாவாசை:

   பொதுவாக அமாவாசை , சூரிய கிரஹணம் மற்றும் சந்திர கிரஹணம் அன்று இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்திட அவர்களின் சத்தி மேலும் அதிகமாகும். அமாவாசை தினத்தில் யாரேனும் ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும். இது மிக முக்கிய ஒன்றாகும்.


Image result for தர்ப்பணம்

தர்ப்பணம்:

    ஒருவர் ஒரு வருடத்தில் சுமார் தொன்னூற்று ஆறு முறை தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணம் செய்யும் நாளில் வெங்காயம், பூண்டு, சோம்பு போன்ற வாசனை பொருட்களை சாப்பிட கூடாது. மாமிசம் சாப்பிட கூடாது.

குலதெய்வ வழிபாடும் அதன் பயன்களும்






குலதெய்வ வழிபாடும் அதன் பயன்களும்:

         குலதெய்வ வழிபாடு என்பது நம் முன்னோர்கள் முதல் தொன்று தொட்டு வரும் ஒரு சம்பிரதாயமாக கருதப்படுகிறது.

குலதெய்வம் என்பது:

        குலதெய்வம் என்பது நமது குடும்பத்தை தலைமுறை தலைமுறையாக காப்பாற்றும் தெய்வம் ஆகும். ஆதலால் தான் இதனை குலதெய்வம் என்று கூறுகின்றனர்.

Image result for குலதெய்வம் images

எதனால் குலதெய்வ வழிபாடு:

     குலதெய்வ வழிபாடு செய்வதால் கடன் தொல்லை , நோய் பிணி, குடும்ப சண்டை ஆகியவை அகலும். வருடம் ஒரு முறை குலதெய்வ வழிபாடு செய்வது மிக அவசியம்.

குலதெய்வம் உருவான முறை:

        ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலைமுறை தலைமுறையாக ஒரு தெய்வம் பாதுகாத்து வருவது வழக்கம் அப்படி உருவானது தான் குலதெய்வம் எனப்படும்.

        மேலும் பெண் சுமங்கலியாகவோ அல்லது குழந்தையாகவோ இறந்திருந்தால் அந்த பெண் அந்த குடும்பத்தை காப்பாள் என்பது ஐதீகம். அந்த பெண்ணையே குலதெய்வமாக சில குடும்பங்கள் வழிபட்டு வருகின்றனர்.

குலதெய்வ பூஜை :

       குலதெய்வ பூஜை என்பது முறையே நடப்பதில்லை . அந்த குடும்பத்தில் உள்ள முன்னோர்கள் அல்லது அந்த குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஆரம்பித்த ஒன்றாக உள்ளது. அவை அனைத்தும் அந்த குடும்பத்தில் உள்ளவர் மட்டுமே பங்கேற்க முடியும்.

Image result for குலதெய்வம் images

குலதெய்வ வழிபாடு:

       குலதெய்வ வழிபாட்டில் அதிகமாக வீட்டில் நடக்கும் அனைத்து விசேஷங்களுக்கும் குலதெய்வ வழிபாடு என்பது மிக முக்கியம். உதாரணமாக குழந்தை பிறந்தால், காத்து குத்துதல், வேலை கிடைத்தால் மற்றும் விஷேஷ தினங்களில் குல தெய்வ வழிபாடு நடத்தினால் செல்வம் சேரும் என்பது ஐதீகம்.


கடன் தொல்லையில் இருந்து விடுபட


கடன் தொல்லையில் இருந்து விடுபட:

       கடன் தொல்லையில் இருந்து விலக குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம்.

வீட்டில் இருக்க கூடாதவை:       

         கடன் பிரச்சனை இருந்தால் வீட்டில் சில பொருள்கள் இருக்க கூடாது. ஏனெனில் அவை வீட்டில் செல்வம் சேர விடாமல் தடுத்து விடும்.
அவைகள்

     புறாக்கூடு, உடைந்த கண்ணாடி, வாடிய மலர்கள், தேன்கூடு, சிலந்தி வலை ஆகையவைகளை முதலில் களைந்தாலே வீட்டில் செல்வம் சேரும் என்பது ஐதீகம்.

வீட்டில் இருக்க வேண்டியது :


Image result for golden fish images

         வீட்டில் மீன்கள் வளர்த்தால் செல்வம் சேரும்  . மீன்கள் மஹாவிஷ்ணுவின் அவதாரம் ஆகும். மீன்களை சிறிது நேரம் பார்த்தால் மனக்குழப்பம் அனைத்தும் நீங்கும் என்பது அறிவியல் ரீதியான உண்மையாகும்.

      மேலும் மீன்களில் கோல்டன் பிஷ் எனப்படும் வண்ண மீன்களை வளர்ப்பது மிகவும் பயன் தரும். மேலும் இந்த மீன்களை வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு என்ற திசைகளில் மட்டுமே வைக்க வேண்டும்.

விளக்கு ஏற்றும் முறை:
Image result for kamatchi lamp


       வீட்டில் அதிகமாக ஏற்றப்படும் விளக்கு காமாட்சி விளக்காக இருக்க வேண்டும். அதில் விளக்கு ஏற்றும் பொது டைமென்ட் கல்கண்டு போட்டு விளக்கு ஏற்றிட வேண்டும்.

ஊறுகாய்:

Image result for pickle images

        வீட்டில் விதவிதமான ஊறுகாய் வகைகளை அதிகம் வைத்திருக்க வேண்டும். ஊறுகாய் குபேரருக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால் ஊறுகாய்களை ருசிப்பதற்காகவே குபேரன் வீட்டில் இருப்பர் என்பது ஐதீகம்.