திருமண தடை நீங்கும் திருமணஞ்சேரி : Temple for marriage

திருமண தடை  நீங்கும் திருமணஞ்சேரி :

         திருமணஞ்சேரி என்னும்  திருத்தலம் என்பது திருமண தடையை நீக்க வல்லது. மேலும் இந்த புனித தலத்தில் பூஜை செய்து வழிபட்டால்  த்கிருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.  மேலும் இந்த கோவிலில்  அறுபதாம் ஆண்டு திருமண விழா  மற்றும் என்பதாம் ஆண்டு நிறைவு விழா ஆகியவை  கொண்டப்டபடுகிறது .



எங்கு உள்ளது:
      திருமணஞ்சேரி என்னும் ஊர் மயிலாடுதுறை அருகே உள்ள  குத்தாலத்தில்  இருண்டு ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து  நிறைய பேருந்துகள் உள்ளது.



நடை திறப்பு நேரம்:

       இத்திருக்கோவில் காலை ஏழு மணி முதல் ஒரு மணி வரையிலும் மாலை மூன்று முப்பது மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்து இருக்கும் .

ஈசன் மற்றும் அம்பாள் பெயர்:

     இந்த கோவிலில் வீற்றிரூக்கும்  ஈச பெருமானின் பெயர் அருள் வள்ளல் நாதர் , உதவாக நாதர் என்ற பெயரில் இறைவி பெயர் அருள்பாளிகிறார்.
    இந்த திருக்கோவிலில் திருநாவுக்கரசர்  மற்றும்
திருஞானசம்பந்தர் பதிகம் பாடியுள்ளார்.


 
திருதல வரலாறு:
   இந்த திருத்தலத்தில் பார்வதி அம்மன்
கையிலாயத்தில் சிவபெருமானை வேண்டி   மறுபடி சிவனை மனம் முடிக்க வேண்டும் என்றும் வேண்டினாள்.  சிவனும் அவ்வாறே வாக்களித்தார்.  உமா தேவி மகிழ்ச்சியுற்று இருந்தால். அப்போது பார்வதி சிறிது பிழை செய்தார். அதனை கண்டு  கோபம் கொண்ட சிவன் பார்வதி தேவிக்கு பசுவாக மாறும்படி சாபம் அளித்தார். துன்பத்தில் இருந்த பார்வதி தேவி சாப விமோசனம் பெறுவதற்கும் , தன்னை மணந்து கொள்ளவும் சிவனை வணங்கினாள் . அனால் சிவனோ நேரம் வரும்போது கூறுவதாக கூறினார்.

பசு உருவம் பார்வதி தேவி மட்டும் கொள்ளவில்லை . அவருடன் சேர்ந்து லக்ஷ்மி, சரஸ்வதி ஆகியோரும் பசு வடிவம் பெற்று இருந்தனர்.  இந்த மாடு மேய்க்கும் தொழிலை விஷ்ணு கொண்டிருந்தார்.  அப்போது அம்பிகை தனது பாலை சிவா பெருமானுக்கு பொழிந்து சிவனை குளிர செய்து சாப விமோசனம் பெற்று  தனது உண்மையான வடிவத்தை பெற்று திருமணம் பூண்டார்.

  அப்போது பாரத மகரிஷி என்னும் மு னிவர்  சிவனை வேண்டி யாகம்  நடத்தினர். அவர் நடத்திய யாகத்தின் முன் ஈசனுக்கும் அம்பிகைக்கும் திருமணம் நடந்தது.  ஆதலால் இங்கு திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை

கோவிலின் சிறப்பு:

     இந்த கோவிலில் திருமணம் ஆகாதவர்கள் வந்து அர்ச்சனை செய்தல் விவாகம் இனிது நிறைவேறும் என்பது அக்காலத்தில் இருந்து நடைபெற்று வரும் நம்பிக்கை. மேலும் இந்த கோவிலில் மிக சிறப்புகளில் ஒன்றாக  கருதபடுவது தோஷ நிவர்த்திகள் .  ஜாதகத்தில் ஏதேனும் ராகு தோஷம் இருந்தால் அவர்கள் இங்குள்ள ராகு பாகானுக்கு அபிஷேகம் செய்ய ராகு தோஷம் நீங்கும். மேலும் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் கூட இந்த தலத்தில் வந்து திருக்குளத்தில் நீராடி ரகு பாகவானை  மனதார வழிபட  விரையில் புத்திர பாக்கியம் கிட்டும்.
இக்கோவிலில் உள்ள ராகு பகவானுக்கு பால் என்றால் மிகவும் பிடித்த ஒன்றாகும். ஆகவே ராகு பாகானுக்கு பால் பொங்கல் பிரசாதமாக செய்து அதனை உண்டு வர புத்திர பாக்கியம் கிடும் என்பது ஆன்றோர் வாக்கு.

திருமணம் ஆக செய்ய வேண்டியவை:

     இந்த திருகோவிலில் திருமணம் ஆக இந்த கோவிலில் உள்ள சப்தகிரி தீர்த்தத்தில் முதலில் குளித்துவிட்டு , பிறகு மூலவராக உள்ள கல்யாண சுந்தரருக்கு மலை சற்ற வேண்டும். பிறகு  அர்ச்சனை செய்து அங்கு உள்ள தீபம் வைக்கப்படும் மேடயில் எண்ணி ஐந்து தீபம் ஏற்ற வேண்டும். பிறகு அங்கு திருமண மேடையில் வழங்கப்படும் எலுமிச்சம் பழத்தை உப்பு, சர்கரை  சேர்க்காமல்  தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். பிரசாதமாக வழங்கப்படும் மாலையை  பத்திரப்படுத்தி வீட்ற்கு சென்றதும் அதனை ஒரு முறை போட்டு இறைவனை மனதார வணங்க வேண்டும். பிறகு கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதமான விபூதி மற்றும் குங்குமத்தை தினமும் பயன்படுத்த வேண்டும்.

   மேலும் இந்த பத்திரபடுத்தபட்ட  மாலையானது  திருமணம் ஆனா உடனே இருவரும் வந்து கோவிலில் இட்டு அர்ச்சனை செய்து என்துதலை முடிக்க வேண்டும்.

கோவிலின்  தோற்றம் :

     இந்த கோவில் ஆனது ஐந்து கோபுரங்களை கொண்டது . இந்த கோவிலில் கணபதி, முருகன், லக்ஷ்மி, துர்கை  நந்தியம்பெருமான் ஆகியோர் காட்சி அழிகின்றனர். இந்த கோவிலில் தான் மன்மதன் கண் திறக்கும் காட்சி உள்ளது. உற்சவர் மூர்த்தி பிரகாரங்களில் உள்ளார். மேலும்  சிவ  பெருமானின்  கழுத்திற்கு மலையாக வந்து திருமணத்தை  நடத்தி வைத்த ஏழு சமுத்திரங்களும் ஒரே தீர்தகுலத்தில் உள்ளது.  இந்த கோவில் சோழ மண்டல கோயில் . திருப்பணி ஆகியவை மிக சிறப்பக நடைபெறும்.

திருமண தடையை நீக்கும் திருவீழிமிழலை : Thiruveezhimizhalai Temple

திருமண தடையை நீக்கும் திருவீழிமிழலைThiruveezhimizhalai Veezhinathar Temple

                   திருவீழிமிழலை கோவிலில் வீழிநாதர் என்னும் பெயரில் அருள்பாலிக்கிறார். இக்கோவில் தேவாரம் பாடிய .திருத்தலமாகும். மேலும் இந்த தலத்தில் வந்து   பூஜை செய்து இறைவனை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவருவது மட்டும் அல்லாமல் திருமண தடை நீங்கும்.





கோவிலுக்கு செல்லும் வழி :

      கும்பகோணத்தில் இருந்து தென்கரை என்னும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றால் கோவிலை சென்று அடையலாம். மேலும் பெறலாம் வழியிலும் நிறைய பேருந்துகள் இயக்கபடுகிறது .

நடை திறக்கும் நேரம் :

     இந்த    திருக்கோவில் ஆனது காலை ஆறு மணி முதல் பதினோரு மணி வரையிலும் மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரையிலும் உண்டு.

இறைவன் மற்றும்  இறைவி :

      இத்திருகோவிலின்  வீற்றிருக்கும்  சிவா பெருமானின் பெயர் வீழிநாதர்  மற்றும் அம்பாள் பெயர் சுந்தர குஜாம்பிகை . மேலும் இக்கோவிலில் முருகர், விநாயகர், பாதாள நந்தி தேவர் ஆகியோர் உள்ளனர்.

கோயிலில் சிறப்புகள் : 

     இந்த கோவிலில் வந்து தரிசனம்  செய்து  இறைவனை வழிபட்டால் குழந்தை பேரு நீங்கும், திருமணம் கைகூடும் , காரியசித்தி தரும்.
மேலும் இந்த தலத்தில்  தேவார திருபதிகம் பாடிய கோவில்இந்த ஊருக்கு இந்த பெயர் வர காரணம் வீழி செடிகள் எனப்படும் பலா மரம் . பலா மரம் நிறைய காணப்பட்டதால் இந்த கோவிலுக்கு வீ ழிமிழலை என்று பெயர் பெற்றதுஆதலால் இந்த கோயிலுக்கு தல விருக்ஷமாக  கருதபடுவது வீழி மரம் .

திருதல வரலாறு:

       இந்த கோவிலுக்கு பல வகையான வரலாறுகள் கூறப்படுகின்றனமுதலில் கூறப்படும் வரலாறாக விஷ்ணுவின் சக்கரம் சிதலமடைந்து காணப்பட்டது . மிகவும் வலிமை பொருந்திய சக்கரத்தை பெறுவதற்கு சிவ பெருமானை பூஜித்த  தலங்களில் இந்த தலம் மிகவும் பிரசித்தி பெற்றதுதிருவீழிமிழலை, திருப்பைஞ்ஞீலி, திருமாற்பேறு . பெருமாளுக்கு அரக்கனை அழிப்பதற்கு சக்கரம் தேவைபட்டது. அதனை வலிமை பொருந்தியதாக மாற்றுவதற்கு சிவபெருமானை  நாடினர்.அப்போது  சிவா பெருமான் ஆயிரம் தாமரை மலர்களால் பூஜை செய்ய வேண்டும் என்று கட்டளை இட்டார்அப்போது அதில் ஒன்று குறைந்து  காணப்பட்டு இருந்தது. இதனை அறியாத  விஷ்ணு பூஜையை  தொடங்கினர். முடிக்கும் பொது தொள்ளயிறது தொன்நூற்று ஒன்பது மலர்கள் மட்டுமே .காணப்பட்டது . அப்போது தனது கண்கலில் ஒரு கண்ணை எடுத்து பூஜை செய்தார். உடனே சிவபெருமான் மகிழ்ச்சி உற்று  சக்கராயுதம் வழங்கினர். அந்த திருகண்கள்  இன்றும் சிவா பெருமானின் பாதத்தில் உள்ளது மிக சிறப்பாக கருதபடுகிறது.

         இந்த தலத்திற்கு  மற்றொரு வரலாறாக கூறபடுவது காத்தியான என்ற ஒரு முனிவர் இருந்தார். அவர் தனக்கு குழந்தை பிரகைல்லை என்று மிகவும் தும்ப பட்டு  இருந்தார்.அப்போது கடுந்தவம் மேற்கொண்டார்.

அப்போது பாரவதி அம்மனே அந்த முனியாருகு குழந்தையாக பிறந்து வளர்த்து வந்தது. அந்த குழந்தைக்கு கார்த்தியாயினி என்ற பெயரிட்டு வளர்த்தார். அவள் பருவ வயதை எட்டியுடன் சிவ பெருமானையே திருமணம் செய்து கொள்ள விரும்பினர். உடனே சியா பெருமானும் அதற்கு  சம்மதித்தார். பிறகு திருமணகோலத்தில்  இங்கேயே தங்கி பாக்தருக்கு அருள் பாலிக்க வேண்டும் என்று  கூறினார். அதன் படியே இறைவன் காட்சி .அளித்தார்.

       அந்த காலத்தில் இந்த ஊரில் உள்ள ஒரு வேடன் இன மிழளைகுரும்பர் என்ற ஒருவர் தினமும் விளாம்பாழத்தை  அமுது படைத்து மகிழ்ந்தார். ஆருக்கு அஷ்டமசிதிகளை பெரும் வேண்டுதல் பெற வேண்டும் என்று விரும்பினர். இறைவனும் அவரின் அணைக்கு இறங்கிஅருள் புரிந்தார். இன்னும் அந்த விளாம்பழம் இறைவன் திருவடியில் உள்ளது மிகும் சிறப்பு.

           சம்பந்த  பெருமானும் , திருநாவுகரசரரும்  பல ஊர்களில் பதிகம் பாடீவிட்டு  இந்த கோவிலில் பல காலம் தங்கினர். அப்போது அந்த ஊரில் கடும் உணவு பட்றா குறை  வந்ததுஅபோது அதனை தீர்த்து வைக்க வேண்டி  இறைவனிடம் பதிகம் பாடி ஏந்தினர் . இறைவனும் வேண்டுதலை ஏற்று தினமும் ஒரு பொற்காசுகளை வழங்க உத்தரவு கூறினார்.  . அந்த தளத்தில் கொடுத்த படிகாசு பீடம் உள்ளது.

திருத்தலத்தின் கோவிலில் தோற்றம்:

        இந்த கோவிலில் முன் பெரிய தீர்த்தம் உள்ளது. தெற்கு கோபுர அசலில் விநாயகர், நடராஜர், பாதல நந்தி உள்ளது. நந்தியம் பெருமான் சிரசின் மீது முழு கோவில் அமைந்துள்ளதாக உள்ளது. இந்த கோவிலில் வெளியிலில்  மண்டபம் திருமண பந்தல்களோடு அமைந்துள்ளது.

வேண்டுதல்கள்:

       இந்த தலத்திற்கு  வரும் பக்தர்கள்  திருகுளத்தில் குளித்து சுவாமிக்கு புத்தாடை அணிவித்து அர்ச்சனை செய்து, அங்கு தரும் மலையை சூடினால் விரைவில் திருமணம் நடந்தேறும். பிறகு தம்பதியராக வந்து அர்ச்சனை செய்து நேர்த்தி கடனை நிறைவேற்றலாம்.